சனி, 5 அக்டோபர், 2019

இது கல்வி சார்ந்த பதிவு அல்ல. இப்பதிவு
கல்வியைப் பற்றிப் பேசுவதல்ல.

முதலாளித்துவமும் பாட்டாளி வர்க்கமும்
ஒரே தளத்தில் இயங்குபவை (coplaner).
எனவே முதலாளித்துவம் பற்றி அறியாமல்
பாட்டாளி வர்க்கம் ஜீவிக்க இயலாது. எனவேதான்
மார்க்ஸ் முதலாளிய சமூகத்தை ஆராய்ந்து
மூலதனம் நூலை எழுதினர்.

பகவத் கீதையும் பொருள்முதல்வாதமும் ஒரே
தலத்தில் இயங்குபவை. அதாவது அவை இரண்டும்
coplaner. எனவே பகவத் கீதையை அறியாமல்
பொருள்முதல் வாதம் ஜீவிக்க முடியாது. வாகை
சூட முடியாது.

COPLANER FORCES என்றால் என்ன என்று அறிந்து
கொள்ளும்போதுதான் இந்தப் பதிவை விளங்கிக்
கொள்ள இயலும்.

பொருள் முதல் வாதிகளுக்குத்தான் இந்த
அவசியம். கருத்துமுதல் வாதிகளுக்கு
அப்படி எவ்வித அவசியமும் இல்லை.


ஈவேரா உடைமை வர்க்கச் செயல்பாட்டாளர்.
அவரின் சகல செயல்களையும் இயக்கியது
அவரின் தனியுடைமைச் சிந்தனையே.
தனியுடைமைச் சிந்தனை ஒருபோதும்
சமத்துவத்தைப் பெருத்த தராது.
அது எப்போதுமே சமத்துவத்துக்கு எதிரானது.


நாங்களெல்லாம் பெருங்குரல் எடுத்துக்
கத்திக் கூச்சல் போட்டு தேர்வாணையத்தின்
கவனத்தை ஈர்த்தோம். எனவே COPYINGஐ
தடுக்கும் பொருட்டு ONLINE தேர்வு வந்தது.
இது ஓரளவு COPYINGஐ குறைத்தது.

தற்போது அடுத்து நடைபெற உள்ள தேர்வை
நடத்தும் பொறுப்பை TCS (Tata Consultancy Services)
நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது தேர்வாணையம்.
இது நிச்சயமாக எங்களுக்கு கிடைத்த வெற்றி.

இவ்வாறு நாங்களேதான் போராடி நாங்களே
வெற்றி அடைய வேண்டும் என்ற நிலை உள்ளது.
எந்த எம்பியும் பேப்பர் படிக்க மாட்டான்.
விஷயங்களைத் தெரிந்து கொள்ள மாட்டான்.
ஒரு லட்ச ரூபாய் மாதச் சம்பளமும் சலுகைகளும்
வாங்கி கொண்டு குடித்துக் கும்மாளம் போட்டுக்
கொண்டு கிடப்பான்.

எந்த எம்பியையும்  நான் போய்ப் பார்க்க
வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
பாராளுமன்றம் ஒரு பன்றித்த தொழுவம் என்ற
லெனினிய போதனையில் ஊன்றி நிற்கும்
நாங்கள் ஏன் எம்பியைப் போய்ப் பார்க்க
வேண்டும்?

உதயநிதிக்கு இந்த விஷயம் ஏதாவது தெரியுமா?
நயன்தாரவைப் பற்றித்தான் அவருக்குத் தெரியும்.
அவரிடம் போய் யாராவது இதைச் சொல்லி
அவருக்குப் புரிய வைக்க முடியுமா?
மனச் சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.
இவர்களால் சமூகத்திற்கு என்ன பயன்?

நியூட்டன் அறிவியல் மன்றத்தில் குறைந்தது
நூறு பேரை பாஸ் பண்ண வைக்க முடியும்.
உதயநிதியால் என்ன முடியும்?

        


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக