சனி, 12 அக்டோபர், 2019

போலியாகப் பகுத்தறிவு பேசுவதும்
உண்மையில் சாமி கும்பிடுவதும் இழிவானது!
----------------------------------------------------------------------
துர்கா ஸ்டாலின் அம்மையாரை யாம் கண்டிக்கவில்லை.
அது போலவே ராஜாத்தி அம்மாள் அவர்களையும்
கண்டிப்பதில்லை. தாங்கள் கடவுளை நம்பும் பக்தர்கள்
என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு,
ஊர் ஊராகப் போய்ச் சாமி கும்பிடுகிறவர்கள் அவர்கள்.
தங்கள் செய்கையில் அவர்களிடம் நேர்மை உள்ளது.

திராவிட இயக்கத்தின் போலிப்பகுத்தறிவு, போலி
நாத்திகம் ஆகிய பித்தலாட்டங்களையே இங்கு
நாம் கண்டிக்கிறோம். திராவிட இயக்கம் முன்வைத்த
நாத்திகம் பொருள்முதல்வாதமே இல்லாத நாத்திகம்.
அதாவது போலி நாத்திகம்.

திராவிட இயக்க முதல்வர்களில் அண்ணா, நாவலர்
ஆகியோர் இறுதி வரை நாத்திகர்களாக, கடவுளை
ஏற்காதவர்களாக இருந்து மறைந்தார்கள். ஆயின்
பிறழ்வு எப்போது யாரிடம் இருந்து தொடங்கியது?

ராமச்சந்திர மேனன், கலைஞர், ஜெயலலிதா, ஓபிஎஸ்,
பழனிச்சாமி என்று அனைவரும் கடவுளை
வணங்கும் கூட்டமே. மேனன் முற்றிலுமாக நாத்திகம்
பகுத்தறிவு ஆகியவற்றுக்கு கொள்ளி வைத்து
கருமாதி செய்தவர். ஜெயலலிதாவும் அப்படியே.
இன்றுள்ள ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோரும் அப்படியே.

இவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதத்தில்
கலைஞர் மஞ்சள் துண்டை நிரந்தரமாக அணிந்து
கொண்டு இருந்து, தான் இறந்த பிறகும் தன்னுடைய
அடையாளமாக மஞ்சள் துண்டை ஆக்கிவிட்டு
மறைந்தார். ஆனால் ஏமாற்றும் நோக்கத்துடன்
பகுத்தறிவு பேசுவார்.

கடவுள் இருக்கிறார் என்று நம்பினால் சாமி
கும்பிடட்டும். இதைத்தான் நேர்மையுடன் மேனன்,
ஜெயலலிதா, சசிகலா,  ,எடப்பாடி, ஓபிஎஸ்,
துர்கா அம்மையார், ராஜாத்தி அம்மாள் ஆகியோர்
செய்து வருகின்றனர். கடவுள் நம்பிக்கையைப்
பொறுத்து இவர்களிடம் நேர்மை இருக்கிறது;
பித்தலாட்டம் இல்லை.

ஆனால் திமுக தலைவர் கலைஞர் அப்படி இல்லை.
கடவுளை ரகசியமாக வணங்கிக்கொண்டு,
சோதிடப் பித்துடன் மஞ்சள் துண்டை நிரந்தரமாக
அணிந்து கொண்டு, மேடையில் நாத்திகமும்
போலியாகப் பேசிக்கொண்டு இருக்கும்
பித்தலாட்டம் அருவருப்பைத் தருகிறது. எனவே அது
கண்டிக்கப்படும்; எள்ளி நகையாடப்படும்.

திமுகவில் நாத்திகர்கள் மூவர் மட்டுமே; அண்ணா,
நாவலர், பேராசிரியர். மீதி அனைவரும் பக்திமான்கள்.


பொருள்முதல்வாதம் என்பது அறிவியல் பூர்வமான
நாத்திகம் ஆகும். இது உலகெங்கும் உள்ளது.
2500 ஆண்டு காலத் தொன்மை மிக்கது. மார்க்சியத்தின்
தத்துவார்த்தமாக இதை காரல் மார்க்ஸ் அறிவித்தார்.
கடவுள் இல்லை என்று நான்ஆயிரம் முறை
நிரூபித்துள்ளேன்.

போலிப் பகுத்தறிவு போலி நாத்திகம் பேசும்
ஆசாமிகளை அம்பலப் படுத்தி முறியடிக்காமல்
மெய்யான நாத்திகமான பொருள்முதல்வாதத்தை
முன்கொண்டு செல்ல இயலாது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக