புதன், 9 அக்டோபர், 2019

தமிழர்களுக்கு கட்டிடக்கலை தெரியாது!
தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவன் தமிழன் அல்லன்!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
மிக்க இளைஞனாக இருக்கும்போதே ராபர்ட் கால்டுவெல்
தமிழ்நாட்டுக்கு வந்து விட்டான். அவன் தமிழ்நாட்டில்
வந்து இறங்கியபோது அவனுக்கு வயது 24 மட்டுமே.

அவன் தமிழ்நாட்டுக்கு வந்ததன் ஒரே நோக்கம்
கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்கே. வேறெந்த
நோக்கமும் அவனுக்கு இல்லை.

மொழி தெரியாமல் எப்படி மதத்தைப் பரப்ப முடியும்?
தமிழ் தெரியாமல் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப
முடியாது என்ற நிலையில் கால்டுவெல் தமிழைக்
கற்றான்.

எனினும் தமிழில் அவனுக்குப் போதிய புலமை
வாய்க்கவில்லை. அவன் எழுதிய திராவிட மொழிகளின்
ஒப்பிலக்கணம் என்ற நூலை அவன் தமிழில்
எழுதவில்லை..தமிழில் நூல் எழுதும் அளவுக்கு
அவனுக்குப் புலமை இல்லை. தன்னுடைய நூலை
அவன் ஆங்கிலத்தில்தான் எழுதினான்.

இந்த இடத்தில், கால்டுவெல்லைப் போன்றே கிறிஸ்துவ
மதத்தைப் பரப்ப தமிழ்நாட்டுக்கு வந்த இத்தாலிக்காரன்
கான்ஸ்டென்டைன் ஜோசப் பெஸ்கி என்பவனை
நாம் இங்கு ஒப்பு நோக்க வேண்டும். இவனே வீரமாமுனிவன் 
என்று அழைக்கப் பட்டான். இவன் கால்டுவெல்லை விட
அதிகமான தமிழ்ப் புலமை உடையவன். இவன் தமிழில்
தேம்பாவணி என்னும் செய்யுள் நூலை இயற்றினான்.

வீரமாமுனிவன் போன்று தமிழில் நூலியற்றும்
அளவுக்குப் புலமை பெறாதவன் கால்டுவெல்.
இவ்வளவு புலமைக் குறைபாடு உடைய இவன்தான்
தமிழ் இலக்கண நூலை எழுதி இருக்கிறான் என்பதே
கால்டுவெல்லின் அரைவேக்காட்டுத் தனத்தை
உணர்த்தும்.

ஒரு சில ஸ்தோத்திரச் செய்யட்களை கால்டுவெல்
தமிழில் இயற்றி இருக்கிறான் என்பதை நாம்
மறுக்கவில்லை. ஆனால் தன்னுடைய magnum opus என்று
கருதப்படும் ஒப்பிலக்கண நூலை அவன் தமிழில்
இயற்றவில்லை. அதற்கான புலமை அவனுக்கில்லை
என்பதும் ஒரு காரணம்.

தமிழன் காட்டு மிராண்டி என்று கூறிய கால்டுவெல்!
----------------------------------------------------------------------------
தமிழன் அறிவியலோ தொழில்நுட்பமோ அறியாதவன்.
அவனுக்குக் கட்டிடக் கலை பற்றி எதுவும் தெரியாது.
தஞ்சைப் பெரிய கோவிலை அவன் கட்டவில்லை.

இப்படியெல்லாம் தமிழர்களைப் பற்றி  இழிவாக
எழுதியவன் கால்டுவெல். தமிழர்கள் காட்டு மிராண்டிகள்.
இவர்கள் தங்கள் கோவில்களில் உயிர்ப்பலி
கொடுக்கிற காட்டு மிராண்டிகள் என்று எழுதியவன்
கால்டுவெல்.

கிராமக் கோவில்களில் கொடை நிகழ்வின்போது
கிடா வெட்டுவது தமிழர் பண்பாடு. இது இன்றளவும்
நீடித்து வரும் பண்பாடு. இது எவ்வாறு காட்டுமிராண்டித்
தனம் ஆகும்?

இதைச் சொல்லும் இந்த கால்டுவெல் யார்? மாட்டு
இறைச்சியையும் பன்றி இறைச்சியையும் விரும்பி 
உண்ணும் இந்தக் கால்டுவெல், கோவிலில் கிடா
வெட்டுவது காட்டுமிராண்டித்தனம் என்பானா?

திருநெல்வேலியில் வாழ்ந்தபோது அங்குள்ள நாடார்
சாதி மக்களை மிகவும் இழிவாக எழுதியவன்
கால்டுவெல். இவன் தமிழரின் நலம் விரும்பியவனா?

கால்டுவெல்லைப் போற்றும் எவன் ஒருவனும்
தமிழின், தமிழர்களின் கொடிய பகைவனே!
உண்மை உணருங்கள் தமிழர்களே!
**************************************************  
   
  
 இந்தக் கட்டுரையைப் படிக்கும் வாசக அன்பர்கள்
தேம்பாவணியில் ஏதேனும்  ஒரு செய்யுளை
இங்கு எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தேம்பாவணியைப் படிக்காமல் வீரமாமுனிவன்
பற்றி அறிந்திட இயலாது. எதையும் அறியாதவனால்
எதையும் விமர்சிக்க முடியாது.

கண்பட் டுறங்கக்  கண்டேனோ
கருணாகரனே களிக்கடலே
புண்பட் டுளையும் நெஞ்சிற்கோர்
பொருவா மருந்தே அருளன்பே
மண்பட் தலையும் கடலன்ன
மருளென் நெஞ்சிற் குயிர்நிலையே
எண்பட் டுயர்ந்த செல்வரசே
எம்மேல இறங்கும் தயையிதுவோ.
............தேம்பாவணி............    
 

மற்றவர்களோடு கம்யூனிஸ்டுகளைச் சேர்க்கக்
கூடாது. அவர்கள் வரலாற்றைப் பொருள்முதல்வாதக்
கண்ணோட்டத்தில் அணுகக் கூடியவர்கள்.

இல்லை; இது விருத்தம். விருத்தம் இயற்றுவதில்
கம்பன்  தலைசிறந்தவன். விருத்தமெனும் ஒண்பாவில்
உயர் கம்பன் என்று அவன் புகழப் படுகிறான்.


சங்க இலக்கியங்களுக்கு மிகவும்  பின்னர் வந்த
இலக்கியங்களில் பெரிதும் விருத்தமே
கையாளப் படுகிறது.

இச்செய்யுள் நான்கு அடிகளைக் கொண்டது.
இங்கு இடமின்மை கருதி, நான்கை எட்டாக
எழுதி உள்ளேன். நேரிசை  ஆசிரியப்பாவில்
ஈற்றயலடி முச்சீராய் அமைதல் வேண்டும்.

நிற்க. நால்வகைப் பாக்களை நாம் அறிவோம்,
(வெண்பா அகவற்பா கலிப்பா வஞ்சிப்பா)
அது போல மூவகைப் பாவினங்களையும்
அறிந்திருக்க வேண்டும்.
பாவகை என்பது வேறு; பாவினம் என்பது வேறு.
பாவினம் மூன்று: தாழிசை, துறை, விருத்தம்.

இவ்விரண்டுக்கும் இலக்கணம் மாறுபடும்.
எனவே தேம்பாவணிச் செய்யுள் விருத்தமே.
.     


 
கேள்வி-1: மேற்கூறிய தேம்பாவணிச் செய்யுள்
வெண்பாவா? அகவற்பாவா? நல்லதே
வேறு எதுவுமா? வாசகர்கள் விடையளிக்க வேண்டும்.


இதெல்லாம் அவரின் ஏமாற்று! இங்கிலாந்தில்
அவரின் இந்த நூல் அப்படியே கிடைக்கிறது.




    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக