ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

கருத்துக் கணிப்பும் 
அறிவியலை எதிர்க்கும் ராமதாசின் மூடத்தனமும்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------------
அண்மைக்காலமாக மிகப் பெரிதும் வளர்ந்துவரும் துறையாக
PSEPHOLOGY துறை இருக்கிறது. ஸெபாலஜி என்றால் 'தேர்தல் 
முடிவைக் கணிக்கும் இயல்' என்று பொருள். இது ஒரு 
அறிவியல் துறை. இன்னும் துல்லியமாகச் சொன்னால்,
புள்ளியியல் துறையின் ஒரு கிளையாகும் இது.
Psephology is a branch of statistics.
**
இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் செபாலஜிஸ்ட் என்று 
அறிமுகம் ஆனவர் நாம் அனைவரும் அறிந்த NDTV 
தொலைக்காட்சியின் அதிபரான திரு பிரணாய் ராய் அவர்கள்.
அவர் தொடங்கி வைத்த செபாலாஜி இன்று ஆல்  போல் 
தழைத்து ஓங்கி வளர்ந்து நிற்கிறது. பாமர மக்களின்
மொழியில், செபாலாஜி என்பது கருத்துக் கணிப்பு 
என்பதாக வழங்கப் படுகிறது.
**
லயோலா கல்லூரிப் பேராசிரியர் ராஜநாயகம் அடிகளார் 
அவர்கள் சிறந்த செபாலஜிஸ்ட் ஆவார். 2016 தமிழகத் தேர்தல் 
முடிவுகள் பற்றிய செபாலஜிக்கல்  சர்வேயை, அதாவது 
கருத்துக் கணிப்பை அவர் 29.08.2015 அன்று வெளியிட்டார்.
இது முதல் கட்ட கருத்துக் கணிப்பு ஆகும்.
**            
3000 பேரிடம் மட்டும் கருத்துக் கேட்டு, நாலரைக் கோடி
வாக்காளர்களைக் கொண்ட தமிழகத் தேர்தல் முடிவுகளைக் 
கணிக்க முடியுமா என்று அரசியல்வாதிகள்
கேட்கிறார்கள். இதற்கு அறிவியலின் பதில் இதுதான்:
"ஆம், முடியும். அதுதான் அறிவியல்'.  இவ்வாறு கணிப்பதில் 
பயன்படும் SAMPLING THEORY பற்றிப் பின்னர் பார்ப்போம்.
**
யார் முதல்வர் என்று கண்டறிய, பேரா இராசநாயகம் அவர்கள் 
ஒரு திறந்த முனைக் கேள்வியைக் கேட்டார் 
(OPEN END QUESTION).அதாவது, இன்னின்னார் முதல்வர் 
ஆகலாம் என்று ஒரு பட்டியலைக் கொடுத்து, அதில் 
தாங்கள் விரும்பும் பெயரை டிக் அடியுங்கள் என்று 
சொல்லவில்லை. இவ்வாறு செய்வது மூடியமுனைக் கேள்வி 
(CLOSED END QUESTION) ஆகும்.
**
இதற்கு மாறாக, வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் பெயரை 
முதல்வராக எழுதலாம் என்று முழு வாய்ப்பையும் 
வாக்காளர்களுக்கே அளித்தார். இதனால்தான் 
கலைஞர், ஸ்டாலின் ஆகிய இருவருக்கும்  வாக்காளர்கள் 
வாக்களித்தனர்.
**
ஆனால், தமது அறியாமையாலும், கருத்துக் கணிப்பில் 
கையாளப்பட்ட முறை ( modus operandi) என்ன என்று 
பேராசிரியரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமலும் 
அவசரப் பட்டு அறிக்கை வெளியிட்டு விட்டு அவமானப் 
பட்டுப்போய் நிற்கிறார் மருத்துவர் ராமதாஸ். (திமுகவுக்கு 
மட்டும் இரண்டு முதல்வர் வேட்பாளர்களா என்ற அவரின் 
முட்டாள்தனமான அறிக்கையைத்தான் குறிப்பிடுகிறோம்).
**
லயோலா கருத்துக் கணிப்பில் கூறப்பட்ட பல்வேறு 
விஷயங்கள் அடுத்தடுத்த கணிப்புகளில் மாறலாம்;
மாறும்; பெரிய அளவுக்குக் கூட மாறும். ஆனால், ஒரே 
ஒரு விஷயம் மட்டும் எத்தனை கணிப்புகள் 
மேற்கொண்டாலும் மாறாமல் இருக்கும். அது இதுதான்.
**
மொத்தமுள்ள வாக்குகளில் மூன்றில்  இரண்டு பங்கை 
திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே வைத்து 
இருக்கின்றன, அதாவது 67.7 சதம். இதற்கு முந்தைய 
தேர்தல்களிலும் இப்படித்தான் இருந்தது. இந்த நிலைமை 
மாறப்போவதில்லை. அதாவது, பிரளயமே வந்தாலும் கூட,
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வேறு எந்தக் கட்சியோ 
அணியோ வரப் போவதில்லை. இதைத்தான் லயோலா 
கருத்துக் கணிப்பு தெளிவாக உணர்த்துகிறது.
*****************************************************************            


     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக