புதன், 23 அக்டோபர், 2019

ரூபாய் இரட்டிப்பு மோசடியில் சிக்கிய
கலைஞரின் பேரன் ஜோதிமணி!
---------------------------------------------------------
ஜோதிமணி என்பவர் கலைஞரின் மகள் செல்வியின்
மருமகன். இவர் அண்மையில் ஒருவரிடம்
ரூபாய் நோட்டு இரட்டிப்பு போன்ற ஒரு வகை
மோசடி செய்து ரூ 80 லட்சம் பணத்தை அபகரித்துக்
கொண்டார் என்று செய்திகள் வருகின்றன.

போலீசார் விசாரித்ததில் கலைஞரின் பேரன்
ஜோதிமணி இந்தக் குற்றத்தைச் செய்தது
உறுதியாகி உள்ளது.

என்றாலும் ஜோதிமணியைக் கைது செய்து
சிறையில் அடைக்க எடப்பாடியின் போலிஸ்
தயாராக இல்லை. ஊடகங்களும் கனத்த
மௌனம்!

இந்நிலையில் முரசொலி ஏட்டில் கலைஞரின் மகள்
செல்வியும் அவரின் கணவர் செல்வமும் இணைந்து
ஓர் அறிக்கையைக் கொடுத்துள்ளனர்.

தங்களின் மருமகன் ஜோதிமணியின் எந்த செய்கைக்கும்
தாங்கள் பொறுப்பல்ல என்று அவர்கள் அறிவித்து
உள்ளனர்.

முரசொலியில் வெளியான இந்த அறிவிப்பு மூலம்
ஜோதிமணியின் கிரிமினல் குற்றம் உறுதிப் படுகிறது.
என்றாலும் பொதுவெளியில் இந்தச் செய்தியை
அப்படியே அமுக்கி விட ஊடகவியலாளர்கள் உறுதி
பூண்டுள்ளனர்.

Investigative journalism என்பதெல்லாம் பொய் என்று
ஊடகவியலாளர்கள் நிரூபிக்கின்றனர்.
-----------------------------------------------------------------------------

119 வயதில் நேதாஜி அவர்கள் உயிருடன் இருப்பதாக
வைகோ பேசினார் என்று வந்த செய்தியின்
அடிப்படையில் வைகோ அவர்களைக் குறிப்பிட
வேண்டி உள்ளது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்
என்றும் வைகோ பேசி வருகிறார்.

வைகோவுக்கு உண்மை என்ன என்று நன்கு தெரியும்.
இருந்தும் உண்மையையே ஏன் மறைக்க வேண்டும்?

நேத்தாஜியும் தேவரும்!
----------------------------------
போர்முனைக்குச் சென்ற பிறகு நேதாஜியை
தேவர் அவர்கள் சந்தித்து இருப்பதற்கான வாய்ப்பு
இல்லை. அதற்கு முன்பு இருவரும் சந்தித்ததில்
ஆச்சரியம் இல்லை.

விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டார் என்ற
செய்தி பொய் என்று தேவர் அவர்கள் அறிவார்.
அதைஅவர் நன்கு உறுதிப் படுத்திக் கொண்ட
பின்னரே, நேத்தாஜி உயிருடன் இருப்பதாக அவர்
அறிவித்தார்.

போர் முடிவடைந்து, ஜப்பான் சரண் அடைந்தபோது
நேதாஜி சரண் அடையவில்லை. தமக்குப் பாதுகாப்பானது
என்று அவர் கருதிய மஞ்சூரியா வழியாக ரஷ்யா சென்று
ஸ்டாவினைச் சந்திக்க முடிவு செய்தார். ரஷ்யா சென்றார்;
சிறைப்பட்டார்; மடிந்தார்.

போர் முடிவடைந்த பின்னர் அவர் இந்தியாவுக்கு
வரவில்லை. ஏனெனில் இந்தியா அதாவது பிரிட்டிஷ்
இந்தியா அவரை வேட்டையாடக் காத்திருந்தது.
எனவே போர் முடிந்த பின்பு, தேவர் அவர்கள்
நேத்தாஜியைச் சந்தித்திருக்க வாய்ப்பு இல்லை.

அப்படிச் சந்தித்து இருந்தால் அது எப்படி சாத்தியம்
என்று தேவர் அவர்கள் கூறியிருந்தால் அல்லாமல்
நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் தேவர் அவர்கள்
அப்படி எந்த ரகசியத்தையும் வெளியிடவில்லை.

எனவே நேத்தாஜி உயிருடன்தான் இருக்கிறார் என்ற
செய்தியை, அரசின் அறிவிப்புக்கு எதிரான ஒரு செய்தியை
மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக,
தேவர் அவர்கள் உயர்வு நவிற்சியாகச் சொல்லி
இருக்கலாம் என்பதே நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
கருத்து. இதுதான் உண்மை!   .


பாஜக காங் புரிந்துணர்வு
ஒப்பந்தம்! ஹெட் கிளார்க் லெவல் 
லஞ்சத்தை ப சி வாங்கியதாக
நீர்த்துப்போன குற்றப்பத்திரிகை!
விளைவு: ப.சி.க்கு ஜாமீன் கிடைத்தது! 
வெறும் ரூ 10 லட்சம்    என்று

சோவியத்தைப் பொறுத்த மட்டில்
நேதாஜி பாசிச முகாமைச் சேர்ந்த ஒரு தளபதி.
அவர் ஒரு கொடிய பாஸிஸ்ட். இதுதான் நேத்தாஜி
பற்றிய சோவியத்தின் மதிப்பீடு! வேறு என்ன மதிப்பீடு
சோவியத்திற்கு இருந்திருக்க முடியும்?

வாங்கிய லஞ்சம் வெறும் ரூ 9.75 லட்சம்தானா?
இது ஹெட் கிளார்க் லெவலிலேயே வாங்கக்கூடிய
லஞ்சம் ஆயிற்றே! இதற்கா சிதம்பரத்தைக்
கைது செய்வது என்று கருதிய உச்சநீதிமன்றம்
உடனே ஜாமீன் வழங்கி விட்டது.
எல்லாம் MoU செய்த மாயம்!

அந்தக் காலத்தில் விஜய லட்சுமி பண்டிட் அதை
வெளிப்படையாகச் சொல்லி, அது அக்கால
ஏடுகளில் வெளிவந்து, ஜவகர்லால் நேரு
அவரைக் கண்டித்து வாயை மூடிக் கொண்டு
இருக்குமாறு கூறி விட்டார். அதன் பிறகு
விஜயலட்சுமி அதைப்பற்றிப் பேசவே இல்லை.

அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
உண்மையே.

பணத்தைப் பறிகொடுத்த தொழிலதிபர்,
செல்வியின் கணவரிடம் சென்று பணத்தைத்
திருப்பித் தருமாறு கேட்டதாகவும் அதற்கு
மருமகனிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்
என்று செல்வியின் கணவர் கூறியதாகவும்
செய்திகள் வந்துள்ளன. அதனால்தான் இந்த அறிவிப்பு.


கருணாநிதி குடும்பத்தின் யோக்கியதை பாரீர்!
--------------------------------------------------------------------------
லஞ்சமும் ஊழலும் நிதி மோசடியும்
அடுத்தவன் பணத்தை அபகரிப்பதுமே
இந்தக் குடும்பத்தின் தொழில் என்று ஆகி விட்டதா?

இன்னும் இந்த மோசடியைச் செய்த கருணாநிதியின்
பேரன் ஜோதிமணியை கைது செய்யவில்லை!
அவன் மீது கைவைக்க தமிழ்நாடு போலீசுக்குத்
துணிவு இல்லை!

இந்த மோசடியைப் பற்றி எழுத
ஊடகத் தறுதலைகளுக்கும் பயம்!

புழுவினும் இழிந்த ஈனப்பயல்கள்!
******************************************

போலி மருந்து தயாரிப்பு வழக்கு!
கலைஞரின் பேரன் ஜோதிமணிக்கு உள்ள தொடர்பு!
குமுதம் ஏடு செய்தி!
----------------------------------------------------------------------------------
சிலஆண்டுகளுக்கு முன்பு போலி மருந்து ஊழல்
தமிழகத்தை உலுக்கியது.

உயிர் காக்கும் மருந்துகள் உட்பட பல்வேறு
போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு
மருந்துக் கடைகளுக்கும் மருத்துவமனைக்கும்
அனுப்பப் பட்டன.

இது கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு மருந்துக்
கடைகளிலும் மருந்து குடவுன்களிலும்
ரெயிடுகள் நடந்தன. ஒரு சிலர் கைது செய்யப்
பட்டனர்.

ஆனால் அரசியல் செல்வாக்குள்ள நபர்களால்
இந்த வழக்கு அப்படியே அமுக்கப் பட்டது.

இந்த போலி மருந்து தயாரிப்பு விவகாரத்தில்
கலைஞரின் பேரன் ஜோதிமணியின் பெயர்
அடிபட்டது. ஜோதிமணி ஒரு டாக்டர் என்பது
குறிப்பிடத் தக்கது.

தற்போது ரூ 80 லட்சம் நோட்டு இரட்டிப்பு மோசடியில்
சிக்கியுள்ள கலைஞரின் பேரன் ஜோதிமணியின்
மீது CB CID போலீசார் போலி மருத்துத் தயாரிப்பு
குறித்தும் விசாரிக்க உள்ளனர்.

இந்த வழக்கை CBI விசாரிப்பது நல்லது.

குமுதம் ஏட்டின் செய்தியைப் படிக்குமாறு வேண்டுகிறோம்.
******************************************************  

தமிழ் சமஸ்கிருதம் தெலுங்கு கன்னடம்
மலையாளம் ஒடியா ஆகிய ஆறு மொழிகளும்
செம்மொழிகளாக இந்தியாவில் அங்கீகரிக்கப்
பட்டவை!
  
============================================
ஸ்டாலின் மிசாவில் கைதானாரா?
ராஜஸ்தான் அரசு என்ன சொல்கிறது?
------------------------------------------------------------
மு க ஸ்டாலின் மிசாவில் கைதானாரா என்று
தமிழ்நாட்டில் விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது.
ஆனால் மிசா பற்றி  ராஜஸ்தான் என்ன சொல்கிறது?  

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
அசோக் கெலாட் முதல்வராக இருக்கிறார்.
இவருடைய அமைச்சரவை தற்போது மிசா பற்றி
ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அது என்ன?

ராஜஸ்தானில், நெருக்கடி நிலைக்காலத்தில், மிசா
சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம்
அனுபவித்தவர்களுக்கு ராஜஸ்தான் அரசு பென்ஷன்
வழங்கும் நடைமுறை உள்ளது. இந்த பென்சன்
பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

மாதம் ரூ 20,000 பென்ஷனாகவும் ரூ 4000 மருத்துவச்
செலவுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பென்ஷனை
ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு தற்போது
நிறுத்தி விட முடிவு எடுத்துள்ளது.

முதல்வர் அசோக் கேளாட்டின் இந்த முடிவு
மிகவும் கயமைத் தனமான ஒரு முடிவாகும்.
நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடி
மிசாவில்  சிறை சென்றவர்கள் இரண்டாம் சுதந்திரப்
போராட்ட வீரர்களே.  அவர்களுக்கு இதுவரை
வழங்கப்பட்டு வந்த பென்ஷனை நிறுத்துவது
அநியாயம்.

அவர்களில் பலர் ஏற்கனவே இறந்து விட்டார்கள்.
உயிருடன் இருக்கும் சிலருக்கு மட்டும் வழங்கும்
இந்த பென்ஷனை நிறுத்தும் முடிவு மிகுந்த
கயமைத் தனமானது. இதை வன்மையாகக்
கண்டிக்கிறோம்.
**************************************


  .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக