காரல் மார்க்ஸ், ராஜபக்சே படங்களுடன்
கம்யூனிஸ்ட்களின் தேர்தல் பரப்புரை!
ராஜபக்சே வாழ்க! புரட்சி ஓங்குக!
-----------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்

இன்குலாப் ஜிந்தாபாத்!
ராஜபக்சே ஜிந்தாபாத்!
ஐக்கிய லங்கா ஜிந்தாபாத்!
இன்குலாப் இன்குலாப் இன்குலாப் ஜிந்தாபாத்!!!
**
மேற்கூறிய 'புரட்சிகர' முழக்கங்களை எழுப்பியவர்கள்
இலங்கையின் கம்யூனிஸ்ட் கட்சிகள். அண்மையில் முடிந்த
(2015 ஆகஸ்ட்) இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்
போதுதான் இந்த விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பப் பட்டன.
**
இலங்கை கம்யூனிஸ்ட்டுகள் காரல் மார்க்ஸ், லெனின்
படங்களுடன் ராஜபக்சே படத்தையும் கரங்களில் ஏந்தி
இருந்தனர். காரல் மார்க்சின் படத்தை விட, ராஜபக்சேவின்
படம் பெரிதாக இருந்தது இயற்கையே! அதிமுகவினரின்
சுவரொட்டிகளில் அறிஞர் அண்ணாவின் படம் மிகச்
சிறியதாகவும் ஜெயலலிதாவின் படம் மிகப் பெரியதாகவும்
இருப்பது போன்றதுதான் இது.
**
இலங்கை சின்னஞ் சிறிய நாடு. 2015 ஆகஸ்ட் நாடாளுமன்றத்
தேர்தலின்போது, இலங்கையின் வாக்காளர்கள் எண்ணிக்கை
1.5 கோடி மட்டுமே. (கவனிக்கவும்: இது வாக்காளர்களின்
எண்ணிக்கையே தவிர மக்கள் தொகை அல்ல). இந்தத்
தேர்தலில் ராஜபக்சேவின் இலங்கை சுதந்திரக் கட்சியுடன்தான்
கம்யூனிஸ்ட்கள் கூட்டணி வைத்து இருந்தனர்.
**
சோஷலிசக் கூட்டணி (socialist alliance) என்ற பெயரில்,
இலங்கையின் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிக் கட்சிகள்
தங்களுக்குள் ஓர் அணி அமைத்து இருந்தனர். இதில்
பிரதானமான கட்சி CPSL (Communist Party of Sri Lanka) ஆகும்.
இலங்கையில் உள்ள எல்லாக் கம்யூனிஸ்ட் கட்சிகளும்
உள்ளடங்கிய இந்த சோஷலிசக் கூட்டணி, ராஜபக்சேவின்
சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி வைத்துத் தேர்தலைச்
சந்தித்தது.
**
ஐ.நா போர்க்குற்ற விசாரணையின்போது இலங்கைக்
கம்யூனிஸ்ட்கள் அனைவரும் ராஜபக்சேவை ஆதரித்து
நிற்பார்கள். தமிழ் மகரந்தச் சிதறலாக, வெளிநாடுகளில்
வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களில், பலர் கம்யூனிச
வேடதாரிகள். இவர்கள் மறந்தும் கூட, இலங்கை
கம்யூனிஸ்ட் கட்சிகள் ராஜபக்சேவை தொடர்ந்து
ஆதரித்து நிற்பது பற்றி மூச்சுக் கூட விட மாட்டார்கள்.
**
ஜனசக்தி, தீக்கதிர் போன்ற கட்சி ஏடுகளில், மறந்தும்கூட
CPSL (இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி) ராஜபக்சேவை
ஆதரிப்பது பற்றி கண்டித்து எழுத மாட்டார்கள். இந்த
விஷயத்தையே, மன்னிக்கவும், விடயத்தையே
மூடி மறைத்து அணிகளையும் மக்களையும்
ஏமாற்றுவார்கள்.
**
இங்குள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் (CPI, CPM)
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் அமைப்பு ரீதியான
தொடர்பு உண்டு. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநாடுகளில், நம்மூர் கம்யூனிஸ்ட்கள் சகோதரப்
பிரதிநிதிகளாக (FRATERNAL DELEGATES) பங்கேற்பார்கள்.
**
ஆனால், ஈழத்தைத் தாங்கள் ஆதரிப்பது போல,
இளிச்சவாய்த் தமிழனை ஏமாற்றுவார்கள். முட்டாள்
தமிழனும் அதை நம்புவான். அப்படிப்பட்ட இளிச்சவாய்த்
தமிழனுக்காகவே இந்தப் பதிவு எழுதப் படுகிறது.
**
தனித்தமிழ் ஈழம் என்ற கோட்பாட்டையே இந்தியாவின்
போலிக் கம்யூனிஸ்ட்கள் (CPI, CPM) ஏற்றுக் கொள்வதில்லை.
ஆனால், பல்வேறு நக்சல்பாரி அமைப்புகள் தனி ஈழக்
கோரிக்கையை ஆதரிக்கின்றன.
***************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக