வியாழன், 31 அக்டோபர், 2019


அறிவியலுக்கு வர்க்கச் சார்பு கிடையாது!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
1) இந்தக் கட்டுரை அறிவியல் சார்ந்த ஒரு விஷயத்தைத்
தெளிவு படுத்துவதற்காக எழுதப்பட்டது.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கவல்ல
தொழில்நுட்பம் என்ன? அது இந்தியாவில் உள்ளதா?
இந்தக் கேள்விக்கு அறிவியலின் விடை என்ன என்பதைச்
சொல்வது மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம்.

2) அறிவியல் அறிவே இல்லாத சில மலினமான
அரசியல்வாதிகள் கூறுவது போல, அணுஉலைத்
தொழில்நுட்பம் போன்ற அதிஉயர் தொழில்நுட்பம்
எதுவும் தேவையில்லை என்று இக்கட்டுரை நிரூபிக்கிறது.
நியூட்டன் காலத்திய எளிய இயந்திரவியல் தொழில்நுட்பமே
(simple mechanics) போதுமானது என்றும் அது இந்தியாவில்
உள்ளது என்றும் இக்கட்டுரை நிரூபிக்கிறது.

3) இதில் ஆளும் வர்க்கக் குரல் கேட்கிறது என்று சொல்லுவது
அறிவியலுக்கு எதிரான பிற்போக்குக் கருத்தாகும்.
Psycho analysis செய்யும் உளவியல் மருத்துவரிடம் நோயாளிகள்
தங்கள் காதில் அடிக்கடி ஒரு குரல் கேட்பதாகக் கூறுவதுண்டு.
அதை போன்றதுதான் சிலருக்கு மட்டும் கேட்கும்
ஆளும் வர்க்கக் குரல்.

4) மீட்பு முயற்சி ஏன் தோல்வியுற்றது என்பதைக்
காரணங்களுடன் விளக்குகிறது இக்கட்டுரை. அதைத்
தாண்டிய வேறு காரணம் எதுவும் இல்லை.

5) தோல்விக்கான காரணத்தைக் கூறுகையில்,
stress tensor பற்றி இக்கட்டுரை குறிப்பிடுகிறது. stress tensor
என்பது ஒரு இயற்பியல் விஷயம். எனவே பரந்துபட்ட
வாசகர்கள் அதைப் புரிந்து கொள்வது கடினம். ஏனெனில்
stress tensor பற்றி புரிந்து கொள்ள வேண்டுமெனில்,
ஒருவர் TENSOR ALGEBRA படித்திருக்க வேண்டும்.
துரதிருஷ்ட வசமாக TENSOR ALGEBRA என்பது இந்தியப்
பல்கலைக் கழகங்களில் M.Sc Physics படிப்பிலும்
B.Tech படிப்பிலும் மட்டுமே சொல்லித் தரப் படுகிறது.

6) STRESS TENSORஐப் புரிந்து கொள்ளாமல் இக்கட்டுரையைப்
படித்தால் பிறழ்புரிதல்தான் ஏற்படும். நிற்க.

7) மார்க்சிய மூல ஆசான்களில் ஒருவரான ஸ்டாலின்
அறிவியலைப் பற்றி மிகத் தெளிவாக ஒன்றைக்
குறிப்பிடுகிறார். " அறிவியலுக்கு வர்க்கச் சார்பு
கிடையாது" என்கிறார் ஸ்டாலின். "பூர்ஷ்வா ரயில்
என்றோ பாட்டாளி வர்க்க ரயில் என்றோ எதுவும்
கிடையாது" என்கிறார் ஸ்டாலின். எனவே இந்த அறிவியல்
கட்டுரையில், ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கான
தீர்வு என்ன என்பதை மட்டும் சொல்லும் இக்கட்டுரையில்
ஆளும் வர்க்கக் குரல் கேட்பதாகக் கூறுவது
மார்க்சியத்துக்கு எதிரானது. தங்களை அறியாமலேயே
பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்கு இரையானவர்கள்
மட்டுமே அப்படிக் கருத இயலும்.
-------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக