பொருள் அழிவற்றது என்கிறது அறிவியல்!
ஆத்மா அழிவற்றது என்கிறது பகவத் கீதை!
ஐஐடியில் பகவத் கீதை பாடமா?
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
ஐரோப்பிய வரலாற்றில் கலிலியோவின் காலத்தில்
இருந்துதான் பரிசோதனை இயற்பியல் (experimental science)
என்பது தொடங்குகிறது. அதற்கு முன்பு அரிஸ்டாட்டில்
காலத்தில் பரிசோதனை என்ற பேச்சே கிடையாது.
கலிலியோவின் காலத்திற்குப் பிறகு, இன்று வரை
இந்த உலகில் கோடிக்கணக்கான அறிவியல்
பரிசோதனைகள் நடந்து விட்டன.
12ஆம் வகுப்பு மாணவன் செய்யும் எளிய Titration
பரிசோதனையில் இருந்து தாமஸ் யங் செய்த
Double slit பரிசோதனை வரை கோடிக்கணக்கான
பரிசோதனைகள் இதுவரை உலகில் நடந்துள்ளன.
பிரான்சிஸ் பேக்கன் வரையறுத்தபடி,
Experiment--Observation--Inference என்னும் முறைமைப்படி
உலகம் முழுவதும் பரிசோதனைகள் நடந்து
வருகின்றன.
இந்த எல்லாப் பரிசோதனைகளும் பொருளின் மீது
செய்யப் பட்டவை. இவை ஓர் உண்மையைத்
தீர்க்கமாக உணர்த்துகின்றன. பொருளுக்கு
அழிவில்லை என்ற உண்மையையே அவை
உணர்த்துகின்றன.
பொருள் அழிவதில்லை: பொருளுக்கு அழிவில்லை.
பொருளே ஆற்றலும் ஆகும். பொருளோ ஆற்றலோ
எதுவாயினும் அதற்கு அழிவில்லை. பொருளை
யாராலும் எப்போதும் அழிக்க இயலாது.
18ஆம் நூற்றாண்டிலேயே லவாய்சியர் (Antoine Lavoisier)
என்னும் விஞ்ஞானி நிறையின் அழியாமை விதியைக்
(Law of conservation of mass) கண்டறிந்தார். பின்னாளில்
ஐன்ஸ்டின் இவ்விதியை Law of conservation of mass-energy
என்று துல்லியப் படுத்தினார்.
இதன் மூலம் பொருள் அழிவதில்லை என்ற உண்மை
யாப்புறுத்தப் படுகிறது. இது இந்த உலகில் அன்று
முதல் இன்று வரை ஒவ்வொரு நொடியும் நிரூபிக்கப்
பட்டுக் கொண்டே இருக்கிறது.நிற்க.
பகவத் கீதை என்ன சொல்கிறது? அது ஆன்மாவைப்
பற்றிப் பேசுகிறது; ஆன்மாவுக்கு அழிவில்லை
என்கிறது கீதை. ஆன்மாவை யாரும் அழிக்க
முடியாது என்கிறது கீதை. வெயிலில் உலர்த்தினாலும்
மழையில் நனைத்தாலும் நெருப்பில் எரித்தாலும்
ஆன்மாவுக்கு அழிவில்லை என்கிறது பகவத் கீதை.
(உரிய நூல்களைப் படித்து அறிவியல் கூறும்
பொருளின் அழியாமை பற்றியும் கீதை கூறும்
ஆத்மாவின் அழியாமை பற்றியும் வாசகர்கள்
படித்து அறிந்து கொள்ள வேண்டும்).
ஆக, பொருளின் அழியாமை பற்றி அறிவியல்
பேசுகிறது. ஆத்மாவின் அழியாமை பற்றி கீதை
பேசுகிறது. இதில் எது சரி? எது உண்மை?
அல்லது இரண்டுமே சரியா? ஆராய்வோம்.
பொருளுக்கு பௌதிக இருப்பு உண்டு.
Matter does exist physically. பொருள் இருக்கிறது என்பதை
பிரத்தியட்சமாக எல்லோரும் உணர இயலும்.
மேலும் பொருளானது எங்கே எந்த இடத்தில்
இருக்கிறது என்பதையும் எளிதாகச் சுட்ட இயலும்.
ஆத்மாவுக்கு பௌதிக இருப்பு உண்டா?
Does Atman exist physically? ஆத்மாவுக்கு பௌதிக
இருப்பு கிடையாது. இதன் பொருள் என்ன?
ஆத்மா என்பதே கிடையாது. ஆத்மா என்பது வெறும்
கற்பனை! வெற்றுக் கற்பனை! ஆத்மா என்ற ஒன்று
இந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் இருந்ததே
கிடையாது. பௌதிக இருப்பு என்பது மிகவும்
முக்கியமானது. பௌதிக இருப்பு இல்லாத ஒன்று
இருப்பதாகக் கொள்ளவே முடியாது.
ஆத்மா என்பது இல்லை என்பதால் அது இருக்கும்
இடத்தைச் சுட்டவும் இயலாது. ஆன்மா உண்மையில்
இருக்குமெனில் இன்ன இடத்தில் அது இருக்கிறது
என்று சுட்ட வேண்டும் அல்லவா? இல்லாத ஒன்றின்
இருப்பிடத்தை எப்படிச் சுட்ட முடியும்?
உலகம் முழுவதும் தத்துவ அரங்கில் அறிவியல்
வெற்றி முரசு கொட்டிக் கொண்டே வருகிறது.
கருத்துமுதல்வாதம் தொடர்ந்து வலுவிழந்து
கொண்டே வருகிறது. கிறிஸ்துவ மதமும்
போப்பாண்டவரும் நடுநடுங்கிப்போய்
நிற்கிறார்கள்.
ஆபிரகாமிய மதங்களின் தத்துவங்களைக் கொண்டு
உலகில் கருத்துமுதல் வாதத்தைத் தொடர்ந்து
தக்கவைக்க முடியும் என்ற நம்பிக்கையை
கத்தோலிக்க பிராட்டஸ்டெண்ட் மத பீடங்கள்
முற்றிலுமாக இழந்து விட்டன. எனவே கீழ்த்திசையில்
(இந்தியாவில், ஆசியாவில்) நிலவும் இந்து மற்றும்
பௌத்த மதங்களைப் பிடித்துக் கொண்டு கரை
சேர இயலுமா என்று பார்க்கிறார்கள்.
அந்த அடிப்படையிலேயே இந்து இலக்கியமான
பகவத் கீதையையும் புத்த இலக்கியங்களையும்
மறுவாசிப்புச் செய்யும் முயற்சிக்கு அவர்கள்
ஆதரவு அளிக்கிறார்கள்.
தற்போது உலக முதலாளியமும் உலகக்
கருத்துமுதல்வாத முகாமும் பகவத் கீதையை
மலையாக நம்பி இருக்கிறார்கள். அதன்
விளைவுதான் கீதையைப் பாடமாக
வைக்கும் முயற்சி.
இந்த முயற்சியை வரவேற்கலாம். முதல் முறையாக
கீதை சார்ந்த கருத்துமுதல்வாதிகள் தங்களின்
தரப்பை எடுத்துரைக்க முன்வந்துள்ளார்கள்.
இதுவரை இந்தத் துணிச்சல் அவர்களுக்கு இல்லை.
(இங்கு "அவர்களுக்கு" என்ற சொல் கருத்துமுதல்வாத
சித்தாந்திகளை மட்டுமே குறிக்கிறது).
ஐஐடியில் பகவத் கீதையை மாணவர்கள் படிக்கட்டும்.
கீதை கூறும் ஆன்மாவுக்கு அழிவில்லை என்பதை
ஐஐடியில் பரிசோதனை நடத்தி நிரூபிக்கட்டும்.
************************************************ .
10 கோடியில் பங்கு கேட்டுத் தகராறு
செய்வதுடன் பங்கு கிடைக்காத பிறரையும்
தூண்டி விடும் அருணன் மீது யெச்சூரி
கடுங்கோபம்! ஒழுங்கு நடவடிக்கை!
ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி
கடசியின் control commission உறுப்பினர்களிடம்
விவாதித்து உள்ளார் யெச்சூரி. ஏற்கனவே
கடசி நிலைக்கு எதிராக கருத்துக் சொல்லி
நடவடிக்கை வந்ததும் மன்னிப்புக் கேட்டவர்தானே
அருணன்! ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்து விட்டதா
என்பது இன்னும் ஊர்ஜிதம் ஆகவில்லை.
பிராத்தியட்சம் அனுமானம் etc etc என்று
முடிவெடுக்க நிறைய வழிகள் உண்டு.
எடுத்த முடிவு சரி என்று நிரூபிக்கப் பட்டால்
மட்டுமே அது உண்மை! அது தேற்றம்!
இருக்கக் கூடும், தெரியவில்லையே.
தேவாங்கர்
தா பாண்டியனுக்கு கொடுத்த தொகை
எவ்வளவு என்பதை ஜெயலலிதா வெளியிடவில்லை.
எனவே தகராறு இல்லை. இப்போது 15 கோடி
என்று திமுக உடைத்துச் சொல்லி விட்டதால்
அவனவன் பங்கு கேட்கிறான்.
அப்படி இல்லை. GST வந்து விட்டது. பணப்பரிமாற்ற
நடவடிக்கைகளை மறைக்க இயலாது.
வருமானவரித் துறைக்குப் பதில் சொல்லி
ஆக வேண்டும். திமுக எப்போதுமே மாட்டிக்
கொள்ளாமல் சிறந்த ஆடிட்டர்களை வைத்து
கணக்கு எழுதும்; கணக்கு சமர்ப்பிக்கும்.
தற்போது ஆடிட்டர் ஆலோசனைப்படியே
தொகை கொடுத்த விவரம் வெளியிடப்
பட்டுள்ளது. இதில் அரசியல் .நோக்கம் இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக