செவ்வாய், 31 அக்டோபர், 2017

done (17) ராமசாமி இஸ்மாயில் ஆக மாட்டார்!
அத்வைதம் மார்க்சியம் ஆகாது!
--------------------------------------------------
3) ராமசாமி என்பவர் ராமசாமிதான். அவரை
இஸ்மாயில் என்று கூறுவது ஆள்மாறாட்டம்
(impersonation) ஆகும். இதைப்போல, அத்வைதத்தை
பொருள்முதல்வாதம் என்று கூறுவதும்
ஆள்மாறாட்டமே.

4) ஏனெனில் அத்வைதம் ஒரு  பொருள்மறுப்புத்
தத்துவம் ஆகும் (immaterialism)  பொருளை மறுக்கும்
தத்துவத்தை எடுத்துக் கொண்டு, அது பொருளை
முதன்மைப் படுத்தும் தத்துவமான  பொருள்முதல்வாதம்
என்று கூறுவது ஆள்மாறாட்டம் போன்றதுதான்.

5) ஒன்றை வேறொன்றாகக் காட்டுவது இமாலயத்
தவறு  ஆகும். ஒன்றின் அடிப்படையையே தகர்க்கும்
பாரிய தவறு ஆகும்.ஒன்றின் தனித்தன்மையையே
அழிக்கும் அடாத செயலாகும்.

6) எனவேதான் மானுட சமூகம் மொத்தத்திலும்
ஒன்றை மற்றொன்றாகக் காட்டுவது தடை செய்யப்
பட்டுள்ளது. சட்டங்கள் அதைத் தடுக்கின்றன.
ஆள் மாறாட்டம், கள்ளக் கையெழுத்து போன்றவை
எல்லாம் (impersonation, forgery etc) குற்றங்கள் என்று
சட்டம் தடுக்கிறது. காரணம் இவை ஒன்றை
மற்றொன்றாகக் காட்டி விஷயங்களின் தனித்
தன்மையை அழிப்பவை. 

7) இன்னும் ஒரு எளிய உதாரணம் பார்ப்போம்.
சீட்டுக் கட்டில் உள்ள இஸ்பேட் ராஜாவை
இஸ்பேட் ராஜா என்றுதான் சொல்ல வேண்டும்.
அவரை டயமண்ட் ராஜா என்று சொல்வது
ஆள்மாறாட்டம் ஆகும்.

8) உவமை என்பது உணர்த்த வல்லது; உணர
எளியது. புரிந்து கொள்ளக் கடினமான கருத்தையும்
எளிதாகப் புரிய வைக்க உவமைகள் கையாளப்
படுகின்றன. இது தமிழ் மரபு. போல, போன்ற
ஆகியவை உவம உறுப்புகள். மேற்கூறிய
உவமைகள் மூலம் அத்வைதத்தை
பொருள்முதல்வாதம் என்று கூறுவது
எப்பேர்ப்பட்ட  பித்தலாட்டம் என்று உணரலாம்.

(9) அயன் ராண்டின் தத்துவத்தில் A is A என்ற
கோட்பாடு உண்டு. A என்பது A தான்,
B அல்ல என்பதே இது.  அயன் ராண்டின்
சொற்களில்: "A is  A. facts are facts and things are what
they are". ஒன்றை மற்றொன்றாகக் சுட்டுவதை
இந்த மொத்த உலகிலும் எவரும் ஏற்றுக்
கொள்வதில்லை.

10)உணவு என்பது வேறு; மலம் என்பது வேறு.
பொருள்முதல்வாதம் என்பது உணவு. அத்வைதம்
என்பது மலம். மலத்தை உணவாகக் காட்டலாமா?
அத்வைதத்தைப் பொருள்முதல்வாதமாகக் காட்டி
மக்களை ஏமாற்றலாமா?

11) தத்துவத்தில் இந்த ஆள்மாறாட்டத்தை
அனுமதிக்க முடியாது.ஒவ்வொரு தத்துவமும்
தனித்தன்மை உடையது. அத்வைதத்தை
பொருள்முதல்வாதமாகக் காட்டுவது
பிறழ்புரிதலை ஏற்படுத்தும். இது தத்துவார்த்த
மோசடி ஆகும்.

12) பிறழ் புரிதலின் அடிப்படையில் எழுந்துள்ள
எதிர்வினைகளில் சொல்லப்பட்ட ஒவ்வொரு
அம்சத்துக்கும் பதில் கூறுவது (point to point rebuttal)
சாத்தியமில்லை.அது தேவையற்றதும் கூட.

(14) எனினும் இதில் வருந்துவதற்கு ஒன்றுமில்லை.
தமிழ்ச் சமூகத்தில் தத்துவக் கல்வி அதன் குழந்தைப் பருவத்தில்தான் இன்னும் இருக்கிறது என்ற
உண்மையையே இது உணர்த்துகிறது.
****************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக