வெள்ளி, 20 அக்டோபர், 2017

புராணப் பொய்மையான நரகாசுரன் கதையை
ஆரிய திராவிடப் போராகப் புனைந்த
பிரிட்டிஷ் காலனிய தாசர்களின் அடிமை மோகத்தை
அம்பலப் படுத்தி முறியடிப்போம்!
தீபாவளி பற்றிய கட்டுரை: பகுதி-2
-------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------
1) புராணப் பொய்மையான நரகாசுரன் கதை
அது தோன்றிய காலத்தில் ஆரிய திராவிடப்
போராக உருவகிக்கப் படவில்லை. எத்தனையோ
புராணக் கதைகளை பார்ப்பனியம் கற்பனையாக
உருவாக்கியது. அவற்றுள் ஒன்றுதான்
நரகாசுரன் கதையே தவிர, ஆரிய திராவிட
இன மோதலுக்கும் நரகாசுரன் கதைக்கும்
ஸ்நானப் பிராப்தி இருந்ததில்லை. இதை
வாசகர்கள் நினைவில் பதித்துக் கொள்ள வேண்டும்.

2) ஆயின், பின் எப்போது நரகாசுரன் கதை ஆரிய
திராவிட இன மோதலின் வெளிப்பாடாக மாறியது?
காமரூப நாட்டின் அரசனான நரகாசுரன் எப்போது
திராவிட அரசனாக மாறி தமிழ்நாட்டை ஆண்டான்?
எப்போது ஆரியத்தால் வீழ்ந்தான்? இந்தக் கதைகள்
எல்லாம்  எப்போது பிறந்தன? இந்தக் கதைகளை
யார் உருவாக்கினார்கள்? இதற்கு விடை காண்போம்.

4) கிபி 1757இல் நடந்த பிளாசிப் போரில் (battle of Plassey)
பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவில்
பிரிட்டிஷ் காலனியவாதிகளின் ஆட்சி தொடங்கியது.
இது 1947 வரை 190 ஆண்டுகள் நீடித்தது. மிகுந்த
பன்மைத்துவம் உடைய இந்தியக் குடிகளை
அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டிஷ் அரசு, இந்திய
மக்களைப் பல்வேறு வகையில் பிரித்து, பிரித்தாளும்
சூழ்ச்சி மூலமாகத்தான் ஆள முடிந்தது; ஆண்டது.

5) இயற்கையாகவே பூகோள ரீதியாக பெரிதும்
வேறுபட்டிருந்த வட இந்திய தென்னிந்திய மக்களை
ஆரிய  இனம், திராவிட இனம் என்று பிரிக்கும்
கோட்பாட்டு ரீதியான கருத்தாக்கங்களை
பிரிட்டிஷ் அறிவாளிப் பிரிவினர் வலிந்து புனைந்தனர்.

6) ஆரியப் படையெடுப்பு என்ற கோட்பாட்டை முதன்
முதலாக ஆங்கில காலனி ஆதிக்கவாதிகள்
உருவாக்கினார். வில்லியம் ஜோன்ஸ், கால்டுவெல் பாதிரியார்
ஆகிய இரு ஆங்கிலேய காலனி ஆதிக்கவாதிகள்
ஆரிய திராவிட இனக் கோட்பாட்டை
உருவாக்கினர். இருவருமே அறிவியலுக்கு எதிராக
மொழிக் குடும்பங்களை மனித இனமாக
வரையறுக்கும் பாரிய தவறைச் செய்தனர். பிரிட்டிஷ்
ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரத்திற்கு
உகந்த கோட்பாடுகளாக இவை இருந்தமையால்,
அவர்கள் இக்கற்பனைக் கோட்பாடுகளை
அரச அதிகாரத்தின் மூலம் மக்களிடம் எளிதாகப்
பரப்பினர்; மக்களை நம்ப வைத்தனர்.

7) இந்தியாவிலேயே ஆரிய திராவிடப் பகைமை குறித்து
ஒவ்வொரு நொடியிலும் பேசப்படும் இடம் தமிழ்நாடுதான்.
ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சான
கொள்கையே இதுதான். இந்தப் பொய்மையான
கொள்கையை திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள்
யாரும் உருவாக்கவில்லை.மாறாக இதை உருவாக்கியவர் தமிழகத்தில் வாழ்ந்த கால்டுவெல் பாதிரியார் ஆவார்.

8) பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கவாதிகள் உருவாக்கிய
போலியான ஆரிய திராவிட இனக் கோட்பாடு, பிரிட்டிஷ்
அரசு இயந்திரத்தின் மூலம் மக்களிடம் வேகமாகப்
பரப்பப் பட்டது. பிரிட்டிஷ் தாசர்கள் அனைவருக்கும்
இப்போலிக் கொள்கை ஒரு வலிமையான ஆயுதமாகப்
பயன்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்கள்
ஒன்று திரண்டு விடாமல் இருக்க, ஆரிய திராவிடக்
கொள்கை வலிமையானதொரு கருத்தியல்
ஆயுதமாக காலனிய ஆதிக்கவாதிகளுக்கும்
அவர்களின் தாசர்களுக்கும் பயன்பட்டது.   

9) ஆரிய திராவிடப் பொய்மையை மக்களின் மனதில்
வேர் பிடிக்க வைக்கும் பொருட்டு, தீபாவளிப்
பண்டிகையை தமிழகத்தில் இருந்த பிரிட்டிஷ்
காலனி தாசர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
இந்து மதப் புராணக் கதையான நரகாசுரன்
கதைக்குள் ஆரிய திராவிடக் கோட்பாட்டைப்
புகுத்திய பிரிட்டிஷ் தாசர்கள், நரகாசுரன் ஒரு
திராவிட மன்னன் என்ற புதிய கண்டுபிடிப்பைச்
செய்தார்கள்.

10) திராவிட நரகாசுரனை ஆரியனான கிருஷ்ணன்
வீழ்த்திய கதையே நரகாசுரன் கதை என்று தொடர்ந்து
பரப்புரை செய்தனர். இவ்வாறு பார்ப்பனியப்
புராணப் புரட்டை அம்பலப்படுத்தி முறியடிப்பதற்குப்
பதிலாக, அந்தப் புரட்டை அப்படியே ஏற்றுக் கொண்டு,
அதற்கு திராவிடப் புனுகு பூசினார்கள் பிரிட்டிஷ் தாசர்கள்.

11) பார்ப்பனியம் உருவாக்கிய நரகாசுரன் கதையில்
நரகாசுரன் திராவிடன் என்று எந்தக் குறிப்பும் இல்லை.
நரகாசுரன் கதை ஆரியர்களுக்கு மட்டுமானது என்றோ
அல்லது திராவிடர்களுக்கு மட்டுமானது என்றோ
பார்ப்பனியம் அக்கதையை உருவாக்கவில்லை.

12) பார்ப்பனியத்தின் இந்த இழிந்த புனைவை தலையில்
வைத்துக் கொண்டாடிய பிரிட்டிஷ் தாசர்கள்,
இக்கதையில் வரும் கற்பனைப் பாத்திரமான
நரகாசுரனுக்கு திராவிட மன்னனாக ஞானஸ்நானம்
செய்வித்தனர்.

13) புராணங்கள் கற்பனையானவை; வெறுத்து
ஒதுக்கத் தகுந்தவை என்ற புரட்சிகரமான கருத்தை
கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, புராணங்களில்
கூறப்படும் கதாபாத்திரங்கள் உண்மையில்
வாழ்ந்தவர்கள் என்று மக்களுக்கு எடுத்துரைத்து,
அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தவே நரகாசுரன்
ஒரு திராவிடன் என்ற பொய்மை பயன்படும்.

14) பார்ப்பனீயமும் போலிப்பகுத்தறிவு வாதமும்
ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. இதில் வியப்பதற்கு
ஒன்றுமில்லை. ஏனெனில் மக்களுக்கு அறிவுத் தெளிவு
ஏற்பட்டு விடக்கூடாது என்ற ஒற்றை நோக்கத்தில்
இரு சாராரும் இணைகின்றனர்.

15) இதிலும் ராஜனை மிஞ்சிய ராஜ விசுவாசியாக,
போலிப் பகுத்தறிவுவாதிகள், பார்ப்பனியத்தை
விஞ்சும் வகையில் நரகாசுரன் கதையை
மக்களிடம் தீவிரமாகப் பரப்பி வருகிறார்கள்.

16) கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன்,
விடுதலை ராசேந்திரன் போன்ற போலிப்
பகுத்தறிவுவாதிகளும், சீமான் போன்ற சிந்தனைக்
குள்ளர்களும் நரகாசுரனை திராவிட மன்னனாக,
உண்மையில் வாழ்ந்தவனாக சித்தரிப்பதன் மூலம்
பார்ப்பனிய சேவகர்களாக ஆகியுள்ளனர்.

17) திராவிட மார்க்சியவாதிகளாக எதிர்நிலை
பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள சில போலி
மார்க்சிய லெனினிஸ்டுகளும், தமுஎகச
அமைப்பில் மாறுவேடத்தில் இருக்கும் சில
திராவிட சிந்தனைக் குள்ளர்களும், போலிப்
பகுத்தறிவுவாதிகளின் திராவிட நரகாசுரன்
என்ற மலத்தை சந்தனமாக நெற்றியில் பூசிக்
கொண்டு திரிகின்றனர்.

18) நரகாசுரன் கதைக்கான கோட்பாட்டு நியாயத்தை
வழங்கும் ஆரியப் படையெடுப்புக் கொள்கை
(Aryan invasion theory) எவ்வளவு கலப்படமற்ற பொய்
என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்.
நடந்தது யவனப் படையெடுப்பே தவிர ஆரியப்
படையெடுப்பல்ல என்பதை அக்கட்டுரை
தெளிவுறுத்தும்.
-----------------------------------------------------------------------------------------
தொடரும்
************************************************************* 
.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக