சனி, 15 ஆகஸ்ட், 2015

(2) தயாநிதி மாறன் முன்ஜாமீன் விவகாரம்!
பிரும்ம தத்தனைக் கைது செய்து பார்!
(கட்டுரையின் இரண்டாம் பகுதி)
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------
திரு மாறன் 2004-2007 காலக்கட்டத்தில் தொலைதொடர்பு 
அமைச்சராக இருந்தார். 13.05.2007 அன்று தம் பதவியை 
ராஜினாமா செய்கிறார். திரு மாறன் மீது FIR பதிவு செய்து 
வழக்குப் போடும்போது, அதில் இரண்டு அதிகாரிகளையும் 
சேர்க்கிறது சி.பி.ஐ. (CBI).
**
அ) திரு பிரும்ம தத்தன் ITS, ஆ) திரு வேலுச்சாமி ITS 
ஆகிய இரு ITS அதிகாரிகளே அவர்கள். இவர்கள் இருவரும் 
தொடர்புடைய காலக் கட்டத்தில் (2007 ஜனவரி to மே)
சென்னைத் தொலைபேசியின் (BSNL) தலைமைப் பொது 
மேலாளர்களாக (CGM) இருந்தவர்கள்.
**     
ITS என்றால் Indian Telecommunication Service என்று பொருள்.
UPSC நடத்தும் ITS தேர்வைப்  பொறியியல் பட்டதாரிகள் 
மட்டுமே எழுத அனுமதிக்கப் படுவார்கள்.
BSNL நிறுவனம் அறிவியல்-தொழில்நுட்பம் சார்ந்தது 
என்பதால், இதை ITS அதிகாரிகளே நடத்துவார்கள்.
ஏனெனில், ஐ.ஏ.எஸ் முட்டாள்களை வைத்துக் கொண்டு 
தொழில்நுட்பத் துறையை நடத்த முடியாது அல்லவா!
**
முதலாவது பானிபட் போர் எப்போது நடந்தது? 
இந்தியாவில் மக்காச் சோளம் எங்கெல்லாம் விளைகிறது?
என்கிற கேள்விகளுக்குமட்டும்  பதில் தெரிந்து கொண்டு 
ஐ.ஏ.எஸ் தேறி விடுகிற  கூமுட்டைகளுக்கும் தொழில் 
நுட்பத்திற்கும் என்ன ஸ்நானப் பிராப்தி? எனவே 
BSNLஇல் ஐ.ஏ.எஸ் அசடுகளுக்கு இடமில்லை.
**
திரு பிரும்ம தத்தன் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்தவர்.
ஆளுமை மிக்கவர். தமது பதவிக் காலத்தில், எவ்வித 
அரசியல் நிர்ப்பந்தங்களுக்கும் பணிய மறுத்தவர்.
திரு மாறனின் குற்றச் செயல்களுக்கு இவர் துணை 
போனார் என்பது மிகவும் அபத்தம்.
**
அல்ஜிப்ராவில் unknown quantityஐ x (எக்ஸ்) என்று வைத்துக் 
கொண்டு, கணக்குச் செய்வதைப் போல, அமைச்சருக்கான 
இணைப்பு என்பதால், அது service connection என்ற categoryயின் 
கீழ் வரும் என்பதால், தொடக்கத்தில் அதை CGMஇன் 
பெயரில் வழங்குவது என்ற  BSNLஇல் உள்ள 
நடைமுறையைப் பின்பற்றி, திரு மாறனுக்கு வழங்கப்பட்ட 
இணைப்புகள் CGMஇன் பெயரில் இருந்தன. இது 
எவ்விதத்திலும் தண்டனைக்குரிய குற்றம் ஆகாது.
**
இதற்காக திரு பிரும்ம தத்தனைக் கைது செய்ய முடியாது.
கைது செய்து பார் என்று CBIக்கு நாங்கள் சவால் 
விடுகிறோம்.
**
திரு வேலுச்சாமி, அமைச்சர்கள் திரு மாறன், திரு ராசா 
ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். எனினும் 
அவருக்கு எதிராக CBIயிடம் ஒரு துண்டுக் காகிதம் 
கூடக் கிடையாது. எனவே அவரையும் CBIயால் கைது 
செய்ய முடியாது.
**
உண்மை என்னவெனில், திரு மாறனின் இந்த  
விவகாரங்களை அமைச்சர் ஆ ராசாவுக்குத் தெரியப் 
படுத்தியவரே திரு வேலுச்சாமிதான். 323 இணைப்புகள்  
விவகாரம் (இவற்றில் பல இணைப்புகள் செயல்படவே இல்லை) முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்      
என்ற நோக்கத்துடனே திரு வேலுச்சாமி இவ்வாறு 
செய்தார் என்பதையும் ஒருவர் கணக்கில் கொள்ள 
வேண்டும்.
**
FIRஇல் இடம் பெற்ற மூவரில் இருவரைக் கைது செய்ய 
முடியாது என்ற நிலையில், திரு மாறனை மட்டும் 
கைது செய்ய சி.பி.ஐ மேற்கொண்ட முயற்சி 
குறைப் பிரசவம் ஆவது இயற்கையே.
**
இந்த வழக்கே மிகவும் பலவீனமானது. இது எந்த 
நீதிமன்றத்திலும் நிற்காது. குற்றச்சாட்டுக்கான எந்த 
ஒரு ஆவண ஆதாரமும் கிடையாது. இருந்தவையும் 
அழிக்கப் பட்டு விட்டன. முட்டாள் அமைச்சன் ஊழல் 
செய்து சிறைக்குப் போகும்போது, கூடவே போவான் 
முட்டாள் ஐ.ஏ.எஸ்.சும். ஆனால் ITS அதிகாரிகள் 
அமைச்சர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கத் 
தெரிந்தவர்கள். 
**
ரூபாய் 400 கோடி BSNLக்கு நஷ்டம் என்கிறாரே ஆடிட்டர் 
குருமூர்த்தி அவர்கள். இது என்ன ACTUAL COSTஆ அல்லது 
OPPORTUNITY COSTஆ? திரு குருமூர்த்தி அவர்கள் மிகச் 
சிறந்த ஆடிட்டராக இருக்கலாம்; அறிஞராகக் கூட 
இருக்கலாம். ஆனால் அவரின் அறிவியல்-தொழில்நுட்ப 
அறிவு பூஜ்யம். அவரால் இந்த வழக்கில் திரு மாறனைச் 
சிறைக்கு அனுப்ப முடியாது.
**
நாங்கள் ஏற்கனவே பலமுறை கூறியபடி, இந்த வழக்கில் 
திரு மாறன் சுலபத்தில் தப்பி விடுவார். மாஜிஸ்ட்ரேட் 
கோர்ட்டில் கூட இந்த வழக்கு நிற்காது. (மகாத்மா 
காந்தியையே கஞ்சா வழக்கில் கைது செய்து ஆஜர் 
படுத்தினாலும், பதினஞ்சு நாள் ரிமாண்டு என்று 
'தீர்ப்பு' சொல்லக்கூடிய இடம் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்)
**
ஆகவே, எமது கட்டுரைத் தலைப்பில் கூறியபடி,
ராமகோபாலனோ அல்லது நத்தம் விஸ்வநாதனோ 
யார் நீதிபதியாக இருந்தாலும், திரு மாறனைத் 
தண்டிக்க முடியாது; விடுதலைதான் செய்ய முடியும்.
--------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-1: ஒருவேளை கடுமையான நிர்ப்பந்தங்களுக்கு 
ஆட்பட்டு, ஜாமீன் கிடைக்காமல் ஒரு சில நாட்கள் 
சிறையில் இருக்க நேரிட்டாலும், (இதற்கான PROBABILITY 0.0001)
இறுதியில் வழக்கில் இருந்து சுலபத்தில் விடுதலை 
ஆகி விடுவார் திரு மாறன்.
**
பின்குறிப்பு-2: திரு மாறன் குற்றமற்றவர் என்று வாதிடுவது 
இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. அவ்வாறு எவரேனும் 
புரிந்து கொண்டால், அது பிறழ் புரிதலே ஆகும்.
*****************************************************************           
     
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக