செவ்வாய், 3 அக்டோபர், 2017

தமிழகம் யாருடைய மண்?
----------------------------------------------------
1) திராவிட நாடு கோரிக்கை போலியான மோசடியான
முழுமுட்டாள் தனமான கோரிக்கை என்று உணர்ந்த
அறிஞர் அண்ணா, அதைக் கைவிட சந்தர்ப்பம்
வருமா என்று காத்திருந்தார்.

2) 1962இல் பிரிவினைத் தடைச் சட்டம் வந்தவுடன்,
"ஆஹா அற்புதமான வாய்ப்பு" என்று முடிவெடுத்து
திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார்.

3) மேனன் (எம்ஜியார்) 1972இல் திமுகவை உடைத்து
தனிக்கட்சி ஆரம்பித்தார். அவர் தீவிர கடவுள்
பக்தர். நாத்திகம், பகுத்தறிவு எல்லாம் பொய் என்று
திடமாக நம்பியவர் மேனன். நாத்திகக் கட்சி
என்ற பிம்பம் தன் கட்சி மீது வந்து விடக் கூடாது
என்பதில் கவனம் கொண்ட மேனன், பகிரங்கமாக
கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று
சாமி கும்பிட்டார். இதன் விளைவு, ஒன்றரை கோடி
தொண்டர்கள், தலைவர்கள் உட்பட அனைவரும்
பக்தியின் உச்சத்தைத் தொட்டனர்.

4) உதட்டில் நாத்திகமும் உள்ளத்தில் கடவுள்
பக்தியுமாக திமுகவினர் மலச்சிக்கல்காரனைப்
போல அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருப்பதை
கலைஞர் கண்டார். எல்லோரும் ரகசியமாக
சாமி கும்பிடுவதை அவர் அறிந்தார். கடவுளை
வணங்காத சிலர் கூட, சோதிடத்தின் மீது பற்றுக்
கொண்டிருப்பதை கலைஞர் அறிந்தார்.

5) தாமே மஞ்சள் துண்டு அணிய ஆரம்பித்தார்.
இதன் பின்னணியில் ஒரு சோதிட ஆலோசனை உண்டு.

6) எப்போது கலைஞர் மஞ்சள் துண்டு அணிய
ஆரம்பித்தாரோ, அப்போதே பல திமுகவினருக்கு
தைரியம் பிறந்தது. ரகசியமாகச் சாமி கும்பிட்டவர்கள்
பகிரங்கமாக அதைச் செய்ய ஆரம்பித்தனர். விளைவு
ஒரு கோடிக்கும் மேற்பட்ட திமுகவினர் நாத்திகத்தை
போலிப் பகுத்தறிவை கைவிட ஆரம்பித்தனர்.

7) செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தம் குடும்பத்தார்
மூலமாக சகல விதமான மூட நம்பிக்கைகளையும்
சமாக்கத்தில் பரப்ப ஆரம்பித்தார்.

8) தயாநிதி மாறன் கடவுள் பக்தர். அவரின் சன் டிவி
பக்தியைப் பரப்புவதில் இந்தியாவிலேயே
முதலிடத்தில் உள்ளது.

9) பாமக கட்சியானது மஞ்சளாடையுடனும்
அக்கினிக் குண்டத்துடனும் பிறந்த கட்சி.
அவர்கள் என்றுமே நாத்திகம் பேசியதில்லை.

10) தேமுதிக தோன்றிய போதே நாள் நட்சத்திரம்
பார்த்து கடவுள் அருளை வேண்டித் தொடங்கப்பட்ட
கட்சி.

11) மேற்கூறிய கட்சிகள் (திமுக அதிமுக பாமக தேமுதிக)
தமிழகத்தின் பெரும்பகுதி மக்களை தங்களின்
செல்வாக்கு மண்டலத்தில் வைத்தருப்பவை.

12) இதன் மூலம் நான் நிரூபிப்பது என்னவெனில்,
தமிழ்நாடு ஆத்திகத்தின் மண், ஆன்மிகத்தின் மண்
என்பதையே. இதுதான் உண்மை.
**************************************************************         
பொருள்முதல்வாதமற்ற நாத்திகம் எல்லாமே
அரைகுறை நாத்திகம்தான். பெயரளவிலான
நாத்திகம்தான். அது காத்திரமானதல்ல. எனவே
நீடித்து நிற்காது. சீக்கிரத்தில் விழுந்து விடும்.
அதுதான் திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளின்
விஷயத்தில் நடந்தது.

12) இவை தவிர, மேல்மருவத்தூர் சக்தி வழிபாடு,
ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து செல்வது
போன்ற வழிபாடுகளில் ஆண்டுதோறும் கோடானு
கோடி மக்கள் செல்கின்றனர்.
14) ஆன்மிக மண்ணான தமிழகத்தை அறிவியல் மண்ணாக,
பொருள்முதல்வாத மண்ணாக மாருறுவோம். அதற்கு
நியூட்டன் அறிவியல் மன்றம் போராடும்.


பொருள்முதல்வாதம் தவிர்த்த தமிழகத்தின் பிற
வகை நாத்திகம் அனைத்துமே பரிசீலனைக்கு
அருகதை அற்றவை. எனவே அவற்றை விவாதப்
பொருளாக ஆக்குவதில் அர்த்தம் இல்லை.
நூறு ஆண்டு வரலாற்றை நெருங்கும் CPI,CPM
கட்சிகள் பொருள்முதல் வாதத்தை பற்றி
ஒழுகாமலும் போற்றிப் பாதுகாக்காமலும்
இருந்ததன் தீய விளைவுகளை தற்போது நாம்
கண்கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
    
அறிவியல் அடிப்படையற்ற
பொருள்முதல் வாதமற்ற போலி நாத்திகம்
மூட பக்திக்கு
இட்டுச் செல்லும். இதை திமுக அதிமுக கட்சிகள்
நிரூபித்தன.

பொருள்முதல்வாதம் 3000 ஆண்டுப் பழமை மிக்கது.
கருத்துமுதல் வாதமும் அதே போல 3000 ஆண்டுப்
பழமை மிக்கது. மார்க்ஸ் பிறந்தது 1818. மார்க்ஸ்
காலத்திற்கு முன்பே, தத்துவ அரங்கில் கருத்து முதல்
வாதமும் பொருள்முதல் வாதமும் போரிட்டு வந்தன.
பல்வேறு காலக் கட்டங்களில் பொருள்முதல் வாதமே
வெற்றி பெற்றிருந்தது. இது இந்திய நிலைமை.
**
அறிவியல் வளர்ச்சியின் விளைவாக, பொருள்முதல்
வாதம் காலந்தோறும் தன்னைப் புதிப்பித்துக் கொண்டே
வந்துள்ளது. தேங்கி கிடைக்கவில்லை.
**
மார்க்ஸ் லுத்விக் பாயர்பாக்கின் பொருள்முதல்
வாதத்தையும், ஹெக்கலின் இயங்கியலையும்
ஒரு சேர எடுத்துக் கொண்டு, இயங்கியல் பொருள்முதல்
வாதத்தை உலகிற்கு அளித்தார். 

திருவாரூருக்கு அருகில் ஒரு நவகிரஹ மூர்த்தி
கோவிலில் நீண்ட ஆயுள் வேண்டி யாகம் நடத்தி seytha செய்த
ஆஹுதி செய்தார் துரை முருகன். ஆதாரத்துடன்
வெளியிடுவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக