done பூசலார் நாயனார்
திருநின்றவூரில் மனக்கோயில்
கட்டியது போல்
குமரி அனந்தனும்
பாரத மாதாவுக்கு மனக்கோயில் கட்டலாமே!
அத்வைதம் வெல்லுமே!
சேக்கிழாரின் பெரிய புராணத்தில் உள்ள
பூசலார் நாயனார் புராணத்தை வாசகர்கள்
படித்த பின்பு கருத்தைச் சொல்லலாமே!
பூசலாரின் மனக்கோயில் அத்வைதத்தை எப்படி என்பதற்கு
நடைமுறைப் படுத்துவது என்பதற்கு உதாரணம்.
========================================================
கந்து வட்டிக் கயவர்களை நடுநடுங்க வைத்து
மக்கள் நீதிமன்றம் மூலம் தண்டித்த
நக்சல்பாரிகளான மக்கள் யுத்தக் கட்சியினர்!
---------------------------------------------------------------------------------
சேக்ஸ்பியரின் வெனிஸ் வணிகன் (Merchant of Venice)
நாடகத்தை வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும்.
கந்து வட்டிக் கயவன் ஷைலாக் என்ற யூதன்
அந்த நாடகத்தின் கொடிய வில்லன். அந்தோனியோ
என்ற வணிகனுக்குக் கடன் கொடுத்து விட்டு,
கடனை அவன் திருப்பித் தராத நிலையில்,
அந்தோனியாவின் உடலில் இருந்து ஒரு பவுண்டு
சதையை அறுத்துக் கொடுக்க வேண்டும் என்று
கேட்ட கொடியவன் ஷைலாக்.
இந்த நாடகத்தில் இரக்கத்தைப் பற்றி (mercy)
சேக்ஸ்பியர் நிறையவே எழுதி இருப்பார். காலத்தை
வென்று நிற்கும் அந்த வரிகள் இன்றளவும்
நீதிமன்றங்களில் மேற்கோள் காட்டப் படுகின்றன.
காரல் மார்க்ஸ் தமது மூலதனம் நூலில்
இந்நாடகத்தைப் பற்றிக் குறிப்பிட்டு இருப்பார்.
அரபு நாட்டில் வட்டிச் சுரண்டல் மிகவும் அதிகமாக
இருந்தது. எனவே முகம்மது நபி வட்டித் தொழில்
கூடாது என்று முஸ்லிம்களுக்கு போதித்தார். ஆயினும்
முகம்மது நபியின் அறிவுரைக்கு இன்றளவும் பல
முஸ்லிம்கள் செவி சாய்ப்பதில்லை.
ஆக, வட்டித் தொழில் உலகளாவியது. உலக வங்கியோ
WTOவோ முனைந்து உலகமயம் (globalisation)
ஆக்காமலேயே, வட்டிச் சுரண்டல் பண்டு தொட்டே
உலகமயம் ஆகியிருந்தது. எனவே இந்தியாவிலும்
வட்டிச் சுரண்டலும் கந்துவட்டியும் ஏழை எளிய
மக்களை சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருந்தன.
நிலப் பிரபுத்துவ மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும்
சரி, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கவாதிகளின் ஆட்சிக்
காலத்திலும் சரி, பின்னர் சுதந்திர இந்தியாவில்
சோஷலிச நேரு பெருமகனாரின் ஆட்சிக்
காலத்திலும் சரி, கந்து வட்டிச் சுரண்டல் தங்கு
தடையின்றி நடந்து கொண்டு இருந்தது.
ஒருவனிடம் தேவைக்கு மிஞ்சி கொஞ்சம் பணம்
சேர்ந்து விட்டாலே, அந்தப் பணத்தை வட்டிக்கு
விடுவது என்பது இந்தியாவில் ஒரு தேசிய
கலாச்சாரமாகவே ஆகியிருந்தது. தமிழ்நாட்டில்
அத்தனை புதுப் பணக்காரனுக்கும் வட்டிக்கு
விடுவது ஒரு சுலபமான தொழிலாக இருந்தது.
வணிக முதலாளிகள் (Mercantile bourgeois) என்று
காரல் மார்க்ஸால் வகைப் படுத்தப் பட்டோரில்
பலரும் வட்டிக்காரர்களே. இந்தியாவின் பனியா
வகுப்பார், தமிழகத்தின் செட்டியார்கள், நகரத்தார்
ஆகியோரின் தொழில் வட்டித் தொழிலே.
நான் PUC படித்துக் கொண்டிருந்த போது. எங்கள்
ஊரில் யார் யாரிடம் கடன் வாங்கி இருந்தாலும்
எனக்கு அந்த விஷயம் முதலில் தெரிந்து விடும்.
இதற்குக் காரணம் புரோநோட்டு எழுத என்னைத்தான்
கூட்டிக் கொண்டு போவார்கள். நூறு ரூபாய்
கடனுக்கெல்லாம் ஒரு புரோநோட்டு கால்வாசிக்
காகிதத்தில் ( quarter sheet) எழுதும் வழக்கம் அப்போது
இருந்தது. நூறு ரூபாய் என்பது இப்போதைய
10,000 ரூபாய்க்குச் சமம்.
முதலாளியப் பொருளாதாரத்தில் வட்டி என்பது
அனுமதிக்கப்பட்ட ஒன்று. முதல் (principal) என்று
ஒன்று இருந்தால், வட்டி (interest) என்ற ஒன்று
இருக்கும் என்பதுதான் முதலாளியப் பொருளியல்.
வட்டி என்பது அனுமதிக்கப்பட்ட அளவில்
இருக்கும்போது, அது சமூகத்திற்குப்
பயன்படுகிறது. ஆனால் வட்டி என்பது சிட்ட வட்டி,
கந்து வட்டி, 10 வட்டி என்றெல்லாம் போகிறபோது
அது கொடிய சுரண்டல் ஆகி விடுகிறது. அது
சமூகத்தைக் கசக்கிப் பிழிந்து விடுகிறது.
சிறுநீரகத்தை விற்று, கடனைத் திரும்பிச் செலுத்த
வேண்டும் என்று வட்டிக்காரன் நிர்ப்பந்திக்கும்போது
அது சுரண்டலின் உச்சத்தைத் தொடுகிறது.
கந்து வட்டிக் கயவர்கள் அனைவரும் நாடெங்கும்
தங்களின் சுரண்டலைத் தங்கு தடையின்றி
நடத்திக் கொண்டே வந்தனர். அவர்களுக்கு
அரசு எந்திரத்தின் ஆசீர்வாதம் இருந்தது.
இந்திய வரலாற்றிலேயே கந்து வட்டிச் சுரண்டலின்
மீது முதல் சம்மட்டி அடியை அடித்தவர்கள்
நக்சல்பாரிப் புரட்சியாளர்களான மக்கள் யுத்தக்
கட்சியினர்தான். ஆந்திராவில் தெலுங்கானாவில்
தமிழகத்தின் தர்மபுரியில் கந்துவட்டிச் சுரண்டலை
முறியடித்தவர்கள் மக்கள் யுத்தக் கட்சியினரே.
ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் கந்துவட்டிச்
சுரண்டல்காரர்களைக் கைது செய்து மக்களின்
முன் நிறுத்தி, மக்கள் நீதிமன்றங்கள் (people's court)
மூலமாக அவர்களுக்கு தண்டனை விதித்து
அதை நடைமுறைப் படுத்தியவர்கள் மக்கள்
யுத்தக் கட்சியினரே (CPI ML Peoples war). மக்களின்
சகல கடன்களையும் ரத்து செய்து
புரோநோட்டுகளைத் தீவைத்துக் கொளுத்தியவர்கள்
இந்திய வரலாற்றில் மக்கள் யுத்தக் கட்சியினரே.
இந்தியாவெங்கும் செந்தளங்கள் உருவானால்தான்
கந்துவட்டிச் சுரண்டலை ஒழிக்க முடியும். அதுவரை
கந்து நீடிக்கும்.
***************************************************************.
எவன் ஒருவன் கனவு காணவில்லையோ
மற்றவர்களை கனவு காணத் தூண்டவில்லையோ
அவன் ஒருபோதும் புரட்சியாளன் ஆக முடியாது.
சாரு மஜூம்தார்.
வசந்தத்தின் இடிமுழக்கம் என்று சீனக் கம்யூனிஸ்ட்
கட்சியால் பாராட்டப்பட்ட நக்சல்பாரி ஆயுத எழுச்சியைத்
தோற்றுவித்த புரட்சியாளர் சாரு மஜூம்தார். இவர்
CPI ML கட்சியின் முதல் பொதுச் செயலாளர்.
புரட்சிக்கான நியாயமும் தேவையும் இந்தியாவில்
இன்று நேற்றல்ல, பல பத்தாண்டுகளாக இருந்து
கொண்டே இருக்கிறது. என்றாலும் புரட்சியைச்
சாத்தியப் படுத்த வேண்டுமென்றால். குறைந்த
பட்சமாக இரண்டு நிபந்தனைகள் பூர்த்தியாகி
இருக்க வேண்டும். 1) புரட்சிக்கான புறநிலமைகள்
(favourable objective conditions) கனிந்து இருக்க வேண்டும்
2) புரட்சியை நடத்துகிற அளவுக்கு அகநிலைச் சக்திகள்
(subjective forces) அதாவது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி
வலிமையாக இருக்க வேண்டும். இவ்விரண்டும்
பூர்த்தியானால் எப்போது வேண்டுமானாலும் புரட்சி
நடக்கும். பூர்த்தியாகவில்லை என்றால் ஒருபோதும்
புரட்சி நடக்காது.
**
தோழர் கிஷன்ஜி மாவோயிஸ்ட் தலைவர்தான்.
50 ஆண்டுகளில் புரட்சி ஏற்படலாம் என்பது அவரின்
கணிப்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக