செவ்வாய், 1 அக்டோபர், 2019

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
நடத்தும் தேர்வுகளை எழுதுங்கள்!
STAFF SELECTION COMMISSION நடத்தும்
தேர்வுகளை எழுதுங்கள்!
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
தமிழ்நாட்டில் மாநில அரசு தனக்கு வேண்டிய
ஊழியர்களை  TNPSC தேர்வுகள் மூலம்
எடுத்துக் கொள்கிறது.

மத்திய அரசு தனக்கு வேண்டிய ஊழியர்களை 
UPSC மூலமும் SSC மூலமும் எடுக்கிறது. இக்கட்டுரையில்
SSC தேர்வுகள் பற்றிப் பார்ப்போம்.

TNPSC தேர்வுகளில் மிகவும் அபத்தம் இருக்கும்.
அரசியல்வாதிகளின் தலையீடு ஒவ்வொரு
கட்டத்திலும் இருக்கும். IQ 84 உடைய தலைவர்
TNPSC தேர்வுகளை எதிர்த்துப் போராட்டம்
அறிவிப்பார். மூளை உள்ளவன் பாஸ் பண்ண முடியாத
நிலையில் TNPSC தேர்வுகளை நடத்துவார்கள். இங்கு
TNPSC Group II தேர்வைப் பற்றி மட்டுமே இக்கட்டுரை
பேசுகிறது. இத்தேர்வைப் பட்டதாரிகள் மட்டுமே
எழுத இயலும்.

SSC தேர்வுகள் பல வகை உண்டு. இக்கட்டுரை
SSC CGL தேர்வைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது.
SSC= Staff Selection Commission
CGL = Combined Graduate Level.
இத்தேர்வையும் பட்டதாரிகள் மட்டுமே எழுத இயலும்.

தமிழகப் பட்டதாரிகள் SSC CGL தேர்வை எழுத வேண்டும்.
இதற்கான அறிவிப்பு 31 அக்டோபர் 219ல்
வெளிவரும். தேர்வுத் தேதி அட்டவணையும்
அன்றைய தினமே வெளிவரும்.தேர்வு ஆங்கிலத்தில்
நடத்தப்படும்.

மேலும் விவரம் அறிந்திட ssc.nic.in என்ற
இணையதளத்தைப் பார்க்கவும்.
  
பட்டதாரிகள் SSC CGL தேர்வை எழுத வேண்டும்.
TNPSC Group II தேர்வை விட இது உயர்ந்தது.
TNPSC தேர்வில் ஒவ்வொரு கட்டத்திலும் லஞ்ச லாவண்யம்
ஊழல் அதிகார முறைகேடு ஆகிய அனைத்தும் உண்டு.

SSC CGL தேர்வில் ஒப்பீட்டளவில் லஞ்ச லாவண்யம்
ஊழல் முறைகேடு ஆகியவை மிக மிக மிகக் குறைவு.
நன்றாகப் படித்துத் தேர்வு எழுதினால் வேலை உறுதி.

TNPSC Group II தேர்வில் 94 முதல் 99 வரை IQ உள்ளவர்கள்
நல்ல மதிப்பெண் பெற முடியும். ஆங்கில அறிவு
சுமாராக இருந்தால் போதும். கணக்கும் அறிவியலும்
மேம்போக்காகத் தெரிந்தால் போதும்.

SSC CGL தேர்வில், 101 முதல் 104 வரை IQ உள்ளவர்கள்
தேற முடியும். சற்றே வலிமையான ஆங்கில அறிவு
தேவைப்படும். கணக்கும் அறிவியலும் சராசரி
மட்டத்தில் (average level) தெரிந்திருக்க வேண்டும்.

இன்போசிஸ், விப்ரோ போன்ற தனியார் நிறுவனங்களிலும்
வேலைக்குப் போகலாம். அதிகாரி மட்டத்திலான
வேலை என்றால் அதற்குப் பின்வரும் தகுதிகள்
தேவைப்படும்.

அ) IQ > or = 105 இருக்க வேண்டும். (இந்த வாக்கியம்
புரிகிறதா?).

ஆ) ஆங்கிலத்தில் உரையாடவும் மனதில்
நினைப்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லவும்
முடிகிற விதத்தில் ஆங்கிலப் புலமை தேவை.
(ஷேக்ஸ்பியர், மில்டன் எல்லாம் தேவையில்லை)

இ) கணிதம் அறிவியலில் மிகத் தேர்ந்த புலமை
வேண்டும்.  

ஈ) நல்ல ஆளுமை இருக்க வேண்டும்.

ஆக இளைஞர்களே,
உங்களுக்குத் பொருத்தமான தேர்வை எழுதுங்கள்.
மேற்கூறிய மூன்றிலும் SSC தேர்வு உத்தமம்!
*********************************************





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக