வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

2006-2007 காலக்கட்டத்தில் சென்னைத் தொலைபேசியில்
BSNL நிறுவனம் ISDN தொழில்நுட்பம் மூலமாகத்தான்
இணையதள சேவையை வழங்கியது. திரு மாறன்
பெற்ற இணைப்புகள் யாவும் ISDN இணைப்புகள் ஆகும்.
ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில்
எழுதிய கட்டுரையில் திரு மாறன் பெற்ற இணைப்புகள்
64 kbps வேகம் உடையவை என்று குறிப்பிட்டுள்ளார்.
(பார்க்க: The New Indian Express e paper dtd 26 Jan 2015)
**
இந்த 64 kbps வேகம் உடைய இணைப்புகளைத் தான் அதிவேகம்
என்றும் உயர் வேகம் என்றும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
தொலைதொடர்பு தொழில்நுட்பம் பற்றிய அடிப்படைப் புரிதல்
உள்ள எவரும், 64 kbps என்பது நத்தை வேகம் என்பதை
அறிவார்கள். உண்மையில், திரு மாறன் பெற்ற இணைப்புகள்
யாவும் 'குறுகிய அலைவரிசை' (narrow band) இணைப்புகளே.
**
பின்னர்தான், சென்னைத் தொலைபேசியில் 'அகண்ட
அலைவரிசை' (broad band) மூலம் இணையதள சேவை
வழங்கப் பட்டது. இதில் சர்வசாதாரணமாக 100 Mbps
வேகத்தில் சேவை வழங்கப் படுகிறது. இன்று குப்பனுக்கும்
சுப்பனுக்கும் துலுக்காணத்துக்கும் 100 Mbps  வேகத்தில்
சேவை வழங்குகிற  BSNL நிறுவனம், அன்று 2007இல்
திரு மாறனுக்கு வெறும் 64 kbps வேகமுள்ள narrow band
இணைப்புகளைத் தான் வழங்கியது.
**
திரு மாறன் போலி இணைப்பகத்தை (அல்லது கள்ள
இணைப்பகத்தை) நடத்தினார் என்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி
அவர்கள். 1960-70களில் இருந்த STROGER இணைப்பகங்கள்
அல்ல இன்று இருப்பவை; அல்லது 2007இல் இருந்தவை.
மாறிய தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில், எல்லா
இணைப்பகங்களும் மெய்யான இணைப்பகங்களே.
இவை automatic exchanges கூட. (1960-70களில் நிறைய
இணைப்பகங்கள் semi-automatic exchanges ஆகும்)   
**
கள்ள நோட்டு அடிப்பது போல, கள்ள இணைப்பகம்
நடத்த முடியாது. E10B போன்ற நவீன இணைப்பகங்கள்
எப்போதோ வந்து விட்டன. OCB-283 இணைப்பகங்கள்
1993ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் வந்து விட்டன.
இது பிரான்ஸ் நாட்டின் ALCATEL நிறுவனத்தின்
தயாரிப்பாகும். இவற்றின் நவீனப் பதிப்புகளும்,
(modern versions) இவற்றை விட நவீனமான இணைப்பகங்களும் 
எவ்வளவோ வந்து விட்டன.
**
இவை எல்லாம் டிஜிட்டல் இணைப்பகங்கள். இந்த
டிஜிட்டல் தொழில் நுட்பத்தில், பதிவாகாமல்
(unrecorded) கள்ளத்தனமாக யாராலும் ஒரு இணைப்பகத்தை
நடத்த முடியாது. Every activity is recorded and nothing could be
left unrecorded. (இங்கு activity என்பது technical activity யை
மட்டும் குறிக்கும்.)
**
323 ISDN இணைப்புகளும் பயன்படுத்தப் பட்டு இருந்தால்,
அதற்குரிய ஆவணங்கள் (soft copy) கண்டிப்பாக இருக்கும்.
2007இல் சென்னைத் தொலைபேசியில் CDR முறை
கிடையாது.எனவே பில்கள் தயாரிப்பதில்  manual
intervention இருந்தது. அதாவது, பயன்படுத்தப்பட்ட
யூனிட்களுக்கு பில்கள் தயாரிக்காமல் இருந்திருக்க
முடியும். ஆனால், பயன்படுத்தப்பட்ட அத்தனை
யூனிட்களுக்கும் ரெக்கார்டுகள் இருக்கும். எனவே
கள்ள இணைப்பகம் என்பது சாத்தியமில்லை.
**
அடிப்படையான சில அறிவியல் விவரங்களைத்
தெரிந்து கொள்ளாமல், இந்த வழக்கைப் புரிந்து கொள்ள
முடியாது. எனவேதான் மேற்கூறிய அறிவியல்
விளக்கங்கள்.
----------------------------------------------------------------------------------------
கட்டுரை தொடரும்.
*****************************************************************

 
 

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக