செவ்வாய், 24 அக்டோபர், 2017

Economics என்பது முட்டாள்களின் சப்ஜெக்ட்.
கணக்கு வராதவன், IQ குன்றியவன், Lab, practicals க்கு
கண்டு அஞ்சுபவன், படிக்காமல் டிகிரி வாங்குபவன்  பயம்
வாங்க நினைப்பவன் இத்தியாதிகளே எகனாமிக்ஸ் ஆட்கள்.
ஆகியோரே  இவர்களே

இது வெறுமனே ஒரு கருத்து அல்ல. மாறாக
இது நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும். எனவே
இது ஒரு தேற்றம் ஆகும். என்னுடைய ஆசிரியர்கள்
இதை எனக்குச் சொன்னார்கள்.
இன்றைக்கும் கூட இயற்பியல் பேராசிரியர்கள்
இந்த உண்மையைச் சொல்லி வருகிறார்கள். எனவே
பதிவில் உள்ளது ஒரு நிரூபிக்கப்பட்ட தேற்றம் ஆகும்.
பித்தகோரஸ் தேற்றம், பைனாமியல் தேற்றம் போல
இதுவும் ஒரு தேற்றம் ஆகும்.

எகனாமிக்ஸ்  முட்டாள்களின் சப்ஜெக்ட் என்பதாலும்,
சகல முட்டாள்களும் தங்களின் அறியாமையை
வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் ஒரு களம் அது
என்பதாலும், நாம் பொருளாதாரப் பதிவுகளை
எழுதுவதில்லை.


வருஷம் 365 நாளும் கிளாசுக்குப் போகாமல்
இருந்தாலும், கடைசி ஒரு வாரத்தில் ஓரளவு
படித்தாலே போதும், ஒரு டிகிரியை வாங்கி விடலாம்.

காரல் மார்க்ஸ் டாக்டர் பட்டம் வாங்கியது தத்துவத்தில்
(philosophy); பொருளாதாரத்தில் அல்ல. அமர்த்தியா சென்
கூறிய பொருளியல் தத்துவம் இந்தியாவில் கடைப்
பிடிக்கப் படுகிறதா, இல்லையே. ஆனால் சி வி ராமனின்
ராமன் விளைவு இன்றளவும் பயன்படுகிறது.
**
பதிவில் நான் கூறியிருப்பது என்னுடைய "கருத்து"
அல்ல. அது தேற்றம். அதில் விவாதத்திற்கே இடமில்லை.
------------------------------------------------------------------------------------------------------

விஷயங்களில் நான் தெளிவாக இருக்கிறேன்
என்கிறார் கிருஷ்ணர் கீதையில்!
----------------------------------------------------------------------------------
1) The greatest things in life are the simplest truths என்று ஒரு
பழமொழி உண்டு. மகத்தான விஷயங்கள் என்பவை
எளிய உண்மைகளே என்று தமிழில் கூறலாம்.
2) இப்பதிவு பொருளாதாரம் என்ற படிப்பை
(study of economics) அறிவியல் படிப்புகளுடன் ஒப்பிட்டு
ஒரு உண்மையைக் கூறுகிறது.
**
3) அது என்ன? ஒப்பீட்டளவில் பொருளாதாரம் படித்துத்
தேறுவது அல்லது பட்டம் வாங்குவது என்பது எளிதானது.
கணிதம், இயற்பியல், வேதியியல்
ஆகிய பாடங்களை எடுத்துப் படித்து பட்டம் வாங்குவது
கடினம். ஏனெனில் இவையெல்லாம் அறிவியல்
பாடங்கள். ஆனால் கலைப்பாடமான (arts group)
பொருளாதாரத்தை சுலபமாகப் படித்துப்
பட்டம் பெறலாம். இது உண்மை. சாதாரண
உண்மை அல்ல. முக்கால உண்மை (universal truth).
**
4) இந்த உண்மையை நான் கண்டுபிடிக்கவில்லை.
நான் பிறப்பதற்கு முன்பே இந்த உண்மை இருக்கிறது.
நான் படிக்கும்போது எனக்குக் கற்பித்த பேராசிரியர்கள்
இந்த உண்மையைக் கூறினர். அது உண்மைதான் என்று
அனுபவத்தில் அறிந்தேன். இன்றும் கூட, இந்த
உண்மையை பல அறிவியல் பேராசிரியர்கள்
மாணவர்களுக்குச் சொல்லி வருகின்றனர்.
**
5) IQ குன்றிய, கணக்கு வராத, உழைப்பைச் செலுத்தி
படிக்கத் தயாராக இல்லாத மாணவர்கள் அறிவியல்
பாடங்களைத் தவிர்த்து விட்டு, கலைப் பாடங்களை  
எடுத்துக் படிக்க வேண்டும் என்று உளவியல்
மருத்துவர்கள் அறிவுரை கூறுவது எல்லா
சமூகத்திலும் இயல்பான ஒன்று.
**
6) எனவே இது வெறும் கருத்து அல்ல. மாறாக இது
நிரூபிக்கப்பட்ட தேற்றம் (proved theorem).
**
7) இதை ஏற்க மறுப்பவர்கள் ஒன்று செய்ய வேண்டும்.
அதாவது இந்தத் தேற்றம் தவறு என்று நிரூபிக்க
வேண்டும். அப்படி இது தவறு என்று நிரூபிக்க
முடியாவிட்டால், இதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
**
8) ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன், தவறு என்று
நிரூபிக்கவும் மாட்டேன் என்று பிடிவாதம்
பிடிப்பவர்களை என்ன செய்வது? பாசிசம் மட்டுமே
அவர்களைக் குணப்படுத்தும் மருந்து.
**
9) "விஷயங்களில் நான் தெளிவாக இருக்கிறேன்"
என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுவார்.
அது போல, நான் படித்து, புரிந்து, ஆய்ந்து தெளிந்த
விஷயங்களில் இரும்புப்பாறை போன்ற உறுதியுடன்
இருக்கிறேன். எந்த ஒன்றிலும் நுனிப்புல்
தன்மையுடன் இருப்பது குட்டி முதலாளித்துவத்தின்
பண்பு. மார்க்சியம் இதை அனுமதிப்பதில்லை.
------------------------------------------------------------------------------------- 
டாக்டர் மன்மோகன்சிங் பொருளாதார நிபுணர்தான்;
அறிவாளிதான்! அதில் என்ன சந்தேகம்? இந்தப்
பதிவு நபர்களை ஒப்பிடும் பதிவு அல்ல. பாடங்களை
ஒப்பிடும் பதிவு. Compare and contrast Economics and Physics
என்பது போன்ற பதிவு. டாக்டர் மன்மோகன்சிங்கையும்
சர் சி வி ராமனையும் ஒப்பிடும் பதிவு அல்ல.   .  

Natural scienceக்கும் Social scienceக்கும் உள்ள வேறுபாடு
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும்
இருந்து வருகிறது. Physics, Chemistry,Biology ஆகியவை
இயற்கையைப் பற்றிய அறிவியல் படிப்புகள்.
அவை கடினமானவை என்று உணர பெரிய மூளையோ
அறிவோ தேவையில்லை. Economics என்பது social science.
ஒவ்வொருவனும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பது.
எனவே சுலபமானது. 
 

.
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக