புதன், 25 அக்டோபர், 2017

திமுகவினருக்கு கடவுள் நம்பிக்கை
எப்படி ஏற்பட்டது? இதன் உளவியல் என்ன?
---------------------------------------------------------------------------
ஆய்வுக் கட்டுரை, நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
1) இந்த உலகத்தில் எங்கு எந்தக் குழந்தை பிறந்தாலும்
அது கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் பிறக்கிறது.
குழந்தையின் உலகத்தில்  கடவுள் கிடையாது.

2) பெற்றோர்களும் உறவினர்களும் ஆசிரியர்களும்
மத நிறுவனங்களும் சமூகமுமே குழந்தைக்கு
கடவுளை அறிமுகம் செய்கிறார்கள்; கடவுள் மீது
நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள்.

3) ஆகப் பெரும்பாலான குழந்தைகள் வளர்ந்து
ஆளான பின்னரும் பெற்றோர்கள்உருவாக்கிய,
மத நிறுவனங்களும் சமூகமும் வளர்த்தெடுத்த
கடவுள் நம்பிக்கையுடன் இறுதி வரை
வாழ்ந்து மறைகிறார்கள். மிகச் சிலர் மட்டுமே
கடவுள் மீதான நம்பிக்கையை இழந்து கடவுள்
மறுப்பாளர்களாக மாறுகிறார்கள்.

4) ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கையோடு இருந்த
சிலர் பின்னாளில் கடவுள் மீது நம்பிக்கை இழக்கக் 
காரணம் என்ன? அறிவியல் கல்வி பெறுதலும்,
எதையும் கேள்விக்கு உள்ளாக்கி, ஆராய்ந்து,
நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மட்டுமே ஏற்றுக்
கொள்வது  என்கிற அறிவியல் மனப்பாங்குமே
(scientific temper) காரணம்.

5) ஒரு சமூகத்தில் அறிவியல் உளப்பாங்கை
ஏற்படுத்துவதிலும், கடவுள் மீது ஒரு விசாரணையை
நடத்தி, கடவுளின் இருப்பைக் கேள்விக்கு
உள்ளாக்குவதிலும்   நாத்திக இயக்கங்களுக்குப்
பெரும் பங்கு உண்டு.

6) தமிழகத்தில் கடவுள் நம்பிக்கை  உடையவர்கள்
99.9999999999 சதம் இருப்பதும், கடவுள் மறுப்பாளர்கள்
விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இருப்பதற்குமான
காரணங்களில் ஒன்று  இங்கு வலிமையானதும் அறிவியல்
பூர்வமானதுமான நாத்திக இயக்கங்கள் இல்லாமல்
போனதும்  ஆகும்.

7) 1950, 1960களில் அறிஞர் அண்ணா தலைமையிலான
திமுக நாத்திகப் பிரச்சாரத்தை சமூகத்தில்
முன்னெடுத்தது. திமுகவின் தலைவர்களில்
ஆகப் பெரும்பான்மையினர் நாத்திகர்களாக
இருந்தனர். திமுக வளர்ந்து வரும் ஒரு வெகுஜன
இயக்கம் என்பதால் நாத்திகக் கருத்துக்கள்
சமூகத்தில் பரவலாகச் சென்றடைந்தன. திமுகவின்
சட்ட திட்டத்தில்  கட்சியில் சேர்வதற்கு கடவுள் மறுப்பு
கட்டாயம் என்று எந்த விதியும் இல்லாதபோதும்
திமுகவின் நாத்திகப் பிரச்சாரம் தீவிரமாக இருந்தது.

8) அதே நேரத்தில், அறிவியல்பூர்வமான
பொருள்முதல்வாத நாத்திகத்தை திமுக
முன்னெடுக்கவில்லை. திமுகவினரில் ஒருவருக்குக் 
கூட, அறிஞர் அண்ணா உட்பட, பொருள்முதல்வாத
அறிமுகமே கிடையாது. அண்ணாவின் பேச்சு
எழுத்துகளில் பொருள்முதல்வாதம் பற்றிய ஒரு
வரி கூடக் கிடையாது.  

9) 1950களில், 1960களில் திமுக எதிர்க்கட்சியாக
இருந்தது. 1967இல் ஆட்சிக்கு வந்ததும் திமுக
நாத்திகத்தைக் கைவிடவில்லை என்றாலும்
 நாத்திகம் அடக்கி வாசிக்கப்பட்டது. 
பின்னர் திமுகவைப் பிளந்து மேனன் அதிமுகவை
ஆரம்பித்தபோது, முற்றிலுமாக நாத்திகத்தைக்
குழிதோண்டிப் புதைத்தார்.

10) ஆட்சிக்கு வந்த பிறகு, பல்வேறு காலக் கட்டங்களில்
நாத்திகம் மங்கிக் கொண்டே வந்து இறுதியில்
சென்று தேய்ந்து இறுதலுக்கு உள்ளானது.

11) இதன் இயல்பான அடுத்த கட்ட வளர்ச்சியாக
இந்து முன்னணியை விடத் தீவிரமான பக்தி
இயக்கமாக திமுக மாறிப்போனது.

12) இன்று இந்த 2017இல் திமுகவானது தொடர்ந்து
மத்தியிலும் மாநிலத்திலும் உள்ளாட்சிகளிலும்
பலகாலம்  ஆளுங்கட்சியாக இருந்த ஒரு கட்சி.
ஆளுங்கட்சி என்பது அரசு அதிகாரத்தைச்
சுவைக்கும் வாய்ப்புப் பெற்ற கட்சி. பல்வேறு
ஊழல்களில் பெயர் அடிபட்ட ஒரு கட்சி.

13) 1950,60களில் சலவைத் தொழிலாளர், சவரத்
தொழிலாளர், நெசவாளர், டெய்லரிங் தொழிலாளர்
என்று எளிய மக்களின் கட்சியாக இருந்தது திமுக.
இன்று திமுக  கல்வித் தந்தைகளின் கட்சி. பெரும்
பெரும் தொழிலதிபர்களின் கட்சி. கோடீஸ்வரர்களின்
கட்சி. திமுகவினர் பலரின் கதை rags to riches tale ஆகும்.
பல புதுப் பணக்காரர்களின் கட்சி திமுக.

14) இவர்களில் நியாயமான நேர்மையான முறையில்
பணம் சம்பாதித்தவர்கள் கொஞ்சப்பேர்தான்.
மற்றவர்களின் பணம் நேர்மையான சம்பாத்தியமா
என்ற கேள்விக்கு நான் விடையளிக்க விரும்பவில்லை.
அவர்களின் மனச்சாட்சியே பதில் சொல்லும்
இல்லையென்று.

15) நேர்மையாக உழைத்துச் சம்பாதிப்பவனுக்கு
ஒரு திமிர் இருக்கும். அவன் கடவுளுக்குப்  பயப்பட
வேண்டிய அவசியம் இல்லை. அவனிடம் மடியில்
கனம் இல்லை; எனவே கடவுளிடம் மண்டியிட வேண்டிய
அவசியம் இல்லை. இங்கு திமிர் என்பது தார்மீக
மனவலிமை.

16) ஆனால் நேர்மையற்ற முறையில் சம்பாதிப்பவன்,
ஊழல் மூலம் பணம் சேர்ப்பவன் ஆகிய ஆட்கள்
கடவுளுக்கு பயந்துதான் ஆக வேண்டும். எனவே
அவர்களுக்கு, முறையற்ற வழியில் பணம் சேர்ந்த
உடனேயே  கடவுள் நம்பிக்கையும் கூடவே வந்து விடும்.
காரணம் அவர்களிடம் தார்மீக வலிமை கிடையாது.

17) 1950,1960களின் திமுக தலைவனும் தொண்டனும்
நேர்மையாக இருந்தார்கள்; எனவே திமிரோடு
இருந்தார்கள். அவர்கள் கடவுளைத் துச்சமாக
மதித்தார்கள். இன்றைய திமுகவினரில்  எத்தனை
பேர் தார்மீக வலிமையுடன் உள்ளனர்? 

18) மேலும் திமுகவின் நாத்திகம் எளிதில்
நொறுங்கி விடக்கூடிய நாத்திகம். தத்துவ
வலிமையற்ற நாத்திகம்; வெற்று நாத்திகம்;
முட்டாள்தனமான நாத்திகம். எனவே அது
எளிதில் வீழ்ந்து விட்டது.

19) திருவண்ணாமலையில் பெளர்ணமியில் கிரிவலம்
போகிறவன் அத்தனை பயலும் புதுப் பணக்காரன்தான்.
இதில் 90 சதம் பேர் அரசியல்வாதிதான். சம்பாதித்தது
எல்லாமே ஊழல் பணம்தான்.

20) நான் அறிவியல் படித்தவன்; தொடர்ந்து படித்துக்
கொண்டே இருப்பவன். உழைத்துச் சம்பாதிபவன்;
தொழில் வரி முதல் வருமான வரி வரை அட்வான்ஸ்
டாக்ஸ் கட்டுபவன். நான் கடவுளுக்கு பயப்பட
வேண்டிய அவசியம் இல்லை. இல்லாத கடவுளிடம்
எனக்கு பயமில்லை.

21) அல்லா, கர்த்தர், சிவன், விஷ்ணு
உள்ளிட்ட எல்லாக் கடவுள்களையும் என்னுடைய
ஆசனத் துவாரத்தில் இருந்து வெளியேறுகிற
கழிவை விடக் கேவலமாக மதிப்பதற்குரிய
அறிவும் தார்மீக பலமும் எனக்கு உண்டு. எனவே
நான் நிரந்தர நாத்திகனாக இருக்கிறேன். அணுவளவு
கூட சலனமோ ஊசலாட்டமோ இல்லாமல் தெளிந்த
நாத்திகனாக இருக்கிறேன். என்னுடைய 11 வயதில்
நாத்திகனான நான் இன்றும் நாத்திகனாக நீடிக்கிறேன்;
என்றும் நீடிப்பேன்.

22) எந்த ஒரு திமுககாரனாவது  இப்படி நெஞ்சை
நிமிர்த்திச் சொல்ல முடியுமா? ஓரிருவரைத் தவிர.
***************************************************************  
பின்குறிப்பு:
--------------------------
கோடிக்கணக்கான மக்களுக்கு எப்படி கடவுள் நம்பிக்கை
ஏற்பட்டது என்பது பற்றி இங்கு எழுதவில்லை. எப்போதும்
நாத்திகப் பிரச்சாரத்தை கட்சித் தலைமை முதல்
கடைசித் தொண்டன் வரை பேசிக் கொண்டிருந்த
திமுக இன்று பக்தி இயக்கத்தில் மூழ்கித் திளைப்பது
எப்படி என்று ஆராய்கிறோம். இதற்கான காரணங்கள்:
1) தத்துவ வலிமையற்ற பொருள்முதல்வாதமாற்ற
நாத்திகம் 2) அன்றாடங் காய்ச்சிகளின் கட்சியாக
திமுக இருந்தபோது நாத்திகம் வெகுவாக
கட்சியினரைப் பற்றிக் கொண்டது. ஆனால்
பணக்காரர்களின் கட்சியாக திமுக மாறியபோது,
நாத்திகம் எடுபடவில்லை. 3) ஊழல், மோசடி, முறைகேடு
மூலம் நேர்மையற்ற முறையில் பணம் சேர்க்கும்போது,
அதை பாதுகாக்க வேண்டி கடவுள் நம்பிக்கை
ஏற்படுகிறது. திமுக விஷயத்தில் இதுதான் நடந்தது.
======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக