புதன், 9 அக்டோபர், 2019

97 வயது ஜெர்மானியர், 78 வயது
ஆங்கில அமெரிக்கர்,
71 வயது ஜப்பானியர் மூவருக்கும்
லித்தியம் அயான்
பாட்டரி வளர்ச்சிக்காக
கெமிஸ்ட்ரி நோபல் பரிசு!


noal parisu arivikkum


நோபல் பரிசு அறிவிப்புக் கூட்டம்
மதியம் 3.55க்கு முடிந்தது. ஐந்தே நிமிசத்தில்
நாலு மணிக்கு இந்தப் பதிவை உள்ளேன்.
இதெல்லாம்தான் அறிவியலின் அற்புதம்!
நான் கல்லூரியில் படித்த காலத்தில்
இன்றுள்ள வசதியில் 1000ல் ஒரு பங்கு கூட
கிடையாது. வசதிகள் இருந்திருந்தால்
என்னுடைய IQ 200ஐத் தாண்டி இருக்கும்.

வேதியியல் (Chemistry) நோபல் பரிசு பெற்ற
மூவரில் ஒருவரான 97 வயது ஜெர்மன் தாத்தா
John B Goodenough அவர்களை வணங்குவோம்!
=========================================
பாட்டரி வளர்ச்சிக்கு வேதியியல் நோபல் பரிசு!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
உங்கள் செல்போனில் ஒரு பாட்டரி இருக்கிறது.
அது லித்தியம் அயான் பாட்டரி.

இன்று பெட்ரோலில் ஓடும் கார்களின் உற்பத்தி
நிறுத்தப்பட்டு வருகிறது. அதற்குப் பதில்
மின்சாரத்தால் ஓடும் கார்கள் உற்பத்தி ஆகின்றன.
இந்தக் கார்களிலும் லித்தியம் அயான் பாட்டரி உள்ளது.

லித்தியம் என்பது ஒரு தனிமம். தனிம அட்டவணையில்
(Periodic Table) அது எத்தனையாவது இடத்தில் இருக்கிறது?
தனிம அட்டவணையில் உள்ள தனிமங்களில்
நூறு தனிமங்களை வரிசையாகச் சொல்லுங்கள்.

ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம், பெரிலியம், போரான்,
கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், ஃபுளோரின், நியான்
என்று போய்க்கொண்டே இருக்கும். முந்திய வரியில்
முதல் 10 தனிமங்களைச் சொல்லி இருக்கிறேன்.
என்னால் 100 தனிமங்களை வரிசை மாறாமல்
மனப்பாடமாகச் சொல்ல முடியும். மாணவர்கள்
போட்டித்தேர்வு எழுதுவோர் இப்படி 100 தனிமங்களையும்
வரிசையாகச் சொல்ல வேண்டும். பயிற்சி மையம்
நடத்துவோர் மாணவர்களை இதில் ஊக்குவிக்க
வேண்டும். நிற்க.
     
லித்தியம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதைப்
பயன்படுத்தி நோபல் பரிசு பெற்ற மூன்று வேதியியல்
அறிஞர்களும் பாட்டரிகளை உருவாக்கி
அதில் பற்பல மேம்பாடுகளைச் செய்து உள்ளனர்.

இதன் விளைவாக,
எடை குறைந்த (light weight)
மிகவும் ஆற்றல் மிக்க
ரீசார்ஜ் செய்ய வல்ல
பாட்டரிகள் இன்று உலகை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.

புதைபடிவ எரிபொருள் (fossil fuel)  எனப்படும் பெட்ரோலிய
எரிபொருளைப் பயன்படுத்தி, சூழலை, புவியை
மாசுபடுத்திக் கொண்டிருந்த அவல நிலைமைக்கு
பரிசு பெற்ற மூன்று அறிஞர்களும் முற்றுப்புள்ளி
வைத்துள்ளனர்.
 
இன்று (அக்டோபர் 9) 2019ஆம் ஆண்டிற்கான
வேதியியல் நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.

1) ஜான்  குடனஃப்  (97 வயது), ஜெர்மானியர்;
2) எம் ஸ்டான்லி விட்டிங்கம் (78 வயது), ஆங்கில அமெரிக்கர்;
3) அகிரா யோஷினோ ( 71 வயது), ஜப்பானியர்
ஆகிய மூவருக்கும் பரிசு சமமாகப் பகிர்ந்து
அளிக்கப் படுகிறது. லித்தியம் அயான் பாட்டரிகளின்
இன்றைய வளர்ச்சிக்குப் பங்களித்தமைக்காக
இம்மூவருக்கும் பரிசு வழங்கப் படுகிறது. நிற்க.

ஆல்பிரட் நோபல் தம்முடைய உயிலில், "மனிதகுலத்தின்
நமக்குப் பயன்படும் கண்டுபிடிப்புக்களைச்
செய்தவர்களுக்கு இந்தப் பரிசுகள் போய்ச சேர
வேண்டும்" என்று எழுதி இருந்தார். அந்த வகையில்
புதைபடிவ எரிபொருளை அகற்றி விட்டு, அதற்குப்
பதிலாக சூழலை மாசுபடுத்தாத லித்தியம் அயான்
பாட்டரிகளை வளர்த்தெடுத்த இம்மூவரும்
மனிதகுலத்திற்குப் பெருந்தொண்டு ஆற்றியுள்ளனர்.
எனவே இவர்கள் பரிசு பெறுவது 100 சதம் நியாயமே.

மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் (ஆப்பிள் என்னும் கணினி
நிறுவனத்தின் தலைவர்) ஒருமுறை கூறினார்;
"காரல் மார்க்சை விட, தாமஸ் ஆல்வா எடிசன்தான்
மனித குலத்திற்கு அதிக நன்மைகளைச்
செய்தவர்" என்று.

இந்த வாக்கியம் மார்க்சை அவமரியாதை செய்கிறது
என்று குட்டி முதலாளிய சிந்தனைக் குள்ளர்கள்
கருதலாம். ஆனால் மார்க்சியம் அப்படிக்
கருதுவதில்லை. ஏனெனில் மார்க்சியம் என்பது
உற்பத்திச் சக்திகளின் தங்கு தடையற்ற
வளர்ச்சிக்காக நிற்கிறது. பின்தங்கிய உற்பத்திக்
கருவிகளை (productive instruments) வைத்துக் கொண்டு
உற்பத்திச் சக்திகள் வளர முடியாது.

லித்தியம் அயான் பாட்டரிகள் உற்பத்திக் கருவிகளின்
வளர்ச்சியின் அடையாளம். எனவே அவற்றை
வரவேற்போம்.   
**************************************************

அய்யன் (ion) என்றால் என்ன?
ஓர் அணுவுக்கும் அயானுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தெரியாமல்
இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள இயலாது.
இது பத்தாம் வகுப்புப் பாடம்தான். வாசகர்கள்
விடையளிக்க வேண்டும்.


நோபல் பரிசு என்பதே இருபதாம் நூற்றாண்டில்தான்
தொடங்குகிறது. முதல் நோபல் பரிசு 1901ல்தான்
வழங்கப் படுகிறது. நியூட்டனுக்கும் கோப்பர்
நிக்கசுக்கும்  ஆரிய பட்டருக்கும்  யார் நோபல் பரிசு
கொடுத்தார்கள்?

பரப்பன அக்ரஹார சிறையில்
10 கோடி செலவில் தசரா பூஜை நடத்தி
சசிகலா கின்னஸ் சாதனை!
ராஜாத்தி அம்மாள் பிரமிப்பு!  
   


   
  





.
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக