திங்கள், 3 ஆகஸ்ட், 2015

முதுகெலும்பை முறிக்கும் பதில்-3
-------------------------------------------------------
பின் நவீனத்துவத்தை சிதறடித்த அப்துல் கலாம்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
மார்க்சியம் நவீன தத்துவம் ஆகும். பின் நவீனத்துவம்
மார்க்சியத்துக்குப் பின்னர் வந்தது. எனவே பின்நவீனத்துவம்
என்று பெயர் பெற்றது. பொதுவெளியில் மார்க்சியம்
நன்கு அறியப்பட்ட தத்துவம். ஆனால் பின்நவீனத்துவம்
ஒரு குறுகிய வட்டத்தில் மட்டுமே அறியப் பட்ட தத்துவம்.
**
மார்க்சியம் தன் கொள்கைகளை வெளிப்படையாக
அறிவிக்கிறது. ஆனால் பின்நவீனத்துவம் அப்படி அல்ல.
அது முக்காடு போட்டுக் கொண்டு உலவுகிறது.
**
உலகே மாயம் வாழ்வே மாயம் என்று கூறும் தத்துவமே
பின் நவீனத்துவம். எல்லாத் தத்துவங்களும் தவறானவை
என்கிறது பின்நவீனத்துவம். மக்களிடம் செல்வாக்குப்
பெற்ற தத்துவங்களான மார்க்சியம், பெரியாரியம்,
அம்பேத்கரியம் ஆகிய தத்துவங்களைக் குறிவைத்துத்
தாக்கியது பின்நவீனத்துவம்.
**
சுருங்கக் கூறின், அவநம்பிக்கையை விதைக்கும்
தத்துவமே பின்நவீனத்துவம். அதாவது, இது ஒரு
LIFE NEGATION PHILOSOPHY!
**
இந்திய நாட்டு மாணவர்களையும் இளைஞர்களையும்
சோர்விலும் நம்பிக்கையின்மையிலும் தள்ள  முயற்சி
செய்த பின்நவீனத்துவத்தை அப்துல் கலாம் வெற்றிகரமாக
முறியடித்தார். பின்நவீனத்துவத்துக்கு மாற்றாக, அவர்
LIFE AFFIRMATION PHILOSOPHYஐ முன் வைத்தார்.
நம்பிக்கை வறட்சிக்கு எதிராக, கலாம் நம்பிக்கையை
முன்வைத்தார். கோடிக்கணக்கான இளைஞர்களையும்
மாணவர்களையும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை
கொள்ளச் செய்தார்.
**
1) "கனவு காணுங்கள்" 2) "குறிக்கோளை ஏற்படுத்திக்
கொள்ளுங்கள்"  3) குறிக்கோளை அடையத் தொடர்ந்து
போராடுங்கள் என்ற அவரின் புகழ் மிக்க வாசகங்கள்
மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களை, வாழ்வின்
மீதும் சமூகத்தின் மீதும் தேசத்தின் மீதும் நம்பிக்கை
கொள்ளச் செய்தார்.
**
பின்நவீனத்துவம் கட்டுப்பாடற்ற கலவியைப் பிரச்சாரம்
செய்தது (This includes mating of animals by humans too). இதன் மூலம்
இளைஞர்களைப் பாலியல் சீரழிவுப் படுகுழியில் தள்ள
முயற்சி செய்தது. கலாமின் போதனைகளை ஏற்று,
ஒரு குறிக்கோளை வகுத்துக் கொண்ட மாணவர்கள்
பாலியல் சீரழிவில் இருந்து தடுக்கப் பட்டனர்.
**
அதீத தனிமனிதத்துவத்தை வலியுறுத்தியது பின்நவீனத்துவம்.
இதன் மூலம் குழு மனப்பான்மைக்கான உளவியலுக்குச் 
சேதாரத்தை ஏற்படுத்தியது. ஆனால், அப்துல் கலாம்
குழு மனப்பான்மை, கூட்டு முயற்சி ஆகியவற்றை
எப்போதும் உயர்த்திப் பிடித்தவர்.
**
தொழில்நுட்பப் பணிகள் யாவும் கூட்டு முயற்சியை
(TEAM WORK) கோருபவை. ஒரு ஏவுகணையை விண்ணில்
செலுத்துவது என்றால், ஒரு தனிப்பட்ட ஒருவர்,
எவ்வளவுதான் மேதையாக இருந்தாலும், தனியொருவராக
அதைச் செய்வது சாத்தியம் அல்ல. B.Sc Physics படிக்கத் 
தொடங்கிய காலத்தில் இருந்தே  team work மீது நம்பிக்கை 
உடைய கலாம், மாணவர்களிடம் integrated efforts மீது 
நம்பிக்கை கொள்ளச் செய்தார்.
** 
இவ்வாறு தமது பேச்சு, எழுத்து, செயல் ஆகியவற்றின் 
மூலம் பின் நவீனத்துவம் மாணவர்களிடம் செல்வாக்குப் 
பெறாமல் தடுத்து அதைச்  சிதறடித்தவர் கலாம். இதனால் 
தான் மிகுந்த வன்மத்துடன் பின்நவீனத்துவம் கலாம்
மீது கல் எறிகிறது.ஒரு எய்ட்ஸ் நோயைப் போல் 
தமிழ்நாட்டில் பின் நவீனத்துவத்தைப் பரப்பிய பேரா 
அ மார்க்சும் அவரின் குட்டி முதலாளித்துவச் சீடர்களும் 
மிகுந்த வன்மத்துடன் கலாம் மீது கல் எறிவதற்கு 
இதுதான் காரணம்.
********************************************************************
  
        
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக