திங்கள், 17 ஆகஸ்ட், 2015

நித்திய கண்டம் பூரண ஆயுசு!
-----------------------------------------------
(தமிழ்நாட்டின் தீயசக்தி பாமகவே என்ற எமது கட்டுரை 
 குறித்து வாசக அன்பர்கள் எழுப்பிய சில கேள்விகள் 
மீதான விளக்கம்!
-------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
---------------------------------------------------------------------------------------
பாஜகவை  விட பாமகவே மிகப் பெரிய தீய சக்தி என்று 
வரையறுப்பதன் மூலம், பாஜக எதிர்ப்பு முனைமழுங்கி 
விடும் நிலை ஏற்பட்டு விடுமே என்பது சில வாசகர்களின் 
கவலை. இதற்கு நமது பதில்.
**
பாஜக எதிர்ப்பு என்பது என்றும் எரியும் நெருப்பு. அது 
அவ்வளவு சுலபமாக அணைந்து விடாது. யாரும் 
அணைத்து விடவும் முடியாது.
**
தொடர்ந்து இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் 
இருக்கும் இருக்கும் ஒரு சமூகத்தில், அவ்வப்போது 
சில விஷயங்கள் முன்னிலைக்கு வரும். அவற்றின் மீது 
கவனம் செலுத்துவது உடனடிக் கடமையாகி விடும்.
அது போலத்தான், தற்போதைய தமிழ்ச் சூழலில்,
சாதிவெறியின் திரண்ட வடிவமாகவும், நம்மை அடுத்த 
அடி எடுத்து வைக்க விடாமல் பெரும் முட்டுக் கட்டை
யாகவும்  பாமக இருக்கிறது. இந்த முட்டுக் கட்டையை 
அகற்றுவது    உடனடிக் கடமையாகி விடுகிறது.
**
ஒரு மனிதனுக்கு சயரோகம் என்னும் TB நோயும் 
இருக்கிறது. கூடவே, அவனுக்கு எதைச் சாப்பிட்டாலும் 
வாந்தியும் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.
இந்நிலையில், ஒரு மருத்துவன் என்ன செய்வான்?
முதலில் வாந்தியை நிறுத்துவான். அதுபோலத் தான் 
பாமகவின் பல்லைப் பிடுங்க வேண்டியது 
முதல் வேலையாக ஆகி விடுகிறது. அதாவது, பாமக 
என்பது வாந்தி. பாஜக என்பது சயரோகம்.
**  
மார்க்சிய மொழியில் கூறுவதானால், தற்காலிக 
உத்தியாக (as a tactics) பாமக எதிர்ப்பு முன்னிலை 
பெறுகிறது. இதனால், மூல உத்தியான (strategy) 
பாஜக எதிர்ப்பு எவ்வித மாற்றமும் அடைவதில்லை.   
**
அடுத்து, சித்தாந்த ரீதியான செல்வாக்கு என்றால் என்ன?
பாஜகவுக்கு சித்தாந்த ரீதியான செல்வாக்கு தமிழகத்தில் 
இருக்கிறதா? இதை ஒரு உதாரணத்தின் மூலம் 
அறிந்து கொள்வோம். 
**
தமிழகத்தில் 69 சத இட ஒதுக்கீடு இருந்து வருகிறது.
இது நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பது போலத்தான் 
உள்ளது. இன்று (16.08.2015) உச்சநீதி மன்றம் வழங்கி 
உள்ள ஒரு தீர்ப்பின்படி, 69 சத இடஒதுக்கீட்டால் 
'பாதிக்கப்'பட்ட எட்டு மாணவர்களுக்கு மருத்துவப் 
படிப்பில் இடம் ஒதுக்கப் படுகிறது.
**
பாஜக இடஒதுக்கீட்டை எதிர்க்கும் கட்சி. 69 சத இடஒதுக்கீடு 
கூடாது என்பது பாஜகவின் சித்தாந்தம். இந்த சித்தாந்தத்தைச் 
சொல்லி பாஜகவால் ஓட்டுக் கேட்க முடியுமா? கேட்டால் 
என்ன ஆகும்? பாஜகவுக்குப் பாடை ரெடி ஆகும்.
ஆக, சித்தாந்த ரீதியாக பாஜகவுக்குத் தமிழ்நாட்டில் 
செல்வாக்கு இல்லை என்பது தெரிகிறது அல்லவா?
****************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக