திங்கள், 16 அக்டோபர், 2017

done (7) அத்வைதம் ஓர் அப்பாலைத் தத்துவம்!
அதை எளிதில் வென்ற ராமானுஜர்!
-----------------------------------------------------------------------------
ஆதிசங்கரர் பிரம்மத்தை அவரின் சொற்களில்
வர்ணிப்பதைப் பார்ப்போம்.

1) பிரம்மம் ஒன்றே உண்டு; அது ஆதி அந்தமற்றது;
அளவு கடந்தது; சோதி மயமானது; அதுவன்றி
வேறொன்று இல்லை.
2) அறிவானந்தமாய, தனக்கென ஒரு செயலற்றதாய்
உள்ள பிரம்மம் ஒன்றே உண்டு.

3) எப்பொருட்கும் உள்ளாய, புறம்பாய, உடனாய்
உள்ள பிரம்மம் ஒன்றே உண்டு.
4) எல்லாமாய் தனக்கொரு சார்பு இல்லாததாய்
உள்ள பிரம்மம் ஒன்றே.

5) குணம் குறி கடந்ததாய், ஏகனாய், மலரகிதனாய்
உள்ள பிரம்மம் ஒன்றே.
( மலரகிதனாய்= குற்றமற்றதாய்)
6) மனத்தால் அறிய முடியாததாய், வாக்கு மன
அதீதமாய் உள்ள பிரம்மம் ஒன்றே.

7) உண்மைப் பொருளாய் சோதி ரூபமாய்
ஒப்புயர்வு அற்றதான பிரம்மம் ஒன்றே.        
(பார்க்க: விவேக சூடாமணி சுலோகம் 463-469).

ஏகத்துவமான நிர்குண பிரம்மம் தவிர வேறு
எதுவுமே இப்பிரபஞ்சத்தில் உண்மையில்லை
என்னும் ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவம்
மிகத் தீவிரமான ஓர் அப்பாலைத் தத்துவம்
(highly metaphysical). மிகவும் அரூபமானதும்
நுண்ணுணர்வால் மட்டுமே புரிந்து கொள்ளத்  
தக்கதான ஓர் கடினமான தத்துவம் இது.
(highly abstract and overly theoretical).

மக்களின் லௌகீக வாழ்க்கைக்கும் ( material life)
ஆன்மிக வாழ்க்கைக்கும் (spiritual life) பெரும்
இடைவெளியை ஏற்படுத்தும் தத்துவம் இது.
எனவே இது பரந்துபட்ட மக்களுக்கானது அல்ல.
இது சமூகத்தின் மேட்டுக்குடியினருக்கான
(elite) தத்துவம். சராசரி மக்கள் அத்வைதம் கூறுகிற
ஞான மார்க்கத்தை புரிந்து. ஏற்றுக்கொண்டு,
பின்பற்றுவது என்பது சாத்தியமற்றது.

எனவே ராமானுஜர் தம் விஷிஷ்டாத்வைதத்தைக்
கொண்டு மிகச் சுலபமாக அத்வைதத்தை வென்று
விட்டார்.ராமானுஜரின் கோட்பாடும் அத்வைதமே
என்ற போதிலும், அத்வைதத்தில் உள்ள அப்பாலைத்
தன்மையை (metaphysical) ,அகற்றி விட்டு, ஞான
மார்க்கத்திற்குப் பதிலாக பக்தி மார்க்கத்தைப்
பரிந்துரைத்தார். தத்துவம் என்பது உலகை
விளக்குவது.(interpreting the world). எந்தவொரு தத்துவமும்
மக்களின் பார்வையில்  இருந்து உலகை விளக்க
வேண்டும். அது மக்களால் எளிதில் புரிந்து
கொள்ளப்பட வேண்டும். இந்த இலக்கணத்திற்குச்
சற்றும் பொருந்தி வராதது அத்வைதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக