வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

மூலத்துக்குத்தான் உரையே தவிர, எழுதுவோரின்
அரசியல் சார்புக்கு ஏற்றவாறு உரை எழுதுதல் கூடாது.
காலத்துக்கு ஏற்றவாறு உரையின் மொழிநடை மாறலாமே
தவிர, உரை மாறக்கூடாது. அவ்வாறு மாறுமேயாயின்,
அது பொய்யுரை ஆகும்.
**
அகல் விசும்புளார் கோமான் என்ற தொடர் மூலம் இந்திரன்
யார் என்று விளக்குகிறார் வள்ளுவர். இந்திரனே  என்ற
சொல்லில் ஏகாரத்தைப் பெய்கிறார் வள்ளுவர். இதன் மூலம்
அக்காலத்தில் மக்களிடம் புழங்கிய, பேராற்றல் மிக்க
தலைவன் இந்திரன் என்ற கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டு
இக்குறளை எழுதி உள்ளார் வள்ளுவர்.
**
பேராற்றல் மிக்க இந்திரனை விட, புலன்களை அடக்கியவன்
உயர்ந்தவன் என்பதே இக்குறளின் பொருள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக