ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

இது உண்மையே! ஏனெனில் முன்பு போல ஆறு ஆண்டுகள்
நடந்த உலகப் போர் (1939-45) இப்போது சாத்தியமற்றது.
அணு ஆயுதம் உள்ள எல்லா நாடுகளும் MAD POLICYஐப்
பின்பற்றுகின்றன. Mutually Assured Destruction என்பதுதான்
MAD பாலிசி. பரஸ்பரம் சர்வ நாசம் ஏற்படும் என்பதை
எல்லா நாடுகளும் உணர்ந்து இருப்பதால் மட்டுமே,
உலகப் போரைத் தவிர்க்கின்றன.
**
NGO அமைப்புகள் மூலமாக மக்கள் போராட்டங்களை
மழுங்கடிப்பது, மக்கள் அமைப்பாகி விடாமல் தடுப்பது
ஆகிய தந்திரங்கள் மூலமாக நாடுகளைப் பொருளாதார
ரீதியில் வெற்றி கொள்ள முனைகின்றன.
**
இதற்குக் காரணம் மற்றுமொரு உலகப் போர் மூண்டால்
சர்வ நாசம் ஏற்படும் என்ற படிப்பினையே தவிர வேறில்லை.
இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவிடம் மட்டுமே
அணுகுண்டு இருந்தது. வேறு எந்த நாட்டிடமும் இல்லை.
இன்று அப்படி இல்லை. எட்டு நாடுகளிடம் உள்ளது.
இந்தக் கசப்பான யதார்த்தம்தான் யுத்தம் தவிர்த்த வேறு
வழிமுறைகளில் புகல் அடையக் காரணம்.
**


        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக