சொல் என்பது பொருளை உள்ளடக்கியது.
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்பதுதான்
சொல்லுக்கான இலக்கணம்.
"நடுநிலையை இழந்து நிற்கிறது"; "நடுநிலை நீப்பம்"
என்பன தொடர்கள். இவை சொல்லின் பொருளை
விளக்குவன. இவை சொற்கள் ஆகா.
துறவு என்பது ஒரு சொல். எதைத் துறந்தால் துறவு ஆகும்?
இகலோக வாழ்வைத் துறப்பதே துறவு.
என்றோ நிகழ்ந்த சொல்லாக்கத்தின்போது, துறவு என்றே
அச்சொல் ஆக்கப்பட்டது. இகவாழ்வுத் துறப்பு என்று
அச்சொல் ஆக்கப்படவில்லை.
அதே போல் நீப்பம் என்றே இச்சொல்லை ஆக்கி உள்ளேன்.
நடுநிலை நீப்பம் என்றெல்லாம் சொல்லாக்கம்
நிகழ்வதில்லை.
----------------------------------------------------------------------------------------
ஒரே நாடு ஒரே கட்சி ஒரே மொழி!
சீனாவில் இதை எப்படி சாத்தியம் ஆக்கினீர்கள்?
சீன அதிபர் ஜிங் பிங்கிடம் மோடி கேள்வி!
---------------------------------------------------------------------------
அரவிந்த் கேஜ்ரிவால்! பத்து வருஷத்துக்கு முன்பு
இந்தப் பெயரை இந்திய அரசியலில் எவரும் கேள்விப்
பட்டதில்லை. ஆனால் இந்தப் பத்து வருஷத்துக்குள்
கேஜ்ரிவால் ஒரு கட்சியை ஆரம்பித்து விட்டார்.
தேர்தலில் போட்டியிட்டு முதல்வரும் ஆகி விட்டார்.
எல்லாம் பத்து வருஷத்துக்குள் நடந்து விட்டது.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி என்று ஒருவர்.
YSR காங்கிரஸ் என்று ஒரு கட்சியை ஆரம்பித்தார்.
இன்று அவர் ஆந்திர முதல்வராகி விட்டார்.
இந்தியாவில் பல கட்சிகள் 1980க்குப் பிறகு, 1990க்குப்
பிறகு, 2000த்துக்குப் பிறகு என்று ஆரம்பிக்கப்பட்ட
புதிய கட்சிகளே. மாயாவதி கடசி ஆரம்பித்து உபியில்
ஐந்து முறை முதல்வர் ஆகி விட்டார். முலாயம் சிங்கும்
அகிலேஷுமாக அப்பனும் மகனும் முதல்வர் ஆகி
விட்டார்கள். இவர்களின் கட்சிகள் அனைத்தும்
புதிய கட்சிகளே.
ஆனால் சீனாவில் இப்படி யாரும் கட்சி ஆரம்பித்து
விட முடியாது. சீனாவில் ஒரு கட்சி ஆட்சிமுறைதான்.
1949 முதல் சீனாவில் ஒரு கட்சி மட்டும்தான். அங்குள்ள
ஒரே ஒரு கட்சி CPC எனப்படும் சீனக் கம்யூனிஸ்ட்
கட்சி மட்டும்தான். இந்த உண்மை மிகப் பலருக்குத்
தெரியாது. 150 கோடி மக்களுக்கும் சேர்த்து
ஒரே ஒரு கடசிதான்.
சீனாவில் ஒரு மொழி மட்டும்தான் ஆடசிமொழி.
மாண்டரின் எனப்படும் சீன மொழியே அங்கு
ஆட்சி மொழி. தமக்குள் வேறுபட்ட பல்வேறு
கிளை மொழிகளைக் கொண்டது சீன மாண்டரின்
மொழி. அவை அனைத்தையும் ஒன்றிணைத்து
ஒற்றை மொழியாக மாண்டரின் மொழி சீனாவின்
ஆட்சி மொழியாக உள்ளது.
சீனப் பிரதமரை மோடி வியப்புடன் பார்க்கிறார்.
எப்படி ஐயா உங்கள் நாட்டில் 150 கோடி மக்கள்
இருந்தும் ஒரே ஒரு கடசி மட்டும் இருக்கிறது
என்று கேட்கிறார். அதற்கு சீனப் பிரதமர் என்ன
சொன்னார்? நாளை பார்ப்போம்.
*******************************************
கேஜ்ரிவால் சீனாவில் பிறந்து சீனாவில்
வாழ்ந்திருந்தால் அங்கு அவரால் கடசி ஆரம்பிக்க முடியுமா?
அரக்கன் தமிழ்ச்சொல்லே. மனிதனை விட உடல் வலிமை
மிகுந்திருப்பவனும் அதே நேரத்தில் மனிதனை விட
அறிவாற்றலில் குறைந்தவனுமே அரக்கன் எனப்பட்டான்.
அதாவது அரக்கன் என்பவன் ஒருவகைக் காட்டு மிராண்டி.
அரக்கன்= ஆண்பால்;
அரக்கி = பெண்பால்.
அரக்க குணம் = ஈவிரக்கமற்ற கொடூரமான மிருக
பலத்துடன் எதையும் அழிக்கும் குணம்.
தூய தமிழ்ச்சொல் என்றுஅறுதியிட்டுக் கூறுவது
வேர்ச்சொல் ஆய்வு மேற்கொண்ட பிறகே இயலும்.
எனினும் இதை திசைச்சொல்லாக ஏற்கிறேன்.
(தமிழ்ச்சொற்கள் நான்கு வகையின;
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்)
அரக்கன் என்பதை திசைச்சொல்லாக ஏற்கலாம்.
ஏனெனில் தொன்மக் கதைகளில்தான் அரக்கன்
வருகிறான்.
தமிழில் வந்து வழங்கும் திசைச்சொற்கள் அனைத்தும்
தமிழ்ச் சொற்களே என்கிறார் தொல்காப்பியர்.
எனவே திசைச்சொல்லான அரக்கன் தமிழ்ச்சொல்லே.
அரக்கன், அரக்கி, அரக்கர், அரக்கர்கள், அரக்கியர்,
அரக்கர்கோன் என்று வருக்கச் சொற்கள் ஏராளம்.
பிற மொழிச் சொல்லாக இருப்பின், இத்தனை வருக்கச்
சொற்கள் உண்டாகி இரா.
எனவே இது தமிழ்சசொல்லே.
இந்திய சுதந்திரம் 1947ல்.
1947 முதல் 2019 வரையிலான (both inclusive)
எண்களின் கூட்டுத்தொகை என்ன?
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக