சனி, 15 ஆகஸ்ட், 2015

முட்டாள்தனமாக உளறுவது தமிழ்ப்பற்று ஆகாது!
பித்தகோரஸ் தேற்றமும் சில பித்துக்குளிகளும்!!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------------------------
பித்தகோரஸ் தேற்றத்தை முதன் முதலில் கண்டு 
பிடித்தவர்கள் தமிழர்கள் என்ற ஒரு பொய்ச்செய்தியை 
சிலர் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இந்த மூடத்தனத்தை 
அம்பலப் படுத்தியும் உண்மையை விளக்கியும் நியூட்டன் 
அறிவியல் மன்றம் ஏற்கனவே கட்டுரைகள், சொற்பொழிவுகள் 
மூலம் மக்களுக்கு உணர்த்தி உள்ளது.
**
எனினும், இவ்வாறு கூறுபவர்கள் எவ்விதத் தீய 
நோக்கத்துடனும் (malafide intention) கூறவில்லை 
என்பதனாலேயே அவர்கள் மீது ஒரு மென்மையான 
அணுகுமுறையைக் கையாண்டது நியூட்டன் அறிவியல் 
மன்றம்.
**
இருப்பினும், ஒருவர் மாற்றி ஒருவராக இந்த மூடத்தனத்தை 
விடாமல் பரப்பி வருவதைப் பார்க்க முடிகிறது. முட்டாள்
தனமாக உளறுவது தமிழ்ப்பற்று ஆகாது என்பதை 
அந்தப் பித்துக்குளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
**
பித்தகோரஸ் தேற்றம்: உரிமைகோரல்களும் உண்மையும் 
என்ற தலைப்பில் நியூட்டன் அறிவியல் மன்றம் வெளியிட்ட 
கட்டுரையை இன்று மீண்டும் மறுவெளியீடு செய்து
உள்ளோம். வாசகர்கள் படித்துப் பார்த்து உண்மையை 
உணர வேண்டுகிறோம்.
****************************************************************
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக