புதன், 2 அக்டோபர், 2019

தமிழர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி!
8000 அதிகாரிகள் பணியிடங்களில் 300 பதவிகள் மட்டுமே!
உபி, பீகார், மபி, ராஜஸ்தான் ஆட்களுக்கு 6000 பதவிகள்!
39 எம்பிக்களில் எவரும் கேட்கவில்லை!
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
மத்திய அரசு அதிகாரிகள் பணி இடங்களுக்கு SSC
எனப்படும் STAFF SELECTION COMMISSION என்னும்
அமைப்பு தேர்வு நடத்தி ஆள் எடுக்கிறது.

ஆண்டுதோறும் ஆள் எடுப்பு (recruitment) நடக்கிறது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய employer மத்திய அரசுதான்.
எழுத்தர் முதல் அதிகாரிகள் வரையிலான இடங்களுக்கு
SSC ஆளெடுக்கிறது. அவற்றில் இரண்டாம் நிலை அதிகாரிகள்
(Group B oficers) பதவிக்கான தேர்வு SSC CGL எனப்படும்.
இது பட்டதாரிகள் மட்டுமே எழுதத் தகுதியுள்ள தேர்வு.
(SSC = Staff Selection Commission; CGL = Combined Graduate Level).
இது குறித்த எமது முந்திய கட்டுரையைப் படித்தீர்களா?
படியுங்கள். அதன் தொடர்ச்சிதான் இது!

இந்த இரண்டாம் நிலை அதிகாரிகளின் (Group B officers)
பணியிடங்கள் யாருக்குக் கிடைக்கின்றன என்று
தெரியுமா? யாருக்காவது தெரியுமா? தெரியாது.

ஒரு புள்ளி விவரத்தைப் பார்ப்போம். சற்றுத் தோராயப்
படுத்தி இந்தப் புள்ளி விவரத்தைத் தருகிறேன். ஒரிஜினல்
புள்ளி விவரத்தை அப்படியே கொடுத்தால்
அனைவராலும் புரிந்து கொள்ள இயலாது.

8000 அதிகாரிகளுக்கான இடங்களில் உபி, பீகார்,
ராஜஸ்தான், மபி ஆகிய நான்கு இந்தி பேசும்
மாநிலங்களின் பட்டதாரிகள் 6000 பேர் தேர்வில்
வெற்றி பெற்று பணி நியமனம் பெற்றுள்ளனர்.

ஏழு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வெறும் 40 பேர்
மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர்.  தமிழ்நாட்டில் இருந்து
300 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இந்த 300
பேருமே தமிழ்நாட்டில் உள்ள இந்திக்காரர்கள்.

8000 அதிகாரிகளில் 6000 பேர் இந்திக்காரன். சரி.
இந்த 6000 பேரும் SSC CGL தேர்வில் எப்படி வெற்றி
பெற்றார்கள் தெரியுமா?

உபி, பீகார் மாநிலங்களில் Mass copying என்பது மிகவும்
சகஜம். பீகாரில் இன்னும் மோசம். வாக்குச் சாவடிகளைக்
கைப்பற்றுவது போல, தேர்வு மையங்களைக்
கைப்பற்றி mass copying நடக்கும். பயிற்சி மையத்தில்
இருந்து நேரடியாக ஆசிரியர்களே தேர்வறைக்கு வந்து,
தேர்வர்களுக்கு விடையை அளித்து எழுதச்
சொல்வது அங்கெல்லாம் சர்வ சகஜம். குறிப்பாக
புழுவினும் இழிந்த லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி
ஆட்சியின்போது சகல கயமைத் தனங்களும்
எதிர்ப்பே இல்லாமல் நடந்தன.

SSC நடத்தும் தேர்வு அகில இந்தியத் தேர்வு. உண்மையில்
இது தேசியத் தேர்வு. எனவே எல்லா மாநிலங்களுக்கும்
பணியிடங்களில் உரிய பங்கு தரப்பட வேண்டும்.
எங்கள் காலத்துப் பட்டதாரிகள் இந்தத் தேர்வை
எழுதிய காலத்தில் (1970களில்) மாநிலவாரியான
ஒதுக்கீடு இருந்தது. பின்னர் உச்சநீதிமன்றம்
அதை ரத்து செய்தது. தற்போது வரை மாநிலவாரியான
ஒதுக்கீடு இல்லை.

ஒரு தேசியத் தேர்வு மூலம் ஆளெடுக்கும்போது
எல்லா மாநில மக்களுக்கும் உரிய பங்கு
கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
அது முடியாது என்றால், வட இந்திய மாநிலங்களில்
நடக்கும் SSC CGL தேர்வுகளில் முறைகேடு
நடப்பதைத் தடுக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற மேற்பார்வையில், நீதிமன்றப்
பார்வையாளர்கள் முன்னிலையில் இந்தத் தேர்வுகள்
நடத்தப்பட வேண்டும். அப்படி நியாயமாக நடத்தப்
பட்டாலே, அந்தந்த மாநிலத்துக்கு உரிய பங்கு
கிடைத்து விடும்.

இதற்கு தமிழக எம்பிக்கள் குரல் கொடுப்பார்களா?
39 எம்பிக்களில் எவர் ஒருவருக்காவது நிலைமை
இப்படி இருப்பது தெரியுமா? தெரியாது! தற்குறிகளை
அல்லவா நாம் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு
அனுப்பி உள்ளோம்!

தமிழகப் பட்டதாரிகள் இந்தத் தேர்வை எழுதுவதில்
ஆர்வம் காட்டுவதில்லை. மத்திய அரசு சார்ந்த
கல்வி நிறுவனங்களில் படிப்பது, தேர்வுகளை எழுதுவது
ஆகியவற்றுக்கு எதிரான ஒரு மனநிலை இங்கு
சுயநல சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு
உள்ளது. இந்தப் பொது உளவியலால் தமிழகப்
பட்டதாரிகள் வெகுவாகப் பாதிக்கப் படுகின்றனர்.
தேர்வு என்றாலே ஒரு பெரும் தாழ்வு
மனப்பான்மையையும் தோல்வி மனப்பான்மையையும்
திராவிட இயக்கம் இங்கே உருவாக்கி வைத்துள்ளது.

1970 முதல் இன்று வரை இந்த எதிர் மனநிலை
(Negative attitude) தமிழ்நாட்டில் கோலோச்சுகிறது.
தேர்வுகள் முறைகேடு இல்லாமல் நியாயமாக
நடந்து, தமிழகப் பட்டதாரிகளும் முழுவீச்சில்
இத்தேர்வில் பங்கேற்றால், 8000 இடங்களில்
5000 இடங்களைத் தமிழகம் கைப்பற்றும் என்று
என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியும்.

(இந்த இடத்தில் ஒரு உண்மையையும் கூடவே
சொல்ல வேண்டும். தமிழ் மீடியத்தில் படித்த
பட்டதாரிகளால் இத்தேர்வில் வெற்றி பெறுவது
கடினம் அல்லது அறவே இயலாது).

25 வயதில் Group B அதிகாரியாக நியமனம் பெறும்
ஒரு இளைஞன் 40 வயதிலேயே முதல் நிலை
அதிகாரியாக (Group A officer) ஆகி விடுவான்.
இவர்களே இந்திய அரசின் அனைத்து நிலைகளிலும்
முடிவுகளை எடுக்கும் அதிகாரிகளாக வருவார்கள்.
இவ்வளவு அதிகாரம் உள்ள இடத்தில், தமிழனுக்கு
இடமில்லை என்பதை நியூட்டன் அறிவியல்
மன்றம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இந்த
நிலையை மாற்றுவோம்.

என்னால் 1000 பட்டதாரிகளை ஓரிடத்தில்
சேர்த்து வைத்து, அவர்களுக்கு வகுப்பு எடுத்து,
சொல்லிக் கொடுத்து அவர்களில் 60 பேரையாவது
SSC CGL தேர்வில் பாஸ் பண்ண வைக்க முடியும்.
என்னை விமர்சிக்கும் காழ்ப்புணர்ச்சிக்
கபோதிகளால் என்ன செய்ய முடியும்?
கூத்தாடி உதயநிதிக்கு போஸ்டர் ஒட்டவும்
கட்டவுட் வைக்கவும் கூட்டிச் சென்று
பட்டதாரிகளை நாசப்படுத்த மட்டுமே முடியும்!
---------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக