திங்கள், 14 அக்டோபர், 2019


உத்தியை மாற்றும் சீமான் புத்திசாலியே!
---------------------------------------------------------------
ஆட்சியைத் தக்க வைப்பது அதிமுகவின் நோக்கம்;
ஆட்சியைப் பிடிப்பது திமுகவின் நோக்கம். ஆனால்
சீமானின் நோக்கம் இந்த இரண்டும் அல்ல; அவரின்
நிகழ்ச்சி நிரலில் ஆட்சி என்பதெல்லாம் கிடையாது.

திமுக அதிமுகவின் உத்திகளும் திட்டங்களும்
தமிழ்நாட்டு மக்களை அடிப்படையாகக் கொண்டு
வகுக்கப் படும். சீமானின் உத்திகளும் திட்டங்களும்
ஈழத் தமிழர்களை அடிப்படையாகக் கொண்டு
வகுக்கப்படும்.

இதுவரை வந்து கொண்டிருந்த பணம் தொடர்ந்து வர
வேண்டும் என்பது மட்டுமே அவரின் ஒரே நோக்கம்.
அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்
காய் நகர்த்துகிறார்.

நெடுமாறன் வைகோ வகையறாக்கள் கடைப்பிடித்த
உத்தி என்பது புலிகள் ராஜீவைக் கொல்லவில்லை
என்பது. இந்த உத்தி தற்போது காலாவதி ஆகிவிட்டது.
காலத்தை வென்று நிற்கும் உத்தியா அது? இல்லையே.

எனவே உத்தியை மாற்றுகிறார் சீமான். "ஆமடா,
நாங்கதான் ராஜீவைக் கொண்ணு புதச்சோம்"
என்று உண்மையை வெளிப்படையாக ஒத்துக்
கொள்வதே இன்று ஈழ மக்களால், புலம் பெயர்ந்த
ஈழத்தவர்களால் விரும்பப் படுகிறது. இலங்கையின்
அரசியல் சூழல் இத்தகைய உத்தியைக்
கைக்கொள்வதே ஆதாயம் என்று உணர்த்துகிறது.

"ராஜீவைப் புலிகள் கொள்ளவில்லை".... இது பழைய உத்தி.
"ராஜீவைப் புலிகள்தான் கொன்றனர்"....இது புதிய உத்தி.
அவ்வளவுதான். பழைய உத்தி காலாவதி ஆகிவிட்டது.
எனவே புதிய உத்தி தேவைப் படுகிறது.  

பழைய உத்தி பயன் தரவில்லை; பண வரத்து
வெகுவாகக் குறைந்து விட்டது. புதிய உத்தி
பணவரத்தை உறுதிப்படுத்தும்.   

இதை நன்கு உணர்ந்து கொண்ட சீமான், ராஜீவை
நாங்கள்தான் கொன்றோம் என்று உரக்கச் சொல்வதன்
மூலம் ஈழத்தமிழர்களின் கவனத்தைத் தன்பால்
ஈர்க்கிறார். இது ஒரு மாபெரும் கவன ஈர்ப்பு ஆகும்.
இதற்கு உரிய பணப்பலனையும் அவர் பெறுவார்.
         

எழுவர் விடுதலையில், அந்த ஏழு பெரும் விடுதலை
ஆகாமல் இருக்கும் நிலைமை என்பது ஒரு
பொன்முட்டை இடும் வாத்து போன்றது. யாராவது
பொன்முட்டை இடும் வாத்தை அறுப்பார்களா?

எழுவர் விடுதலை சாத்தியம் அற்றது. அதற்குக் காரணம்
இந்தியர்களான நளினி பேரறிவாளன் விடுதலையுடன்
இந்தியர் அல்லாத வெளிநாட்டு ஆட்களான முருகன்
போன்றோரின் விடுதலையையும் சேர்த்துக் குழப்புவது.
இதைப் பல ஆண்டாக நான் சொல்லி வருகிறேன்.
  . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக