புதன், 2 அக்டோபர், 2019

மகாத்மா காந்தி பற்றிய சரியான ஒரே மதிப்பீடு!
----------------------------------------------------------------------------
நான் பி யூ சி படித்தபோது (1969) காந்தி நூற்றாண்டு
வந்தது. மாணவர்கள் அனைவருக்கும் சத்திய சோதனை
புத்தகத்தைக் கொடுத்தார்கள். முழுவதும் படித்தேன்.
மீண்டும் மீண்டும் படித்தேன்.

தற்போது (2019) மகாத்மா காந்தியின் நூற்று ஐம்பதாவது
ஆண்டு வந்திருக்கிறது. இந்நிலையில் காந்தி பற்றிய
சரியான மதிப்பீட்டை அறிந்து கொள்ள வேண்டும்.

காந்தியின் வருகைக்கு முன்பு (1919) பிரிட்டிஷாரை
எதிர்த்த விடுதலைப் போராட்டம் இந்திய மேட்டுக்குடிச்
சீமான்களின் மாளிகைகளின் தாழ்வாரங்களிலேயே
முடங்கி கிடந்தது. கோகலே திலகர் போன்ற சிறந்த
தலைவர்கள் இருந்த போதிலும் ஏகாதிபத்திய
எதிர்ப்புப் போராட்டம் மக்களின் போராட்டமாக
மாறவில்லை.

காந்திதான் பிரிட்டிஷாரை எதிர்த்த போராட்டத்தை
மாபெரும் வெகுஜன இயக்கமாக மாற்றினார்.
படிப்பறிவற்ற வறுமையில் வாடிய மக்களை
பிரிட்டிஷாருக்கு எதிராக அணிதிரட்ட அவரால்
முடிந்தது. மனிதகுல வரலாற்றில் இந்த பூமியில்
வேறெங்குமே முப்பது கோடி அளவுள்ள மக்கள்
இவ்வாறு எந்தத் தலைவராலும் அணிதிரட்டப் படவில்லை.
இதில் காந்தியின் பாத்திரமும் பங்களிப்பும் காலத்தை
வென்று நிற்பதாகும்.

தனிமனித ஆளுமையைப் பொறுத்த மட்டில், காந்தி
பெரும் வைராக்கியங்களால் நிரம்பியவர். அவருக்குச்
சரி என்று பட்ட எந்த ஒரூ கோட்பாடு அல்லது நடைமுறையை  எவருக்காகவும் அவர் விட்டுக் கொடுத்த முன்வந்ததில்லை.
அவரிடம் தாராளவாதம் (liberalism) என்பது மருந்துக்கும்
கிடையாது.

நுகர்வு மறுப்பு, எளிமை, சிக்கனம், புலனடக்கம்,
தியாகம் ஆகிய பண்புகளுக்கு தாமே
முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.
அவரது சமயம் சார்ந்த நம்பிக்கைகளின்
அடிப்படையிலேயே அவரின் பிரம்மச்சரியப்
பரிசோதனைகள் அமைந்தன. அவற்றில் எந்தக்
குறையும் இல்லை. புலனடக்கத்தைப் போதிப்பவர்
புலனடக்கம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்
அல்லவா! 
     
அதே நேரத்தில் நாட்டின் தலைவர் என்ற முறையில்
அவரின் ஆளுமை, அவரின் தலைமைப் பண்புகளில்
ஜனநாயகம் என்பதற்கு எள்ளளவும் இடம் இருந்ததில்லை.
அவர் ஒரு சர்வாதிகாரியாகவே இருந்தார்;
சர்வாதிகாரியாகவே இறுதி வரை செயல்பட்டார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை சுமுகமான
ஒன்றாக அவரால் நடத்த இயலவில்லை. அவரின்
சர்வாதிகார மனப்பான்மையும் மாற்றுக குரல்களைக்
கேட்கத் தயாராகவே  இல்லாத அவரின் பிடிவாதமும்,
அவரை எதிர்த்து யாரும் எதுவும்  முடியாதவாறு
அவரின் தலையைச் சுற்றித் தெரியும் ஒளிவட்டமும்
அவரின் பெருந்தவறுகளுக்குக் காரணம் ஆகும்.
மிகக் குறைந்தபட்ச சேதாரத்துடன்கூட தேசப்
பிரிவினையை  அவரால் நடத்திக் காட்ட இயலவில்லை.
லட்சக் கணக்கான  மக்களின் பிணங்கள் மீது
நடந்துதான் அவரால் தேசப் பிரிவினையை நடத்த முடிந்தது.
He could not stop the killings. He was throughly incompetent and impotent.

இது காந்திக்கு சகல அம்சங்களிலும் படுதோல்வியான
ஒன்று. அவரின் ஆளுமைக்கும் தலைமைக்கும்
சித்தாந்தத்துக்குமான படுதோல்வி. அவரின் அஹிம்சை
என்னும் மூடத்தனம் நார் நாராகக் கிழிந்து தொங்கியது.

காந்தியின் இந்த இமாலயத் தவறை வரலாறு
மன்னிக்காது.அவர் மகாத்மாவாக நீடிக்க முடியாது.
துரதிருஷ்டம் பிடித்த கோட்ஸே அவரைப் படுகொலை
செத்திருக்கவிட்டால், அவர் வரலாற்றின் குப்பைத்
தொட்டியில் வீசி எறியப் பட்டிருப்பார். அல்லது
தன் கண் முன்பே தனது சித்தாந்தம் நடைமுறை
எல்லாமே கிழிந்து தொங்குவதைப் பார்க்கும் காந்தி
தன் வாழ்வைத் தானே முடித்துக் கொண்டிருப்பார்.

இன்று கோட்ஸேவின் புண்ணியத்தில் காந்தி
நிரந்தர மகாத்மாவாக போலி மகாத்மாவாக
வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  
********************************************   


 


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக