திங்கள், 30 அக்டோபர், 2017

done புறநானூற்றில் கடவுள் மறுப்பு
இலக்கியத்தில் சார்வாகம்!
சங்க இலக்கியங்களுள் ஒன்றான புறநாநூறு தமிழர்களின் பண்பாடு வரலாறு போன்ற குறிப்புக்களை நமக்கு வழங்கி தமிழர்களின் வாழ்வியலை விதந்தோதும் நூல்களில் மிக மேன்மையான நூலாகும்.
இந்நூலில் பண்டைய சார்வாகர்களின் உலகாயதப் பொருள்முதல்வாதம் (உலகாயதம்=கடவுள் மறுப்புக் கொள்கை) ஆங்காங்கே இழையோடிருப்பதை நாம் படிக்க முடியும்!
புறநானூற்றில் இடம் பெற்றுள்ள 355ஆம் பாடல் வரிகள் "கடவுளும் இலவே!" என்று முடிகிறது!
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி,
ஒளிறு ஏந்து மருப்பின், களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!
விள‌க்க‌ம்:
பகைவர்களின் முன்னே அஞ்சாது நிற்பர்.
ஒளிரும் தந்தங்களை உடைய யானையை வீழ்த்துவர்
யானையை வீழ்த்தி இறந்த எம் முன்னோரின் நினைவைப் போற்றும் நடு கல்லைப் போற்றுவோமே
அன்றி, நெல் (அரிசி) போன்றவற்றைக் கொட்டி வழிபாடும் கடவுள் எங்களுக்கு இல்லை!
(மாங்குடிக் கிழார்)


சாதாவும் ஸ்பெஷலும்!
-----------------------------------------
விசிஷ்டாத்வைதம் என்றால் விசேஷமான அத்வைதம்
என்று பொருள். அதாவது சங்கரரின் அத்வைதம் சாதா
அத்வைதம் என்றால் ராமானுஜரின் அத்வைதம்
ஸ்பெஷல் அத்வைதம் ஆகும். அதாவது அது
சாதா தோசை. இது ஸ்பெஷல் தோசை.
**
இரண்டுமே கருத்துமுதல்வாதம்தான்.
கருத்துமுதல்வாதம் அல்ல பொருள்முதல்வாதமே
உலக மக்களுக்குப் பயன்படும் என்கிறோம்.
**

தமிழ் இலக்கணத்தில் "இனங்குறித்தல்" என்று ஒரு
விதி (rule) உண்டு. சோறு உண்டான் என்றால்
வெறுஞ்சோற்றை மட்டும் உண்டான் என்று பொருள்
அல்ல. சோற்றுடன் குழம்பு, கறி அனைத்தையுமே
உண்டான் என்ற பொருளையே "சோறு உண்டான்"
என்ற தொடர் குறிக்கும். அது போல, அத்வைதத்தின்
மீதான விமர்சனம் எல்லா வகை அத்வைதத்தையும்
குறிக்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக