ஆய்வுக் கட்டுரை.
--------------------------------
தமிழகத்தின் மிகப்பெரிய தீயசக்தி பாமகவே,
பாஜக அல்ல!
------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்

பாஜகவுக்கும் தமிழ் மக்களுக்கும் உள்ள உறவு தாமரை
இலைக்கும் தண்ணீருக்கும் உள்ள உறவு போன்றது.
தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது. பல பத்தாண்டுகளாகத்
தீவிர முயற்சி செய்த பின்னரும், தமிழ்நாட்டில் பாஜக
கால் ஊன்றக்கூட இன்றளவும் முடியாமல் இருக்கிறது
என்பதுதான் யதார்த்தம்.
**
தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில், பாஜகவுக்கு
இருக்கும் செல்வாக்கு என்பது ஒரு தொகுதிக்கு 5000 வாக்குகள்
என்பதாகவே இன்றளவும் இருந்து வருகிறது, குமரி மற்றும்
கோவை நீங்கலாக. சராசரியாக இரண்டு லட்சம் வாக்குகள்
கொண்ட, ஒரு சட்டமன்றத் தொகுதியில் பாஜகவுக்கு
இருப்பது 5000 (அல்லது 6000) வாக்குகள்தான் என்பது
பாஜகவுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கை உணர்த்தும்.
**
பாஜகவை நான்கு புறங்களிலும் எதிர்ப்பு சூழ்ந்து இருக்கிறது.
திராவிட இயல், பெரியாரியல் சித்தாந்தங்கள் பாஜகவை
தமிழ் மண்ணில் காலூன்ற விடாமல் செய்து இருக்கின்றன;
செய்தும் வருகின்றன. கூடவே மார்க்சிய அமைப்புகளும்
சிறுபான்மையினரின் அமைப்புகளும் தங்கள் சக்திக்கு
உட்பட்டு பாஜகவை விரட்டி அடித்துக் கொண்டே
இருக்கின்றன.
**
இவற்றை எல்லாம் மீறி, பாஜக தமிழ்நாட்டில் அரசியல்
ரீதியாகவோ அல்லது சித்தாந்த ரீதியாகவோ செல்வாக்குப்
பெறுவது என்பது சுலபம் அல்ல. குறைந்தது இன்னும்
பத்தாண்டு காலத்துக்கு இதே நிலைதான் நீடிக்கும்.
அதாவது 2025 வரை, பாஜகவின் செல்வாக்கு ஒரு மில்லி
மீட்டர் அளவு கூட வளர வாய்ப்பு இல்லை.
அரசியல் ரீதியான செல்வாக்கு, சித்தாந்த ரீதியான
செல்வாக்கு ஆகிய இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு
வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும்.
**
எனவே, தமிழ்நாட்டின் மிகப் பெரிய தீய சக்தியாகவும்
தமிழ் மக்களின் தாக்குதலின் இலக்காகவும் பாஜகவை
வரையறுப்பது தத்துவார்த்தத் தவறாகவே முடியும்.
தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் தத்துவ அரங்கில்,
பாஜகவே பிரதான எதிரி என்று வரையறுப்பது,
புரட்சிகர, இடதுசாரி, முற்போக்கு மற்றும் ஜனநாயக
சக்திகளின் ஆற்றலை வீணான இடத்தில் விரயம்
செய்வதாகவே முடியும்.
**
ஆனால் பாமகவின் நிலை அப்படி அல்ல. இக்கட்சி
சூத்திர மக்களின் கட்சிஎன்றும் மிகவும் பிற்படுத்தப் பட்ட
வன்னிய மக்களின் கட்சி என்று பார்க்கப் படுகிறது.
எளிய குடும்பங்களில் இருந்து வந்த இக்கட்சியின்
தலைவர்கள் இன்று பெரும் பூர்ஷ்வாக்களாக ஆகி
விட்டாலும், இக்கட்சியின் வெகுஜன அடித்தளம் என்பது
உழைக்கும் மக்களையே மிகுதியும் கொண்டதாகும்.
**
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில், சுமார் ஐம்பது
தொகுதிகளில் இக்கட்சிக்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி
உள்ளது. இந்த வாக்கு வங்கியைக் கொண்டு, பாமக
தேர்தலில் தனித்து நின்று ஒரு சில இடங்களைப்
பெறலாம் அல்லது பெற முடியாமலும் போகலாம்.
எனினும், தமிழக அரசியலில் புறக்கணிக்க முடியாத
ஒரு சக்தியாக (a force to reckon with) இக்கட்சி திகழ முடியும்.
**
இப்போது பாஜக, பாமக இவ்விரு கட்சிகளையும் ஒப்பிட்டுப்
பாருங்கள். தமிழக அரசியல் வரலாற்றில், சில
தருணங்களைத் தவிர, பெரும்பகுதிக் காலம் பாஜக
ஒரு தீண்டத் தகாத கட்சியாகவே இருந்து வருகிறது.
ஆனால் பாமக அப்படி அல்ல.
**
திமுகவும் அதிமுகவும் அரசியல் நெருக்கடிகள்
காரணமாக, பாஜகவுடன் கூட்டு வைத்த பின்னரும் கூட,
அதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் பாஜக
காலூன்ற முடியவில்லை. ஏனெனில்,
"பிடித்து வைத்தால் பிள்ளையார்,
வழித்து எறிந்தால் சாணி"
என்பது போல, கலைஞரும் ஜெயலலிதாவும் பாஜகவை
வழித்து எறிந்தபோது, அக்கட்சியால் பிள்ளையாராக
நிற்க முடியவில்லை; சாணியாகிப் போனது.
**
இதன் மூலம் நாம் உணர்த்த விரும்புவது இதுதான்.
பாஜகவை எதிர்கொள்வது சுலபம்; ஆனால் பாமகவை
எதிர்கொள்வது மிகவும் கடினம்.
**
தற்போது, மருத்துவர் ராமதாசின் குடும்ப நலன் என்ற
ஒற்றை அச்சில் சுழலும் கட்சியாக பாமக சுருங்கி விட்டது.
(Please understand this REDUCTIONISM.). எல்லா முதலாளித்துவ
அரசியல் கட்சிகளுக்கும் கொள்ளை அடிப்பது இலக்காக
இருக்கும்போது, பாமகவை மட்டும் தனிமைப் படுத்திப்
பார்ப்பது ஏன் என்று கேள்விகள் எழலாம்.
**
அதிகாரத்தை பெறுவதற்கும் கொள்ளை அடிப்பதற்கும்
சமூகத்தைப் பிளவு படுத்துகிறது பாமக. சாதி வெறியை
ஒவ்வொரு வன்னியனிடமும் ஏற்படுத்துகிறது பாமக.
சக உழைப்பாளி மக்களான தலித்துகளை அழிக்கிறது
பாமக. சுருங்கக் கூறின், பாமகவின் நிகழ்ச்சி நிரலும்
வேலைத்திட்டமும் (AGENDA and PROGRAMME) சாதிய
மோதல்களை உருவாக்குவதும் தலித்துகளை
ஒடுக்குவதும் என்று ஆகி விட்டது.
**
இது அனுமதிக்கப் பட முடியாது. தன்னுடைய ஜீவிதத்துக்காக
(SURVIVAL) சமூகத்தை அழிக்கும் பாமகவை விட்டு
வைக்கக் கூடாது. இதை முளையிலேயே கிள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், தமிழ்ச் சமூகம் இன்னும் சில
நூற்றாண்டுகாலம் பின்னோக்கிப் போகும்.
**
ஆகவே, இன்றைய சூழலில், வேறு எந்தக் கட்சியையும்
விட, பாமகவே தமிழகத்தின் மிகப் பெரிய தீய சக்தி
என்று மார்க்சிய சிந்தனைப் பயிலகம் என்று
வரையறுக்கிறது. புரட்சிகர, இடதுசாரி, முற்போக்கு
மற்றும் ஜனநாயக சக்திகள், தற்போதைய அரசியல்
சூழலில், பாட்டாளி மக்கள் கட்சியை பிரதான எதிரியாகக்
கருதி முறியடிக்க முன்வர வண்டும் என்று மார்க்சிய
சிந்தனைப் பயிலகம் அறைகூவல் விடுக்கிறது.
**************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக