கீழடி தமிழர் நாகரிகம் பற்றி
வில்லர்டு லிபி என்ன கூறுகிறார்?
வில்லர்டு லிபி என்ன கூறுகிறார்?
வில்லர்டு லிபி யார் என்று தெரியாதவன்
கீழடி அகழாய்வு பற்றிப் பேச அருகதையற்றவன்!
---------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்------------------------------------------------
கீழடி என்பது தமிழர் நாகரிகம் ஆகும். அது ஒருபோதும்
திராவிட நாகரிகம் ஆகாது. ஏனெனில் திராவிடம் என்று
ஒரு மொழியோ இனமோ எந்தக் காலத்திலும்
உலகின் எந்தவொரு இடத்திலும் இருந்ததே இல்லை.
அதற்கான எந்தவொரு அறிவியல் தடயமும் இல்லை.
கீழடி நாகரிகம் குறித்து வில்லர்டு லிபி என்ன கூறுகிறார்
என்பது முக்கியமானது. யார் இந்த வில்லர்டு லிபி?
வில்லர்டு லிபி (Willard Libby 1908-1980) அமெரிக்கப்
பேராசிரியர்; வேதியியல் பேராசிரியர்.He was a professor
of Physical Chemistry. இந்த வாக்கியத்தைத் தமிழில்
எப்படி எழுதுவது?
இவர் 1960ல் வேதியியலில் நோபல் பரிசு பெற்றவர்.
இவருடைய உலகப்புகழ் பெற்ற கண்டுபிடிப்பான
ரேடியோ கார்பன் டேட்டிங் (Radio Carbon Dating) என்ற
முறைக்கு நோபல் பரிசு கிடைத்தது.
இந்த ஆண்டு UPSC தேர்வில் வில்லர்டு லிபி குறித்தும்
ரேடியோ கார்பன் டேட்டிங் குறித்தும் கேள்வி
வரலாம். SSC தேர்விலும் கேள்வி வரலாம். நியாயமாக
TNPSC தேர்விலும் கண்டிப்பாகக் கேள்வி வர
வேண்டும். ஆனால் கேள்வித்தாள் தயாரிக்கும்
முட்டாள் தமிழ்ப் பண்டிட்டுகள் இந்தக் கேள்வியைக்
கேட்காமல் போகலாம். அவனுக்குப் புரிந்தால்தானே
கேட்பான்?
ஒரு அகழாய்வில் கிடைத்த ஒரு பொருளின்
வயது என்ன, அதன் தொன்மை என்ன என்று
கண்டறிய உதவும் முறையே ரேடியோ கார்பன் டேட்டிங்.
கார்பன் என்று ஒரு தனிமம் உள்ளது. இதன் அணு எண்
என்ன? கேள்வி கேட்ட அடுத்த நொடியில் பதில்
வர வேண்டும். வராது. எனவே நானே சொல்கிறேன்.
கார்பனின் அணு எண் 6. அதாவது கார்பனின்
உட்கருவில் 6 புரோட்டான்கள் உள்ளன. சரி, எத்தனை
நியூட்ரான்கள் உள்ளன?
பிரதான கார்பனில் 6 புரோட்டானும் 6 நியூட்ரானும்
உண்டு. இதுதான் இயற்கையில் 99 சதம் கிடைப்பது.
அதே நேரத்தில், கார்பனுக்கு சில ஐசோடோப்புகள்
(isotopes) உண்டு. அதில் ஒன்று கார்பன்-14 எனப்படும்
ஐசோடோப் ஆகும். இந்த கார்பன்-14ல் 6 புரோட்டானும்
8 நியூட்ரானும் உண்டு.
இந்த கார்பன்-14 ஐசோடோப்புக்கு கதிரியக்கத்
தன்மை உண்டு (It is radio active). வில்லர்டு லிபி
என்ன கண்டறிந்தார் எனில், தாவரங்களும்
விலங்குகளும், மனிதர்களும் இறந்து போன உடனே,
இந்த கார்பன்-14ஐ உட்கொள்வது நின்று விடுகிறது
என்று கண்டறிந்தார்.
ஒரு நகரமோ வாழிடமோ திடீரென வந்த பூகம்பத்தால்
பூமிக்குள் புதையுண்டு போனது என்று வைத்துக்
கொள்ளுங்கள். 1000 வருடம் கழித்து ஓர் அகழ்வாய்வின்
மூலம் அந்த நகரம் கிடைக்கிறது. அங்கு ஒரு
காளைமாட்டின் எலும்புகள் கிடைக்கின்றன.
இந்த எலும்பைக் கொண்டு அந்த மாடு எப்போது
புதையுண்டது என்று கண்டறிய ரேடியோ கார்பன்
டேட்டிங் முறை உதவும். இறந்து போன பிறகு
அந்த மாடு கார்பன்-14ஐ உட்கொள்ள இயலாது.
எனவே அதன் உடலில் இருக்கும் கார்பன்-14ஐ
வைத்து அதன் வயதை, தொன்மையைக்
கண்டறியலாம்.
வில்லர்டு லிபியின் கண்டுபிடிப்புக்குப் பிறகு
உலகெங்கும் அகழ்வாய்வில் ரேடியோ கார்பன்
டேட்டிங் பயன்படுகிறது. ஒரு பொருளின்
தொன்மையைத் துல்லியமாகக் கண்டறிய
முடிகிறது.
எனவே கீழடி அகழ்வாய்வு மட்டுமல்ல, உலகில்
எங்கு அகழாய்வு நடந்தாலும் வில்லர்டு லிபி
வந்து விடுவார். அவர் 1980ல் இறந்து போய்
இருக்கலாம். அனால் அவர் கண்டுபிடித்த
ரேடியோ கார்பன் டேட்டிங் முறைக்கு மரணம் இல்லை.
எனவே எந்த அகழ்வாய்வு ஆயினும் வில்லர்ட் லிபி
என்ன சொல்கிறார் என்பதே வேதவாக்கு! அதாவது
அவரின் ரேடியோ கார்பன் டேட்டிங் முறை என்ன
சொல்கிறது என்பதே வேதவாக்கு!
இந்த முக்கியமான அறிவியல் கட்டுரையைப் படியுங்கள்.
வில்லர்ட் லிபி பற்றி எதுவுமே தெரியாத எவர்
ஒருவரும் கீழடி பற்றிப் பேசும் அருகதை
உடையவர் அல்லர்.
*************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக