done (3) அத்வைதம்: ஒரு சிமிழ் அளவிலான வரலாறு!
தூய அறிவே (pure reason) பிரம்மம்; அதுவே சாரமான
உண்மை என்றார் ஆதி சங்கரர். உண்மை என்பது
இரண்டற்றது என்பதால் பிரம்மம் தவிர மீதி
அனைத்தும் பொய், மாயை என்றார் ஆதி சங்கரர்.
சங்கரர் காலத்திய இந்தியத் தத்துவ ஞானம் ஆறு
வெவ்வேறு பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது.
ஆறு பிரிவுகளும் ஆறு தரிசனங்கள் என தத்துவ
ஆசிரியர்களால் வழங்கப்பட்டன. அவற்றில்
பொருள்முதல்வாதமே மேலோங்கி இருந்தது.
1) சாங்கியம் 2) யோகம் 3) நியாயம் 4) வைசேஷிகம்
ஆகிய நான்கும் பொருள்முதல் வாத தரிசனங்கள்.
பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை ஆகிய இரண்டும்
கருத்துமுதல் வாத தரிசனங்கள். இவையே வேதாந்தம்
என்ற பெயரால் வழங்கப் பட்டன.
பூர்வ மீமாம்சை பக்தியாலும் சடங்குகளாலும்
நிரம்பி வழிந்த தரிசனம். அதில் தத்துவச் செறிவு குறைவு.
அது பக்தி மார்க்கத்தைப் போதிக்கிறது.
உத்தர மீமாம்சையே ஒப்பீட்டளவில் தத்துவச் செறிவு
மிகுந்தது. இது ஞான மார்க்கத்தை போதிக்கும்
தரிசனம். இதுவே அத்வைதத்தின் தோற்றுவாய்.
ஆதிசங்கரர் சடங்குகளைத் தீவிரமாக எதிர்த்தார்.
இது மத நிறுவனங்களுக்கு எதிரான மூர்க்கமான
கலகக்குரலாக இருந்தது. எனவே மத நிறுவனங்கள்
அனைத்தும் வரிந்து கட்டிக் கொண்டு ஆதிசங்கரரை
எதிர்த்தன.
பொருள்முதல்வாதத்தை தீவிரமாக எதிர்த்தார்
சங்கரர். எனவே எல்லாப் பொருள்முதல்வாதிகளும்
சேர்ந்து ஆதிசங்கரரை எதிர்த்தனர். சுருங்கக் கூறின்
தம் காலத்தில் வேறெந்த தத்துவ ஞானியையும் விட
அதிகமாக எதிர்க்கப் பட்டவர் ஆதிசங்கரரே.
------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக