செவ்வாய், 24 அக்டோபர், 2017

கந்து வட்டியும் கம்யூனிஸ்டுகளும்!
-----------------------------------------------------------------
இந்தியாவைப் போன்றதுதான் சீனாவும். புரட்சிக்கு
முந்திய சீனாவில் கந்து வட்டி போன்ற வட்டிச்
சுரண்டல்கள் உண்டு. புரட்சிக்குப் பின் கம்யூனிஸ்டுகள்
அதிகாரத்தைக் கைப்பற்றிய கொஞ்ச நாட்களிலேயே,
ஒவ்வொரு ஊரிலும் உள்ள கந்து வட்டிக்காரர்களை
சென்னை மக்கள் விடுதலைப் படையினர் தூக்கிலிட்டனர்.
ஊர் மக்கள் முன்னிலையில் கந்து வட்டிக்கயவர்கள்
பகிரங்கமாகத் தூக்கில் இடப்பட்டனர்.

கம்யூனிஸ்டுகள் கந்து வட்டி பற்றி அக்கறை
கொள்கிறார்கள். பாட்டாளி வர்க்க சர்வதேச கீதம்
என்ற ஒன்று கம்யூனிஸ்டுகளிடம் உண்டு. அதில்
எதிர்கால கம்யூனிச சமுதாயத்தில், கந்துவட்டி
ஒழிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையை
மக்களுக்குத் தரும் பாடல் வரி உண்டு.

"நாளை எண்ணி வட்டி சேர்க்கும்
ஞமலிகட்கு இங்கு இடமில்லை
நாம் உணர்த்தும் நீதியை
மறுப்பவர்க்கு இங்கு இடமில்லை" 
இவைதான் புகழ்பெற்ற அந்த வரிகள்.

இந்தியச் சட்டங்கள் மற்றும் இந்திய நீதிபரிபாலன
முறை என்பவை குற்றவாளிகளுக்கு சுகபோகத்தை
உறுதி செய்வன. கந்துவட்டிக் கயவர்களை கைது
செய்து சிறையில் அடைத்தாலும் ஒரு வாரத்தில்
ஜாமீனில் வந்து விடுவார்கள். மேலும் தீர்ப்பை
விலைக்கு வாங்கி விடுவார்கள்.

எனவே இந்தியச் சட்டம் நீதி ஆகியவற்றால் கந்து
வட்டிக் கயவனின் மயிரைக் கூடப் புடுங்க முடியாது.

நெல்லை மாவட்டத்தில் தேவமார் சாதியினர்
கந்து வட்டித் தொழிலில் கொடி கட்டிப் பறக்கின்றனர்.
மற்ற சாதியினரிலும் கந்துவட்டிக் கயவர்கள் உண்டு.
எனினும் தேவமார்களுக்கு உகந்த தொழிலாக
கந்துவட்டித் தொழில் பார்க்கப் படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு அரசியல்
கட்சியிலும் கிளைச் செயலாளர், பகுதிச் செயலாளர்,
ஒன்றியச் செயலாளர், மாவட்டச் செயலாளர் என்று
எல்லாப் பதவிகளிலும் தேவமார்களே இருக்கும்
நிலையில், கந்துவட்டிச் சுரண்டலை ஒருநாளும்
ஒழிக்க முடியாது. இது நிலவுகிற ஒரு சமூக
யதார்த்தம் ஆகும்.

தொழிற்சங்கம் நடத்துபவர்கள் கந்துவட்டிக்
கயவர்களை எதிர்த்துப் போராட நேர்வது உண்டு.
சம்பளம் வாங்கிக் கொண்டு வரும்போதே, கந்து
வட்டிக்காரர்கள், வட்டித் தொகையைப் பிடுங்கிய 
பிறகுதான் தொழிலாளியை அனுப்புவார்கள்.
நேரடியாக தொழிலாளியின் கையில் ரொக்கமாக
சம்பளத்தைக் கொடுக்கும் வழக்கம் முடிவுக்கு
வந்து, வங்கிக் கணக்கில் சம்பளம் என்ற
நடைமுறை வந்த பிறகே பாதிக்கப்பட்ட
தொழிலாளிக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்தது. **********************************************************        
பழமைவாதப் பன்றிகளும் பின்நவீனத்துவக்
கழுதைகளும் விஜய் டிவி
நிகழ்ச்சியை நிறுத்தியது நல்லதே.
பின்நவீனத்துவம் கொள்கையற்ற பின்நவீனத்துவம்
 =====================
கடன் வாங்கும்போது இனிக்குது!
திருப்பிக் கொடுக்கணும்னா கசக்குதோ!
என்று கோபப் படுகிறார் ஜெயேந்திரர்!

அதிமுக திமுக காங் பாஜக பாமக விடுதலைச்
சிறுத்தை போலிக் கம்யூனிஸ்டுகள் என்று
எல்லாக் கட்சிகளிலும்
கந்து வட்டிக் கயவர்கள் உண்டு.

கந்துவட்டிக் கயவர்களை எதிர்கொள்ளாமல்
தொழிற்சங்கம் நடத்த முடியுமா? 35 ஆண்டு கால
தொழிற்சங்க அனுபத்தில் கந்துவட்டிக் கயமையை
எதிர்கொண்டு முறியடித்த அனுபவம் உண்டு.
போலிக் கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்கங்களில்
கூட கந்துவட்டிக் கயவர்கள் பொறுப்பில் இருப்பதை
பலரும் அறிவர்.  
 
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக