வெள்ளி, 11 அக்டோபர், 2019

தமிழில் புதிய கலைச்சொல் உருவாக்கம்!
அயான் (ion) என்பதற்குரிய தமிழ்ச்சொல் நீப்பம்!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
அறிவியல் சொல்லான ion ஆங்கிலச் சொல் ஆகும்.
நாங்கள் படித்த காலத்தில் தமிழ்ப் பாடநூற்களில்
இதற்கு அயனி என்ற சொல் இருந்தது. உண்மையில்
அயனி என்பது தமிழ்ச்சொல் அன்று.

அணு, அயனி (atom ion) ஆகிய சொற்கள் மிகவும்
தொடர்புடையவை. அணுவுக்கும் அயனிக்கும் உள்ள
வேறுபாடு இதுதான். அணுவுக்கு மின் நடுநிலை
உண்டு. அதாவது atom is electrically  neutral.

அயனி (ion)) என்பது மின் நடுநிலையை இழந்து
நிற்பது. அணுவையும் அயனியையும் பிரிக்கும்
அம்சம்தான்.

எனவே அயனிக்கு ஒரு சரியான சொல்லை
உருவாக்கும்போது, மேற்கூறிய பண்பே
(மின் நடுநிலையை இழந்து நிற்கும் பண்பு)
புதிய சொல்லுருவாக்கத்தில் தீர்மானிக்கிற காரணியாகும்.

இங்கு நீத்தார் என்ற சொல்லக் கருத வேண்டும்.
நீத்தார் பெருமை என்ற திருக்குறளின் அதிகாரம்,
உலக வாழ்வை நீத்தார் என்ற தொடர் ஆகிய
தொடர்களைக் கருதுக. இங்கு நீத்தார் என்ற சொல்
துறந்தார் அல்லது இழந்தார் என்ற பொருளைத்
தருகிறது.
உயிர் நீத்தார் = உயிர் இழந்தார்
  .
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
( குறள், நீத்தார் பெருமை).

இங்கு நீத்தல், நீத்தார் ஆகிய சொற்கள் தமிழில்
பெருவழக்காய் உள்ளன என்பதை அறியலாம்.

இன்னொரு குறளையும் பாருங்கள்.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். 

இங்கு நீப்பு என்ற சொல்லில் இருந்து உருவான
நீப்பின், நீப்பர் என்ற சொற்கள் வழக்கில் உள்ளமையைக்
காணலாம்.

ஆக நீத்தல், நீப்பு, நீத்தார், நீப்பர் ஆகிய சொற்கள் 
செய்யுள் வழக்காக உள்ளன என்பதை அறியலாம்.

இப்போது மீண்டும் ion  என்ற சொல்லுக்கு வருவோம்.
ion என்பது எலக்ட்ரான்களை இழந்தோ அல்லது பெற்றோ
மின் நடுநிலையை நீத்த ஒரு பொருள். அயனியின் பண்பு
நடுநிலை நீப்பு.

எனவே அயனியை  அதாவது ion என்ற சொல்லுக்கு
நீப்பம் என்று புதிய கலைச்சொல்லை உருவாக்கலாம்.  நீப்பப் பிணைப்பு

ion = நீப்பம்
ions = நீப்பங்கள்
ionisation = நீப்பமுறுதல்
ionising radiation = நீப்பமுறு கதிர்வீச்சு
non ionising radiation = நீப்பமுறாக் கதிர்வீச்சு.

இவ்வாறாக நீப்பம் என்ற சொல்லை பிற சொற்களுடன்
சங்கடமின்றி இணைக்க இயலும்.

ஆக, ion = நீப்பம். இது பொருட்செறிவு மிக்க
கலைச்சொல். காரணப் பெயராக அமைந்துள்ளது.
தமிழ்கூறும் நல்லுலகம் இதைப் பெருவழக்காய்
ஆக்கக் கடமைப் பட்டுள்ளது.
*************************************************  
   த  எந்த adjectiveஉம் இல்லாமல் இச்சொல் உருவாக்கப்
பட்டுள்ளது.
நீப்ப அணு = ion என்ற சொல்லை விட, நீப்பம் என்று
எந்த adjectiveஉம் இல்லாமல் தனித்து நிற்பது
இச்சொல்லின் சிறப்பு.

அமுதக்கனி
  .
நீட்டம் (வெள்ளத் தனையது மலர்நீட்டம்...குறள்)
நிலம் நீச்சு என்பதில் உள்ள நீச்சு, நீச்சல். நீப்பு,
நீத்தார், நீறு, நீக்கம், நீக்கல் என நீ என்று தொடங்கும்
சொற்கள் பல உள.
.     

செறிவு செறிவூட்டல் ஆகிய சொற்கள் முற்றிலும்
வேறொரு சூழலில் வேறொரு பொருளைத் தருவன.
யுரேனியத்தைச் செறிவூட்டுகிறோம் (enrichment).
செறிவூட்டுதல் என்றால் ஏற்கனவே இருக்கும்
ஒன்றை அதிகரித்தல் என்று பொருள். செறிவூட்டலில்
குறைத்தலுக்கு (reduction) இடமில்லை.

ஆனால் ஒரு அணுவானது ஒரு எலக்ட்ரானை
இழந்தாலும் அல்லது பெற்றுக் கொண்டாலும்
அது தனது மின் நடுநிலையை இழந்து விடுகிறது.
இங்கு இழப்பே பிரதானம். இழப்பு ஏற்படுதலை
செறிவூட்டல் என்று அழைக்க இயலாது.

ஒரு அணுவானது மின் நடுநிலையை (electrical neutrality)
இழப்பது என்பது ஒரு பெண் தன் கற்பை இழப்பதைப்
போன்றது. கற்பை இழப்பதை செறிவு என்று
அழைக்க இயலாது.

     

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக