செவ்வாய், 17 அக்டோபர், 2017

சங்கர மடத்துக் காரர்கள் அத்வைதிகள் அல்லர் என்பது தங்களுக்குத் தெரியும். இந்தியக் கம்யூனிஸ்ட்களின் அரசியலும் கம்யூனிசம் அல்ல.
உறவு பாலா அத்வைதத்தைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார் என்று நான் சொல்வதில்லை. அத்வைதம் முதலாளித்துவ உற்பத்தியை எங்கே எப்படி 
ஆதரிக்கிறது என்றக் கேள்வியை முன் வைக்கிறேன். கருத்து முதல்வாதம் மனித சமுதாயத்திற்குத் தேவையே இல்லையா? உயிர் கருத்தா பொருளா ? உயிரற்ற ஒன்றிலிருந்து உயிர் உருவாகும் என்பது நிரூபிக்கப் படவில்லை, அது நிரூபிக்கப்படும் வரை அதை உண்மை என்று ஏற்க முடியாது. ஆராய்ச்சிக்குரியது. என்று சொல்கிறேன். அத்வைதி போக நினைக்கும் ஊரும் மார்க்கீசியர் போக நினைக்கும் ஊரும் ஒன்றுதான். வாகனம்தான் வேறு. இதுதான் எனது புரிதல். இந்த இரண்டு வாகனத்தையும் விட்டு விட்டுப் புதிய வாகனத்திலும் போகலாம் என்பது என் கருத்து. வாகனத்தை வசதி, வேகம், பாதுகாப்பு போன்றவற்றைக் கொண்டுதான் தீர்மானிக்கனும். லெனின் பயன்படுத்தியது மாவோ பயன்படுத்தியதற்காக அல்ல. மேலும் லெனின் மாவோ போக வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர்ந்தவர்களும் அல்லர்.

பத்ம சிவ அசோகன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக