வியாழன், 3 அக்டோபர், 2019

மத்திய அரசு வேலைகளில்
மாநிலவாரியான ஒதுக்கீடு வேண்டும்!
முன்பு ரத்து செய்யப்பட்டமாநிலவாரி ஒதுக்கீட்டை
மோடி அரசே மீண்டும் கொண்டுவா!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
உலகிலேயே மிகப்பெரிய முதலாளி யார்?
இந்தியாவின் மத்திய அரசுதான்!  ஒவ்வொரு
ஆண்டும் குறைந்தது 10,000 பேருக்கு மேல்
வேலைக்கு ஆள் எடுப்பது மத்திய அரசுதான்.

கிளார்க் வேலை முதல் கலெக்டர் வேலை வரை
கல்வித் தகுதி நிர்ணயித்து, தேர்வு நடத்தி,
தேர்ந்தெடுத்து வேலை கொடுப்பது மத்திய அரசுதான்.

UPSC தேர்வு கலெக்டர் போன்ற அதிகாரிகளைத்
தேர்ந்தெடுக்கும் தேர்வு. SSC எனப்படும்
STAFF SELECTION COMMISSION என்ற அமைப்பு
Subordinate servicesக்கு ஆளெடுக்கும் அமைப்பு.
அதாவது கிளார்க் முதல் இரண்டாம் நிலை அதிகாரி
(Group B oficer) வரையிலான பதவிகளுக்கு
ஆளெடுக்கும் அமைப்பு.

இந்தக் கட்டுரை SSC தேர்வுகளைப் பற்றி மட்டுமே
பேசுகிறது. அதிலும் குறிப்பாக SSC CGL தேர்வைப் பற்றி
மட்டுமே பேசுகிறது.(CGL = Combined Graduate Level).
CGL தேர்வை பட்டதாரிகள் மட்டும்தான் எழுத முடியும்.
இது குறித்து இதுவரை எழுதப்பட்ட எமது முந்தைய
கட்டுரைகளை அருள்கூர்ந்து படிக்கவும்.

SSC நடத்தும் எல்லாத் தேர்வுகளிலும் (Clerk to Group B)
1975 முதல் மாநிலவாரியான ஒதுக்கீடு உண்டு.
இந்தியா அப்போது (1975ல்) 15 பிராந்தியங்களாகப்
பிரிக்கப்பட்டு இருக்கும். அப்போது ஜார்கண்ட்,
சட்டிஸ்கர் முதலிய மாநிலங்கள் கிடையாது).

இந்த 15 பிராந்தியங்களுக்கும் தனித்தனியாக
காலியிடங்கள் அறிவிக்கப் பட்டு இருக்கும்.

உதாரணமாக மொத்தக் காலியிடங்கள் 10,000
என்றால், தமிழ்நாடு ZONEக்கு குறைந்தது
800 இடங்களாவது ஒதுக்கப்பட்டு இருக்கும்.

1994-95 வரை இது போன்ற மாநிலவாரியான
ஒதுக்கீடு இருந்து வந்தது. இதை எதிர்த்து
மாணவர்கள் வழக்குத் தொடுத்தனர். அந்த
வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை
1995ல் வழங்கியது. அத்தீர்ப்பின்படி, மாநிலவாரியான
ஒதுக்கீடு ரத்து செய்யப் பட்டது. மாநிலவாரியாக
Rank List தயாரிக்கக் கூடாதென்றும், தேசிய அளவிலான
Rank List மட்டுமே செல்லுபடியாகும் என்றும் நீதியரசர்கள்
தீர்ப்பு வழங்கினார்.

(தீர்ப்பு வழங்கிய தேதி: 09/12/1996
நீதியரசர்கள் : மேதகு S C Agrawal,   மேதகு Faizzan Uddin.
WP 224/1995 and 395/1995 and Civil Appeal 5112/1995.
Ref: Radhey Shyam Singh and ors versus Union of India and ors).

மேதகு நீதியரசர்கள் தங்களின் தீர்ப்பில்
பின்வருமாறு கூறினர்:-

1) The object of the selection process i.e the selection of the best
candidate is not achieved.

2) The rule of equal chance for equal marks was violated.

3) The candidates of INFERIOR calibre were selected while the
meritorious candidates were rejected.

4) The zonewise selection process is violative of Article 14 and 16
of the Constitution of India.

தீர்ப்பு SSC இணையதளத்தில் இருக்கிறது. அங்கு தேடிப் 
படிக்கவும். அல்லது நல்ல ஆங்கிலப் புலமை
உடையவர்கள் கேட்டுக் கொண்டால் அவர்களின்
மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறேன்.   

நீதியரசர்களின் இந்தத் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது.
தகுதி (MERIT) குறித்து அதிகம் கவலைப் படுகின்றனர்
நீதியரசர்கள். தரக்குறைவானவர்களுக்கு (INFERIOR)
வேலை கிடைக்கக் கூடாது என்கின்றனர் நீதியரசர்கள்.

மேதகு நீதியரசர்களே,
இட ஒதுக்கீடு என்பதே MERITஐ பார்க்காமல்
நீங்கள் கூறும் தரக் குறைவானவர்களுக்கு (INFERIOR)
வேலை வழங்கும் தத்துவம்தானே கனவான்களே!
இப்போது திடீரென என்ன ஞானோதயம்?

சமூகநீதிக்கு எதிரான இந்தத் தீர்ப்பை
சமூகநீதிக் காவலர்கள் என்று தங்களை அறிவித்துக்
கொள்ளும் ஒரு கயவனும் இதுவரை
தட்டிக் கேட்கவில்லை. 39 முண்டங்களும்
நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை.

விளைவு இன்று வரை இதே நிலை நீடிக்கிறது.
கால் நூற்றாண்டு காலமாக இந்த உரிமைப்
பறிப்பு நீடிக்கிறது. இவ்வாறு உரிமை பறிக்கப்
பட்டு விட்டது என்று கூடத் தெரியாத தற்குறி
முண்டங்களை நாம் எம்பிக்களாக வைத்து
இருக்கிறோம்.

தமிழ் தமிழ் என்று வெற்றுக் கூச்சலிடும்
கொளத்தூர் மணி, சுப வீர பாண்டியன், கோவை
ராமகிருஷ்ணன், மணியரசன், வேல்முருகன் இப்படிப்
பலரில் ஒருவருக்கும் இது பற்றித் தெரியாது.
இந்தப் பதிவைப் படித்தால்தான் அவர்களுக்கே
விஷயம் தெரியும். எனவே அவர்களின் ஆதரவாளர்கள்
அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இவர்களில் பலர் கல்வி அறிவற்றவர்கள்.எனவே
ஆங்கிலத்தில் மட்டுமே உள்ள தீர்ப்புகளையோ, மத்திய
அரசின் சட்ட திட்டங்களையோ அவர்கள் சுயமாகப்
படித்துத் தெரிந்து கொள்ள வழியில்லை. ஆனால்
பேராசிரியர் சுப வீ அவர்கள் ஆங்கிலம் தெரிந்தவர்.
அவரும் மௌனம் காப்பதில் மனம் வலிக்கிறது.    

மாநிலவாரியான ஒதுக்கீட்டை மீண்டும்
கொண்டு வர வேண்டும் என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் வலியுறுத்துகிறது. இந்தியாவின் மத்திய
அரசுப் பணிகளில் தமிழனுக்கு உரிய பங்கு
வேண்டும். அதைச் சட்டமாக்க வேண்டும்.
******************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக