வியாழன், 19 அக்டோபர், 2017

முற்காலத்தில் தீபாவளி என்பது ஒருநாள்
மட்டும் கொண்டாடப்படும் பண்டிகையாக
இருக்கவில்லை. சொல்லப்போனால் அது பல
நாட்கள் நீடித்த ஒரு வேளாண் செயல்பாடு.
பல நாள் (குறைந்தது 15, 20 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை)
நீடிக்கும் ஒரு செயல்பாட்டை சலிப்பின்றித் தொடர
வேண்டுமானால், அது ஒரு கொண்டாட்டமாக
மாற்றப்பட வேண்டும். எனவே பண்டைய வேளாண்
சமூகம் அதை ஒரு கொண்டாட்டமாக மாற்றியது.
காலப்போக்கில் வேளாண் சமூகம் மாறி, முதலாளித்துவச்
சமூக மாற்றம் ஏற்பட்டபோது, அது ஒரு நாள்
பண்டிகையாக மாறி விட்டது.
**
1) வேளாண் செயல்பாடு 2) கொண்டாட்டம் 3) பண்டிகை
என்னும் இந்த மூன்று கட்டங்களில் கணிசமான காலம்
உறைந்து கிடக்கிறது. மக்களின் கொண்டாட்டங்களையே
மதங்கள் அபகரித்துக் கொள்கின்றன. அவ்வாறு
மதங்கள் அபகரித்துக் கொள்ளும்போது, பலநாள்
கொண்டாட்டங்கள் ஓரிரு நாட்கள் என்ற அளவில்
சுருங்குகின்றன. பின்னர் ஒரு குறிப்பிட்ட நாளைத்
தேர்ந்து அதையே பண்டிகை நாளாக மதம் அறிவிக்கிறது.
எனவே இன்று தீபாவளி என்பது ஒருநாள் பண்டிகையாக
ஆகிவிட்டது.
**
மக்களே வரலாற்றைப் படைக்கிறார்கள் என்கிறது
மார்க்சியம். மாதங்கள் வரலாற்றைப் படைப்பதில்லை.

சங்க காலத்தில் வேளாண்மை இருந்தது. உணவுப்பொருள்
உற்பத்தி இல்லாமல் இருக்குமானால், சங்க கால
மக்கள் எதை உண்டு இருப்பார்கள்? பொற்காசுகளையா
உண்டார்கள்? வேளாண்மை சங்க காலத்தில்
உறுதியாக இருந்தது. கங்கைச் சமவெளி போல
பெரும் உபரி வேளாண்மை மூலம் கிட்டாவிடினும்
உணவுத் தேவையை  நிறைவு செய்யும் அளவு
வேளாண்மை இருந்தது.

 சங்க காலத்தில் மருதத்திணை வாழ்க்கை இல்லையா?
மருதம் என்பது வேளாண்மை வாழ்க்கைதானே!

குறிஞ்சி நிலத்து இனக்குழுச் சமூகம் வேட்டுவச்
சமூகமாகவும், முல்லை நிலத்து இனக்குழுச் சமூகம்
கால்நடை வளர்ப்புச் சமூகமாகவும், மருத நிலத்து
இனக்குழுச் சமூகம் வேளாண் சமூகமாகவும்
இருந்தன.

நிலவுடைமைச் சமூக அமைப்பு ஏற்படும் வரை,
இனக்குழுச் சமூக அமைப்பே நிலவியது. இனக்குழுச்
சமூகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியே நிலப்பிரபுத்துவ
சமூக அமைப்பு. பல்வேறு இனக்குழுக்கள் ஒன்றிணைந்து
பெரும் பேரரசுகள் உருவாகின்றன. அவ்வாறு பெரும் பெரும்
பேரரசுகள் உருவாகும் வரை இனக்குழுச் சமூகமே
நீடிக்கும். இதுதான் மார்க்சியம்.
   
 

மார்க்சிய அடிப்படையிலான சமூக அமைப்பு
மாற்றத்தைப் பற்றியே இக்கட்டுரை கூறுகிறது.
வேறு பார்வைகளான முதலாளிய குட்டி முதலாளியப் பார்வைகளில்
ஆயிரம் தவறுகள் இருக்கும். அவற்றைப்
பொருட்படுத்த இயலாது.
 
மகட்கொடை என்பது இக்கட்டுரையின் பேசுபொருள்
அல்ல. இக்கட்டுரையின் பேசுபொருளும் சாரமும்
இதுதான்: 1) வேளாண் குடிகளின் கொண்டாட்டமே
தீபாவளி 2) நரகாசுரன் கதை ஓர் இழிந்த பொய்.அது
பிற்காலத்திய இடைச்செருகல். நரகாசுரன் கதையையே
எல்லோரும் தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிவதால்,
அதை இக்கட்டுரை தோலுரிக்கிறது. இதுதான்
கட்டுரையின் சாரப்பொருள். மகட்கொடை குறித்து
இங்கு விவாதிக்க வேண்டிய எத்தகைய அவசியமும்
ஏற்படவில்லை என்பதைக் கருத்தில் கொள்க.
கட்டுரையின் வரம்புக்கு அப்பாற்பட்ட பொருளில்
விவாதம் இச்சமயத்தில் தேவையற்றது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக