திங்கள், 7 அக்டோபர், 2019

-----------------------------------------------------------
தத்துவம், தர்க்கம், கணிதம்!
------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
மேற்கூறிய மூன்றும் தொடர்பு உடையவை.
இம்மூன்றிலுமே, சமயத்தில், தவறான ஒரு விஷயம்
சரியானது போலத் தோற்றமளிக்கும். இத்தகைய
தோற்றப்பாடு FALLACY எனப்படும்.

Fallacy = A statement which is apparently right but actually wrong.

இதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.
பொருள்முதல்வாதம் கற்போருக்கும் விளக்க வேண்டும்.
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். அநேகமாக
plus 2 வரை கணிதம் படித்த அனைவருக்கும் இது
தெரிந்திருக்கும். எனினும் இது plus  போர்ஷன் அல்ல.
இது எட்டாங்கிளாஸ் போர்ஷன்தான்.

இணைக்கப்பட்ட படத்தைப் பாருங்கள். இதில்
ஒரு  fallacy காட்டப்பட்டு உள்ளது. 1ஐயும் 1ஐயும்
கூட்டினால் 2 வராது என்று இந்த fallacy கூறுகிறது.

இதை நான் 10ஆம் வகுப்பு படிக்கும்போது தெரிந்து
கொண்டேன். கற்றுத்தந்தவர் கணித ஆசிரியர்.
வகுப்பு: elective பாடமாக Algebra and Geometry வகுப்பு.

இதை மொத்தத் தமிழ்நாடும் அறிந்து கொள்வது எப்படி?
ஒரு சினிமாவில் காட்டினால் இது சாத்தியம் ஆகும்.
இதையெல்லாம் சினிமாவில் காட்ட முடியுமா?

முடியும் என்று நிரூபித்தார் மறைந்த பாலச்சந்தர்.
1969ல் பியூசி படிக்கும்போது ஒரு படம் பார்த்தேன்.
கே பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு என்ற சினிமா.
கணிதப் பேராசிரியராக வரும் ஜெய்சங்கர்
வகுப்பில் கரும்பலகையில் இந்த fallacyஐ
மாணவர்களுக்கு கற்பிப்பார். பாலச்சந்தர்
கணிதம் பயின்றவர். எனவே இதை அவரால்
படத்தில் காட்ட முடிந்தது.

நூற்றுக்கு நூறு படத்தைப் பாருங்கள். இணைக்கப்பட்ட
படத்தில் fallacyஐ காட்டி உள்ளேன். பாருங்கள்.

இந்த fallacy எப்படித் தவறு என்று நிரூபிக்க வேண்டும்.
அது எத்தனை பேரால் முடியும்? ஆனால் அது மிக எளிது.
************************************************   
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக