ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

பெருமித உணர்வு இருப்பதே சரியானது!
குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை!
--------------------------------------------------------------------------
ஹிட்லரின் வதை முகாம்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
ஹிட்லரின் சொந்த நாட்டு மக்களான ஜெர்மானியர்கள் மட்டும்
40 லட்சம் பேர் சித்திரவதைக்கு உள்ளாயினர் இவர்களில் 75000 பேர்
கொல்லப் பட்டனர். நன்கு கவனிக்கவும்: இது ஜெர்மானியர்கள்
பற்றிய கணக்கு மட்டுமே.
**
யூதர்கள் லட்சக் கணக்கில் கொல்லப் பட்டனர். மனிதகுலம்
கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத அளவு சித்திரவதைகள்.
போரில் பிடிபட்ட ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் கதி பற்றிச் சொல்லி
மாளாது.
**
நாஜிகளாலும் பாசிஸ்டுகளாலும் பல தலைசிறந்த
கம்யூனிஸ்ட் தலைவர்கள் கொல்லப் பட்டனர்;
சிறைப் பட்டனர்.உதாரணம்: ஜூலியஸ் பூசிக், அந்தோனியோ
கிராம்சி, ரோசா லக்சம்பர்க். பட்டியல் நீளும்.
**
இதையெல்லாம் அனுபவ பூர்வமாக உணர்ந்தவர்கள்
பாசிச-நாசிச  எதிர்ப்பு மனநிலையில் இருப்பது இயற்கையே.
செருப்பு எங்கே கடிக்கிறது என்று செருப்பைப் போட்டு
இருப்பவன்தான் உணர முடியும். எனவே,
'ஒருபக்கப் பார்வை'யோடு பார்க்கிறபோது இதை
உணர இயலாமல் போகும்.
**
பாசிச எதிர்ப்புப் போரில் நேரடியாக ஈடுபட்ட ஒவ்வொரு
போல்ஷ்விக், மற்றும் ஒவ்வொரு போர் வீரருக்கும்
பெருமித உணர்வு இருந்தது. நாசகாரத் தீமையை
முறியடித்து, மனிதகுலத்தைக் காப்பாற்றியதால்
ஏற்பட்ட பெருமித உணர்வு அது! அவர்களுக்கு ஏன்
குற்ற உணர்வு இருக்க வேண்டும்?
***********


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக