புதன், 5 ஆகஸ்ட், 2015

பத்தாண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்த 
உச்சநீதிமன்றமும், கம்பி எண்ணும் 55 கயவர்களும்!
அதிர்ச்சி அடைந்த அன்புமணி ராமதாஸ்!
--------------------------------------------------------------------------------
1) குற்றம் நிகழ்ந்தது 2000 ஆண்டில். விசாரணை நீதிமன்றம் 
தண்டித்தது ஜனவரி 16,2013இல். உயர்நீதிமன்றம் தண்டனையை 
உறுதி செய்தது மார்ச் 5, 2015இல். தற்போது, உச்சநீதிமன்றம் 
மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது 
ஆகஸ்டு 3, 2015இல். நீதியரசர்கள் F M I கலிஃபுல்லா, 
சிவ கீர்த்தி சிங் ஆகிய இருவர் அடங்கிய அமர்வு உச்சநீதி
மன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.  
**
2) ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியானா முதல்வராக இருந்தபோது,
2000 ஆண்டில், 3206 இளநிலை ஆசிரியர்களைப் பனி நியமனம் 
செய்தார். அப்போது ஒரு நியமனத்துக்கு ரூ 3 லட்சம், 4 லட்சம் 
என்று லஞ்சம் வாங்கி கோடிகளைக் குவித்தார். மாட்டிக் கொண்டார்.
வழக்கு நடந்தது. நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 55 பேர்களும் 
குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. (A-1 to A-55 convicted).
**
3) கல்வி அதிகாரிகள், தரகர்கள், இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 
மற்றும் முதல்வர் சவுதாலா, அவரின் மகன் அஜய் சவுதாலா 
உள்ளிட்ட 55 பேரும் தண்டிக்கப் பட்டனர். இதில் சவுதாலா 
அவரின் மகன் அஜய் ஆகியோருக்கு பத்தாண்டு சிறைத்
தண்டனை  விதிக்கப் பட்டது. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் 
ஆகியவை தண்டனையை உறுதி செய்தன. எனவே கயவர்கள் 
கம்பி எண்ணிக் கொண்டு இருக்கின்றனர்.
**
4) இதில் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் கம்பி எண்ணிக் கொண்டு 
இருக்கிறார்கள். கஷ்டப்பட்டுப் படித்து ஐ.ஏ.எஸ் தேறியது 
கம்பி எண்ணுவதற்கா? பொறுக்கித் தின்பது அரசியல்வாதியின் 
குலத்தொழில். உங்களுக்கு அதுவாடா குலத்தொழில் 
ஐ.ஏ.எஸ் நாய்களே!
**
5) இதில்  சஞ்சீவ் குமார் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி 
அம்பலப்படுத்துநராக (whistle blower) வேடமிட்டான்.
பின்னர் அவனே இதில் சூத்திரதாரி என்று நிரூபணம் ஆகியது.
தற்போது கம்பி எண்ணுகிறான்.
**
6) இந்தச் செய்தியைஇந்து ஆங்கில ஏட்டில்  படித்தேன், 
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இதே செய்தியை
இதே இந்து ஏட்டில் படித்த அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சி 
அடைந்தார்; பதறிப்போனார். சவுதாலாவைப் போல், 
அன்புமணி மீது நடக்கிற வழக்கும் கல்வித்துறை ஊழல் 
சார்ந்த வழக்கே. (corruption in education department). அன்புமணி 
மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டால், அவருக்கும் 
பத்து வருஷம் கிடைக்கும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.
******************************************************************  
        
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக