வியாழன், 17 அக்டோபர், 2019

ராஜீவைக் கொன்றது விடுதலைப் புலிகளே!
ஆன்டன் பாலசிங்கம் ஒப்புதல் வாக்குமூலம்!
----------------------------------------------------------------------
விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு
என்று உலகுக்கு உணர்த்துவத்துகின்ற ஒரே ஒரு
வேலையை மட்டும் சிங்கள அரசு சரியாகச் செய்தது.
புலிகள் நிகழ்த்திய பல்வேறு படுகொலைகள் பற்றி
உலக நாடுகளில் முக்கியமான நாடுகளுக்கு
சிங்கள அரசால் எடுத்துச் சொல்லப் பட்டது.

லட்சுமணன் கதிர்காமர் என்ற இலங்கை அமைச்சர்
இதில் பெருமுயற்சி எடுத்தார். அவரும் படுகொலை
செய்யப் பட்டார்.

இதன் விளைவாக உலகின் பல நாடுகளில் புலிகள்
இயக்கம் தடை செய்யப்பட்டது. ஐரோப்பா முழுவதும்
புலிகளைத் தடை செய்தது.

இதனால் புலிகளுக்குக் கிடைத்து வந்த வெளிநாட்டு
உதவிகள், ராஜதந்திர ஆதரவு ஆகிய அனைத்தும்
தடைப்பட்டன. புலிகள் இயக்கம் ஒரு முட்டுச்
சந்தில் போய் நின்றது.

இந்தத் தேக்க நிலையை உடைத்தால் மட்டுமே
புலிகள் இயக்கம் ஜீவித்திருக்க முடியும் என்ற
நிலை ஏற்பட்டது. எந்த வெளிநாட்டில் இருந்தும்
ஆதரவு கிடைக்காத நிலையில், ஏற்கனவே உதவி
செய்த நாடுகளும் கைவிரித்து விட்ட நிலையில்
புலிகளுக்கு ஒரே ஒரு வாய்ப்புதான் இருந்தது.
அதுதான் இந்தியாவின் உதவியைப் பெறுவது.

ஆனால் இந்தியாவுடன் இணக்கம் கொள்வதற்கு
பெரும் முட்டுக்கட்டையாக ராஜிவ் படுகொலை
இருந்தது. இந்நிலையில் புலிகள் அமைப்பின்
தத்துவஞானியாகத் திகழ்ந்த ஆன்டன் பாலசிங்கம்
(Anton Balasingam, theoretician, LTTE) ஒரு முடிவை எடுத்தார்.

ராஜீவைப் படுகொலை செய்ததை ஒத்துக்கொண்டு
மன்னிப்புக் கேட்பதன் மூலமே இந்தியாவுடன்
உறவு கொண்டு உதவி பெற முடியும் என்ற நிலையை
உணர்ந்த ஆன்டன் பாலசிங்கம் ராஜிவ்
படுகொலைக்காக புலிகளின் சார்பில் பகிரங்கமாக
மன்னிப்புக் கோரினார்.

இது நடந்தது 2006ல். தமது மறைவுக்குச் சில மாதம்
முன்னதாக, புலிகள் அமைப்பைக் காப்பாற்றும்
நோக்கில் பாலசிங்கம் மன்னிப்புக் கோரினார்.

பாலசிங்கம் கூறியது:-
---------------------------------
1) ராஜிவ் படுகொலை என்பது ஒரு பெரும் வரலாற்றுச்
சோகம் (A monumental and historical tragedy).
2) அதற்காக நாங்கள் (புலிகள்) பெரிதும் வருந்துகிறோம்.
(for which we deeply regret)
3) இந்தியா மிகவும் பெருந்தன்மையுடன் இத்தவற்றை
மன்னித்து பழைய கசப்பை மறந்து இனப்
பிரச்சசினையை புதிய கோணத்தில் அணுக வேண்டும்.
(Calls upon India to be magnanimous and to put the past behind and to
approach the ethnic question in a new perspective).  
(பார்க்க: NDTV லண்டன் டிவிக்கு ஆன்டன் பாலசிங்கம்
அளித்த பேட்டி).

1991ல் நடந்த ராஜிவ் படுகொலையை நாங்கள்
செய்யவில்லை  என்று தொடக்கத்தில் புலிகள்
மறுத்திருந்த போதிலும், 2006 வாக்கில் அதை
புலிகள் அமைப்பின் தத்துவஞானியான ஆன்டன்
பாலசிங்கம் ஒப்புக் கொண்டார்.

இதைச் சில ஆண்டுகளுக்கு முன்பே நான் கூறினேன்.
எவரும் அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
ஈழத்தரகர்கள் வைகோவும் நெடுமாறனும் கள்ள
மௌனம் சாதித்தனர்.

ஆக புலிகள்தான் ராஜீவைக் கொன்றனர் என்ற
உண்மை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக மறைக்கப்
பட்டிருந்தது. ஈழ ஆதரவு முகாமைப் பொறுத்து
ஒரு சிலர் மட்டுமே அறிந்த உண்மையாக இருந்தது.
அவ்வாறு உண்மை அறிந்த பலரும் தாங்கள்
அறிந்த உண்மையைப் பொதுவெளியில் சொல்லவில்லை.

தற்போது சீமான் உண்மையைக் கூறியதன் மூலம்
ஈழ ஆதரவு முகாமில் இருந்து வெளிவரும் முதல்
உண்மையாக அது இருக்கிறது.
**************************************************** 
உச்சநீதி மன்றத் தீர்ப்பும் கார்த்திகேயனின்
SIT குழுவும் புலிகள்தான் கொலை செய்தனர் என்று
கூறியதை என்னால் ஏற்க இயலவில்லை.
இதைத்தவிர்த்த பிற reliable sources மூலம் பின்னர்
ஆதாரம் கிடைத்தது. புலிகள்தான் கொன்றார்கள்
என்பதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள்
கிடைத்தன.

ராஜிவ் கொலை மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஈழப்போர்
குறித்தும் உறுதியான மெய்யான ஆதாரங்கள்
கிடைத்து வருகின்றன. ஒவ்வொன்றும் பிற
ஆதாரங்களால் corroborate ஆகின்றன.

எனவே ஆன்டன் பாலசிங்கம் சொன்னது முழுமுற்றான
உண்மை. அதை எவரும் ஏற்காமல் இருக்க முடியாது.
ஈழம் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த
உண்மைகள்  இன்றளவும் மறைக்கப்பட்டே
வருகின்றன. அவற்றை வெளியிட இருக்கிறேன்.

கொலையில் பெரும்பங்குள்ள சாமியார் இறந்து
விட்டார். உயிருடன் இருக்கும் சாமியின் பங்கு குறித்து
ஆதாரங்களைத் தேடி வருகிறேன். உருப்படியாக
எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

வர்மா கமிஷன் அறிக்கை பொதுவெளியில்
இருந்து அகற்றப்பட்டு விட்டது. சிதம்பரம்
தன் பங்கிற்கு வேண்டுமென்றே சில
கோப்புகளைத் தொலைத்து விட்டார்.


புலிகள் அமைப்பு தற்போது இல்லை. பிரபாகரனும்
உயிருடன் இல்லை. எனவே
யார் வேண்டுமானாலும் புலிகளின் சார்பாகப்
பேச இயலும்.

தமிழ்நாட்டில் மெய்யான ஈழ ஆதரவு என்பது
எளிய தமிழ் மக்களிடம் மட்டுமே உள்ளது.
நெடுமாறன் வைகோ சீமான் என்று அனைவரும்
ஈழப் பிழைப்புவாதிகளே.


ஈழப் பிழைப்புவாதிகள் அனைவரையும் சீமான் பொய்
உட்பட மிக்க கடுமையாக அம்பலப்படுத்தி
வருகிறேன். இதைச் செய்ய யாரும் தயாராக இல்லை.

அதே நேரத்தில் ஏனைய பிழைப்புவாதிகள்
புலிகள் ராஜீவைக் கொல்லவில்லை என்றும்
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும்
போய் சொல்லிப் பிழைப்பு நடத்துகின்றனர்.

இந்த நேரத்தில் சீமான் ஏனைய பிழைப்புவாதிகளிடம்
இருந்து மாறுபட்டு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு,
முதல் முறையாக உண்மையைச் சொல்லும்போது
அதை ஏன் நாம் எதிர்க்க வேண்டும்?

ஈழப்பிழைப்புவாதிகளின் முகாம் இன்று
பிளவுபட்டு நிற்கிறது என்பதை வரவேற்காமல்
இருக்க முடியுமா? இது சீமானை ஆதரிப்பதாக
ஆகி விடுமா?

இப்பொருளில் நான் எழுதிய எல்லாப் பதிவுகளையம்
படிக்க வேண்டும்.சீமான் ஏன் இப்படிச் சொல்கிறார்
என்பதை அம்பலப்படுத்தி ஏற்கனவே நேற்று ஒரு
கட்டுரை எழுதி உள்ளேன். அதை முதலில் படிக்கவும்.
தடித்தஎழுத்துப் பதிவில் ஒரு வரி மட்டும்தான்
எழுத முடியும். எனவே கட்டுரையைப் படிக்கவும்.


பரப்பன அக்ரகார சிறையில்
12 கோடி செலவில் தீபாவளி கொண்டாட்டம்!
50 மெட்ரிக் டன் சுவீட்களை
ஆர்டர் செய்த சசிகலா!
  



 


  

 :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக