done அத்வைதம்
பின்நவீனத்துவமா?
பின்நவீனத்துவம் என்பது சமகாலத்திய
ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கலுக்கு (globalisation)
ஆதரவாகப் பயன்படும் தத்துவம். மார்க்சியத்துக்கு
எதிராக நிறுத்தப்படும் தத்துவம். மார்க்சியத்திற்கு
கணிசமான சேதாரத்தை ஏற்படுத்திய தத்துவம்.
ஆனால் அத்வைதம் அப்படியல்ல. அது சமகால
ஏகாதிபத்தியத்திற்கு பயன்பட்டதற்கான ஆதாரம்
எதுவும் இல்லை. மார்க்சியத்திற்கு எந்த விதத்திலும்
அத்வைதம் சவாலாக விளங்க முடியாது.
விடுதலை இறையியல் (Liberation Theology) என்பது
ஏகாதிபத்தியத்தாலும் கிறித்துவப் பாதிரியார்களாலும்
உருவாக்கப்பட்டு மார்க்சியத்தை வீழ்த்தும்
நோக்குடன் அறிமுகப் படுத்தப் பட்டது. இது
இந்தியா, தமிழகம் உட்பட உலகெங்கும்
பரீட்சிக்கப் பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில்
இன்றும் செயல்படுத்தப் பட்டது. இதை கிறிஸ்துவ
மார்க்சியம் என்ற கயமைத்தனமான பெயரால்
ஏகாதிபத்தியம் அழைக்கிறது. விடுதலை இறையியல்
என்பது மார்க்சியத்திற்கு .எதிரானது. வெட்டி
வீழ்த்தப்பட வேண்டிய ஒன்று.
தத்துவம் என்பது எவரின் மடியிலும் தவழும் குழந்தை.
பயன்படுத்துகிறவர்களைப் பொறுத்து எந்தத்
தத்துவமும் எந்த முகாமுக்கும் பயன்படும். காரல்
மார்க்சின் சோஷலிஸத் தத்துவத்தை நேரு காலத்திய
காங்கிரஸ் பயன்படுத்தியது என்பது வரலாறு. காகிதப்பூ
மனக்காது, காங்கிரசின் சோஷலிசம் இனிக்காது என்று
அன்று காங்கிரசின் சோஷலிசத்தை திமுக எதிர்த்தது.
எந்தத் தத்துவத்தையும் எவரும் எந்த நோக்கத்துக்கும்
பயன்படுத்தலாம். அதற்கெல்லாம் இடமளிப்பதுதான்
தத்துவம்.
பாஜக ஆர் எஸ் எஸ் முன்வைக்கும் இந்துத்துவம் என்பது
தீவிரமான செயல்பாட்டைக் கோருவது. அத்வைதம்
ஒரு செயலுறுத்தும் தத்துவமே அல்ல. It is very passive.
எனவே இந்துத்துவ சக்திகளுக்கு அத்வைதத்தை
தற்போது தங்களின் நலன்களுக்கு பயன்படுத்தும்
திட்டம் இல்லை.
------------------------------------------------------------
1) ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலைப் படிக்கவும்
அது அத்வைதக் கருத்துக்கள் அடங்கிய நாவல்.
2) கிறிஸ்துவ வெள்ளை ஏகாதிபத்தியத் சுரண்டலை
எதிர்ப்பதில் பரமஹம்சர் விவேகானந்தருக்கு அத்வைதம்
பயன்பட்டது.
3) ஏகாதிபத்தயங்களுக்கு அத்வைதம் தேவைப்படவில்லை
தற்போது. தேவை ஏற்பட்டால் பயன்படுத்துவர்.
4) தத்துவம் என்பது எவர் மடியிலும் தவழும் குழந்தை.
5) அரவிந்தர், நாரயண குரு அத்வைதிகள். சமூக
சீர்திருத்தத்திற்கு அத்வைதம் பயன்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக