திங்கள், 21 அக்டோபர், 2019

ஆல்பிரட் நோபல் இன்று பிறந்தார்!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
ஆல்பிரட் நோபல் (Alfred Nobel 21 Oct 1883-10 Dec 1896) இன்றுதான்
(21 அக்டோபர்) பிறந்தார். இவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த
ஒரு வேதியியல் பொறியாளர்.

இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தமது திரண்ட
சொத்துக்களை தானமாக வழங்கி நோபல் பரிசுகளை
ஆண்டுதோறும் வழங்கச் செய்தார்.

இவரின் கண்டுபிடிப்புகள் பல நூற்றுக்கணக்கில்.
பிரதானமாக பின் வரும் இரண்டு:
1) டைனமைட் (dynamite)
2) ஜெலிக்னைட் (Gelignite)
இவை இரண்டும் வெடிபொருட்கள்.

சுரங்கம் தோண்டுதல், கல் குவாரிகள் அமைத்தல்,
கட்டிடங்கள் கட்டுதல் ஆகிய தொழில்களில்
இவரின் டைனமைட், ஜெலிக்னைட் ஆகியவை
பயன்பட்டன. 

பிரசித்தி பெற்ற போபர்ஸ் பீரங்கித் தொழிற்சாலை
இவர் நிறுவியதே.

1901 முதல் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இயற்பியலில் முதல் நோபல் பரிசு எக்ஸ்ரேயைக்
கண்டுபிடித்த ரியன்ட்ஜென்னுக்கு (Roentgen)
வழங்கப்பட்டது.         

தமது திரண்ட சொத்துக்களை மானுட நன்மைக்காக
அர்ப்பணித்த நோபல், வரலாற்றின் தலைசிறந்த
மானுடர்களில் ஒருவர்.
********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக