வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

முன்னாள் கிரகம் புளூட்டோ பற்றிய சில தகவல்கள்:
--------------------------------------------------------------------------------------- 
முன்னாள் முதலமைச்சர் என்பது போல, புளூட்டோ 
ஒரு முன்னாள் கிரகம். 2006 அது தன கிரக அந்தஸ்தை 
இழந்தது. தற்போது அது ஓர் குறுங்கோளாக உள்ளது.
**
1) சூரியனை ஒரு முறை சுற்றி வர 
ஆகும் காலம்: 248 ஆண்டுகள். 

2) புளூட்டோவின் வெப்பநிலை: (surface temp) 
மைனஸ் 233 டிகிரி செல்சியஸ் 

3) ஈர்ப்புவிசை: பூமியின் ஈர்ப்பு விசையில் 6 சதம்.

4) புளூட்டோவின் வளி மண்டலம்
பூமியின் வளி மண்டலத்தை விட 50000 மடங்கு 
அடர்த்தி குறைவு. 

5) வளிமண்டலத்தில் நைட்ரஜன், மீத்தேன்,
கார்பன் மோனோ ஆக்சைட் ஆகியவை உண்டு. 
----------------------------------------------------------------------------------
புளூட்டோ கண்டறியப்பட்டது 1930இல்.
பதவி இழந்தது: 2006இல் 
பதவி வகித்தது: 75 ஆண்டுகள்.
இங்கு பதவி என்பது, புளூட்டோவின் கிரக அந்தஸ்தை
குறிக்கும்.
**
சூரியன்-பூமி தூரம்: 150 மில்லியன் கி.மீ (15 கோடி கி.மீ)

சூரியன்-புளுட்டோ தூரம்: 5.9 பில்லியன் கி.மீ (590 கோடி கி.மீ)
**
புளூட்டோவின் ஐந்து  நிலவுகள் 
---------------------------------------------------
1) CHARON.      2) HYDRA
3) NIX.    4) STYX.   5) KERBEROS
**
புளூட்டோவில் மலைகள் உள்ளன.

11,000 அடி உயர மலைகளும் உள்ளன.

இமயமலையின் உயரம் 29,000 அடி.
**
புளூட்டோ பற்றிய ஆய்வு!
-----------------------------------------------
1) நியூ ஹரிசான்ஸ் என்பது ஒரு விண்கலம்.

2) இது அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து 
2006இல் விண்ணில் செலுத்தப் பட்டது.

3) ஜூலை 14, 2015 அன்று புளூட்டோவை நெருங்கியது.

4) புளூட்டோவின் மேற்பரப்பில் இருந்து 12,500 கி.மீ 
தூரத்தில் இருந்து படம் எடுத்தது.

5) அப்போது விண்கலத்தின் வேகம் வினாடிக்கு 14கி.மீ   
--------------------------------------------------------------------------------------------
********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக