வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

புலன் வழி இயங்கும் மானுட மனம். அவ்வாறு இயங்குகையில்,
தீயவழியில் சென்று விடாமல் ஐந்து புலன்களையும் காத்து
நிற்கும் ஆற்றல் உடையவர்களின் முன்,
அகன்று விரிந்த விசும்பின் கீழ் வாழும் மாந்தர்களின்
தலைவனான ஆற்றல் மிக்க இந்திரனே
பணிந்து நிற்பான்.
**
இதுவே குறித்த குறளுக்கு உரிய மெய்யுரை என்க.
ஈண்டு, ஐம்புலன்களையும் அடக்கிய ஐந்தவித்தாரின்
ஆற்றலும், இந்திரனின் ஆற்றலும் ஒப்பிடப் படுகின்றன.
படைவலிமையும் வையத் தலைமையும் கொண்ட
இந்திரனே பணிவான் என்பதன் மூலம்,  ஐந்தவிக்கும்
ஆற்றலே பேராற்றல் என்கிறார் வள்ளுவர்.
**
இந்திரனே என்பதில் உள்ள ஏகாரத்தைக் கருதுக.
உரை: கலையியல் நிறைஞர் புலவர் வீரை பி
இளஞ்சேட்சென்னி.
-----------------------------------------------------------------------------------------------
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக