ஞாயிறு, 29 அக்டோபர், 2017

.
நிலாவில் ஈர்ப்பு எவ்வளவு?
சிறுவன் ஜெயித்ததின் ரகசியம்! (விடையும் விளக்கமும்)
-------------------------------------------------------------------------------------------------------
பூமியின் ஈர்ப்பு (acceleration due to gravity) 9.8 மீ/second squared.
நிலாவின் ஈர்ப்பு= 1.622 meter/second squared. அதாவது நிலவின்
ஈர்ப்பு பூமியின் ஈர்ப்பை விட 6 மடங்கு குறைவு. ஈர்ப்பு
குறைவு என்பதால், அதிக உயரம் குதிக்க முடியும்.
கூடைப்பந்தின் வளையம் 10 அடி உயரத்தில் இருக்கும்.
பூமியில் ஈர்ப்பு அதிகம் என்பதால், 2 அடி உயரமுள்ள
சிறுவனால் 10 அடி உயரத்துக்கு எம்பிக் குதித்து
வளையத்திற்குள் பந்தைப் போட  முடியாது.
**
ஆனால் நிலாவில் அதே சிறுவனால் சுலபமாக 10 அடி
உயரத்திற்கு எம்பிக் குதிக்க முடியும். எனவே நிலாவில்
சிறுவனும் கூடைப்பந்து விளையாட முடியும்.
**
சிறுவன் எப்படி ஜெயித்தான்? சிறுவன் குதித்தபோது,
சரியாக 10 அடி உயரத்திற்குச் சற்று மேலே குதித்தான்.
அதனால் வளையம் அழகாக கைக்கு கிட்டியது.
பணத்தைப் போட்டான்; ஜெயித்தான்.
**
பெரிய ஆளால் ஏன் ஜெயிக்க முடியவில்லை?
பெரிய ஆள் குதித்தபோது 10 அடி உயரத்தை விட
மிகவும் அதிகமான உயரத்தை அடைந்து விட்டபடியால்,
(உதாரணமாக 30 அடி) அங்கிருந்து சரியாக வளையத்துக்குள் பந்தைப்
போட  முடியாமல் போனது. பந்து வளையத்திற்குள்
விழாமல் வெளியே விழுந்து விட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக