வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

அகல் விசும்பு உளார் = அகன்ற வானத்தின் கீழ் வாழும் மாந்தர் 
கோமான்= தலைவன்
இந்திரனே= அரசனே
**
இந்திரன் என்பது தனியொரு நபரின் பெயர் அன்று.
மாந்தர்களின் தலைவன், பேரரசன் என்றே பொருள்.
**
ஒரு குறளோ அல்லது அதன் பொருளோ நமக்கு உவப்பாக
இல்லை என்பதற்காக, மூலத்தைச் சிதைக்க முனைவது
வள்ளுவரைச் சிறுமைப் படுத்த முயல்வதாகும். எந்தவொரு
நூலும், அது எழுதப்பட்ட காலத்தின் படைப்பும் ஆகும்
என்பதே மெய்யுரை எழுதுவோர் கருத்தில் கொள்ள
வேண்டிய கோட்பாடும் ஆகும். எனவே, ஒரு படைப்பு
என்பது படைப்பாளியாலும் எழுதப் படுகிறது; காலத்தாலும்
எழுதப் படுகிறது. படைப்பாளி, காலம் என்ற இவ்விரண்டின்
கூட்டு முயற்சியே படைப்பு ஆகும்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக