திங்கள், 14 அக்டோபர், 2019

கலைஞர் மறைந்திருக்கலாம். ஆனால் அவரின்
மஞ்சள் துண்டு என்ற அசிங்கம் நிலைத்து விட்டது.
ஆன்மிகக் கயவர்களின் போலிச் சாமியார்களின்
அடையாளமான மஞ்சள் துண்டு இன்று
போலிப் பகுத்தறிவின் சின்னம் ஆகி விட்டது.

சாமி கும்பிடுவது இழிவு என்ற சிந்தனை மேலோங்காமல்
தடுக்கும் தடையாக போலிப் பகுத்தறிவு உள்ளது.
போலிப்பகுத்தறிவை முறியடிக்காமல் மெய்யான
நாத்திகம் முன்னுக்கு வராது.   

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.


ஸ்டாலின் அவர்களும் கலைஞர் அவர்களும்
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் துர்கா
அம்மையார் கேட்கவில்லை என்றால் நீங்கள்
சொல்வது சரியே. ஆனால் உண்மை அப்படி இல்லை.

கலைஞரே மஞ்சள் துண்டை நிரந்தரமாக

mathusoothanan  தமிழச்சி

மதுசூதனன் ஏதோ பன்மொழிப்புலவர் என்பது போல
மிகைமதிப்பீடு செய்துள்ளீர்கள். அவரை நான் நன்கறிவேன்.
அவருடன் பழகி இருக்கிறேன். மொழிபெயர்ப்புத் திறன்
வாய்க்கப்பெற்றவர அல்லர் அவர். ஊமைகள் மத்தியிலே
உளறுவாயன் சண்டப் பிரசண்டன் என்பது போலத்தான் அவர்.
தெலுங்கு அவரின் தாய்மொழிதானே!

ராஜிவ் காந்தியைக் கொன்றது நாங்கள்தான்!
சீமான் ஒப்புதல் வாக்குமூலம்!
சீமான் பேசிய பேச்சு இதுதான்!
--------------------------------------------------
ராஜிவ் காந்தி என்கிற என் இனத்தின் எதிரியை 
தமிழர் தாய்நிலத்தில் கொன்று புதைத்தோம்.
ஆமடா அது சரிதாண்டா! போங்கடா !

(விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சீமான்!
நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய போது).

சரியான விடையும் விளக்கமும்!
------------------------------------------------
விடை: 120 சொற்கள் அமைக்கலாம்.

இது permutation ஆகும்.
எனவே 6x5x4 = 120.

seemaan paiththiyam alla.


சீமான் பைத்தியம் அல்ல. அவர் தெளிவாகத்தான்
பேசுகிறார். நல்ல உணர்வுடன்தான் பேசுகிறார்.
அவருக்குச் சில உண்மைகள் தெரியும். அதனால்
அவர் பேசுகிறார். தனக்குத் தெரிந்த உண்மைகளை
அவர் பேசுவதில் என்ன தவறு?


பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்று
நெடுமாறன், வைகோ சொன்னபோது
மௌனம் காத்தவர்கள் இன்று சீமான் உண்மை
கூறும்போது குதிப்பது ஏன்? 


இறந்து போன பிரபாகரனை உயிரோடு இருக்கிறார்
என்று ஈழத்தரகர்கள் நெடுமாறனும் வைகோவும்
வாய் கூசாமல் பொய் சொல்லும்போது அதைக்
கண்டித்தவர்கள் எத்தனை பேர்? எல்லோருமே
வாயில் கொழுக்கட்டை வைத்து இருந்தவர்கள்தானே!

ராஜிவ் காந்தி தமிழ் மண்ணில் விடுதலைப் புலிகளால்
கொல்லப்பட்டார் என்ற உண்மையை சீமான்
சொல்லும்போது, அதை ஏற்க மறுப்பது ஏன்?

சீமான் தெளிவாகத்தான் பேசுகிறார்.
இன்று இப்படிச் சொன்னால்தான் ஆதாயம்
என்ற நிலையில், அதற்கேற்பப்
பேசுகிறார் சீமான்.

வைகோ, நெடுமாறனின் வேடங்கள் கலந்து விட்டன.
அதே வேடத்தைத் தரிக்க சீமான் தயாராக இல்லை..     


ஏன் அப்படிக்கூற வேண்டும்? உச்சநீதிமன்றமே
ஆயுள் தண்டனையாக மாற்றிய பிறகு
தூக்கிலிட வேண்டும் என்று ஏன் கூற வேண்டும்?





ஊடகத்தினரே,
தயவு செய்து கொஞ்சம் காமன் சென்ஸை
வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதிமுக மதுசூதனனுக்கு சீன மொழி தெரியுமா?
அவருக்குத் தமிழைத் தவிர வேறு மொழி தெரியாதே!
மொழிபெயர்த்தவர் IFS அதிகாரி மதுசூதனன் அல்லவா!

காமன் சென்ஸ் மட்டுமல்ல. ஊடகத்தினருக்கு
தமிழைப் பிழை இல்லாமலும் எழுதத் தெரியவில்லையே!

சீனா அதிபர் என்பது தவறு.
சீன அதிபர் என்று இருக்க வேண்டும்.

"இந்தியா பிரதமர்" என்று சொல்வதில்லை.
இந்தியப் பிரதமர் என்று சொல்கிறோம்.
அது போல சீன அதிபர் என்று சொல்ல வேண்டும்.

சீன + அதிபர் = சீனவதிபர் என்று வகர உடம்படு மெய்
பெற்றுப் புணர வேண்டும். இப்படி எல்லாம்
சொல்லிக் கொண்டிருந்தால், சமூகம் ஏற்காது.

எனவே ஆகிவந்த தொடரான சீன அதிபர் என்பதையே
ஊடகத்தார் பின்பற்றுக.
     



  
2014 தேர்தலில் சந்திரபாபு நாயுடு புரட்சிகர அவதாரம்
எடுத்தார். அவரை இந்தியாவின் லெனின் என்று
நம்மூர் போலிக் கம்யூனிஸ்டுகள் வர்ணித்தார்கள்.
மோடியை வீழ்த்துவதற்கு இவர்தான் பொருத்தமானவர்
என்று    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக