திங்கள், 23 அக்டோபர், 2017

மகிழ்ச்சியின் திறவுகோல்!
------------------------------------------------
1) நேற்று இரவு எழுத ஆரம்பித்து
இன்று காலை 6 மணிக்கு
அறிவியல் கட்டுரையை (தமிழில்) எழுதி முடித்தேன்.

2) துறை சார்ந்த ஒரு வழக்கில், பாதிக்கப்பட்ட ஒரு தோழருக்காக, டில்லி கார்ப்பொரேட்
அலுவலகத் தலைமைக்கு ஒரு மீளாய்வு மனு
(Revision) தயாரிக்க ஆரம்பித்து (இது ஆங்கிலத்தில்)
இன்று மாலை 4 மணிக்குத்தான் முடித்தேன்.
இடையில் ஒரு மணி நேரம் மட்டுமே தூக்கம்.

3) உழைப்பு மகிழ்வைத் தருகிறது. உழைப்பதற்கான
வாய்ப்புகள் அமைந்ததும் மகிழ்வைத் தருகிறது.

4) களைப்பாறும் பொருட்டு மூன்று மணி நேரம்
இசை கேட்டேன் (கர்நாடக இசை முதல் திரையிசை வரை).
**********************************************************************
பட விளக்கம்:
-----------------------
முதல் படம் ஒரு second order tensor, say,stress.
2ஆம் படம்: BSNL  கார்ப்பொரேட் அலுவலகம்
3ஆம் படம்:  நான் மதிக்கும் விரும்பும் ஆராதிக்கும்
கர்நாடக இசைப் பாடகி சாருலதா மணி.
---------------------------------------------------------------------------
தலையங்க விமர்சனக் கூட்டம்; 253ஆவது அமர்வு.
நாள்: ஞாயிறு 22/10/2017 மாலை 7 to 9 மணி.
இடம்: வங்கி ஊழியர் OBC சங்க அலுவலகம்,
கோடம்பாக்கம், சென்னை 24.
கூட்ட ஏற்பாடு: சோதி ராமலிங்கம், ஒருங்கிணைப்பாளர்.
--------------------------------------------------------------------------------------------

ஜெயேந்திரர் இந்தக் கருத்தைக் கூறியது உண்மை.
ஆனால் எல்லாக் கருத்தையும் பொதுவெளியில்
முன்வைப்பதை பெரியவா விரும்புவதில்லை.
பெரியவா அனுமதித்தால் மடத்து காரியஸ்தர்
சுந்தரேச அய்யர் அதற்கான இணைப்பை (link)
பகிரங்கப் படுத்துவார். பெரியவா கருத்து
சுதந்திரத்திற்காக குரல் கொடுப்பது உள்ளபடியே
வரவேற்கத் தக்கதுதானே.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக