திங்கள், 24 ஆகஸ்ட், 2015

திரு ராஜ்கௌதமன் கட்டுப்பாடற்ற கலவியை
ஆதரிக்கும் பின்நவீனத்துவப் பிரச்சாரகர். இவர்
ஆதரிக்கும் கட்டுப்பாடற்ற கலவியில் mating animals
by humans என்பதும் உள்ளடக்கம்.இதை ஏற்பதற்கில்லை.
**
இலக்கியம் என்பது காலத்தைக் காட்டும் கண்ணாடியும் ஆகும்.
கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம்
அக்கால நிலவுடைமைச் சமூக அமைப்பின் குறுக்குவெட்டுத்
தோற்றத்தைக் காட்டுகிறது. சமூகத்தின் பிரதிபலிப்பே இலக்கியம்.
குறை கண்ணாடியில் இல்லை. எனவே, கண்ணாடியின் மீது
குறைகாண்பது ஏற்புடைத்தன்று.
**
ஒருபுறம் வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ள நிலப்பிரபுத்துவச்
சமூகம். மறுபுறம், அதே காலத்தில் செல்வாக்குப் பெற்று வரும்
பௌத்த சமண மதங்கள். இவ்விரண்டையும் சிலம்பு
காட்டுகிறது. திருமண உறவுக்கு அப்பால் மேற்கொள்ளும்
உறவைப் பிழையுறு காமம் என்கிறது பௌத்தம். அதில்
பிழையில்லை என்கிறது நிலப்பிரபுத்துவப் பண்பாடு.
இம்முரண்பாட்டையே இளங்கோவடிகள் எடுத்துரைக்கிறார்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக